நன்னிலம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
நன்னிலம், (Nannilam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, நன்னிலம் வட்டம் மற்றும் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிள்ளைக்குப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது. நன்னிலம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
நன்னிலம் | |||||||
ஆள்கூறு | 10°53′N 79°37′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருவாரூர் | ||||||
வட்டம் | நன்னிலம் வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கே. சிவசவுந்திரவள்ளி, இ. ஆ. ப [3] | ||||||
பேரூராட்சி மன்றத் தலைவர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | நன்னிலம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
12,618 (2011[update]) • 986/km2 (2,554/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 12.80 சதுர கிலோமீட்டர்கள் (4.94 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/nannilam |
நன்னிலம் பேரூராட்சி, திருவாரூருக்கு வடக்கே 16.5 கிமீ தொலைவில் உள்ளது. தொடருந்து நிலையம் நன்னிலத்தில் உள்ளது.
12.80 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,199 வீடுகளும், 12,618 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
இவ்வூரின் அமைவிடம் 10.88°N 79.62°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7 மீட்டர் (22 அடி) உயரத்தில் இருக்கின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.