From Wikipedia, the free encyclopedia
நாடியா எலனா கொமனட்சி (உருமானிய உச்சரிப்பு: [ˈnadi.a koməˈnet͡ʃʲ]; பிறப்பு: நவம்பர் 12, 1961) உருமேனிய சீருடற்பயிற்சியாளரும், மொண்ட்ரியால், கியூபெக், கனடாவில் நடந்த 1976 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவரும் ஆவார். மேலும் இவரே சீருடற்பயிற்சியில் கச்சிதமான 10 (perfect score of 10) என்னும் இலக்கை அடைந்த முதல் நபர் ஆவார். இவ்விலக்கை அடையும் போது இவருக்கு வயது 14 ஆகும். பின்னாட்களில் ஒலிம்பிக் போட்டிக்கான வயது வரம்பு 18-ஆக உயர்த்தப்பட்டதினால், இவ்விலக்கை அடைந்தவருள் மிக இளையவர் என்னும் பட்டத்தை இவர் நிரந்தரமாகப் பெற்றார்.
தனித் தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப் பெயர் | நாடியா எலனா கொமனட்சி (Nadia Elena Comăneci) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | உருமேனியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | நவம்பர் 12, 1961 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறந்த இடம் | ஓன்ஷ்தி, உருமேனியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வகை | பெண்கள் கலையாற்றல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயில் களம் | தேசிய பயிற்சி மையம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னாள் பயிற்சியாளர்(கள்) | பெலா கார்யோலி, மார்தா கார்யோலி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நடன அமைப்பாளர் | கேசா போசார் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர் கொண்ட கலைகள் | கொமனட்சி சால்தோ (சமமில்லா தொங்கு கம்பம்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஓய்வு | 1981 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
1980 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் உலகின் தலை சிறந்த சீருடற்பயிற்சியாளருள் ஒருவராக கருதப்படுகின்றார்.[1][2][3]
கொமனட்சி, விளையாட்டுத் துறையிலிருந்து 1981 ஓய்வு பெற்றார். 1984இல் புக்கரெஸ்டில் நடந்த ஒய்வு பெறும் நிகழ்ச்சியில் அப்போதைய பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அவைத்தலைவர் பங்கு பெற்றார்.[4]
கொமனட்சி, 2000ஆம் ஆண்டு, 20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த விளையாட்டு வீரராக, லாஉரஸ் உலக விளையாட்டு அகடமியால் தேர்வு செய்யப்பட்டார்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.