From Wikipedia, the free encyclopedia
தொல்பொருள் அருங்காட்சியகம், தெலுங்காணா அல்லது ஹைதராபாத் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது ஹைதராபாத்தில் உள்ள மிகப் பழமையான அருங்காட்சியகம் ஆகும்.
![]() அருங்காட்சியகக்கட்டடம் | |
![]() | |
நிறுவப்பட்டது | 1930 |
---|---|
அமைவிடம் | பப்ளிக் கார்டன்ஸ், நம்பள்ளி, ஹைதராபாத், ஆந்திரப்பிரதேசம், தெலுங்காணா, இந்தியா |
பொது போக்குவரத்து அணுகல் | நம்பள்ளி மெட்ரோ ஸ்டேஷன் |
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹென்றி கௌசன்ஸ் சன்ஸ் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த இடத்தை முதன்முதலில்ஆய்வு செய்தார். 1940 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தின் நிஜாமின் மேற்பார்வையின்கீழ் இங்கிருந்த மண் மேட்டுப் பகுதி அகழாய்வு செய்யப்பட்டது. அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டபொருட்கள் அதே இடத்தில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 1952ஆம் ஆண்டில், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள்இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தற்போதைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.[1]
1930 ஆம் ஆண்டில், ஹைதராபாத்தின் மாநில பாரம்பரியத்தை பாதுகாக்க விரும்பிய VII மிர் ஒஸ்மான் ஆயில் கான், இந்த அருங்காட்சியகத்திற்கு ஹைதராபாத் அருங்காட்சியகம் என்று பெயர் சூட்டினார்.
இந்த அருங்காட்சியகத்திற்கு 1960 ஆம் ஆண்டில் ஆந்திர மாநில தொல்பொருள் அருங்காட்சியகம் என்று பெயர் சூட்டப்பட்டது.[2]
2008 ஆம் ஆண்டில், நிஜாமுக்குச் சொந்தமான ஒரு வாளும், பிற கலைப்பொருட்களுக்கும் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.[3][4]
2014 ஆம் ஆண்டில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்குப் பின்னர் இந்த அருங்காட்சியகம் தெலுங்கானா மாநில தொல்பொருள் அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது.
முன்னர் ஹைதராபாத் அருங்காட்சியகம் என்றும் ஆந்திரப்பிரதேச மாநில தொல்பொருள் அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்பட்ட தெலுங்கானா தொல்பொருள் அருங்காட்சியகம் பப்ளிக் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. ஹைதரபாத்தில் மட்டுமன்றி தென்னிந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த அருங்காட்சியகம் கருதப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசமான பலவகையான கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் அஜந்தா ஓவியங்களின் மாதிரியும் அடங்கும்.இதனைக் காட்சிப்படுத்துகின்ற பெருமையுடைய அருங்காட்சியகம் இது மட்டுமேயாகும். இத்துடன் பல காலங்களைச் சேர்ந்த காட்சிப்பொருட்கள் இங்கு காணப்படுகின்றன. உலோக சிலைகள், போர்க்கருவிகள், நாணயங்கள், கற்சிற்பங்கள், சுவடிகள், நவீன கால ஓவியங்கள் உள்ளிட்ட பலவற்றிக்கு தனித் தனியாகக் காட்சிக்கூடங்கள் உள்ளன. புத்தர் சிற்பங்களுக்காக தனிக் காட்சிக்கூடம் உள்ளது. சாளுக்கிய மற்றும் விஜயநகர் காலத்தைச் சேர்ந்த இந்து சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன.[5]
இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய காட்சிப்பொருளாக அமைந்தது இளவரசி நைஷுவின் எகிப்து நாட்டு மம்மி ஆகும். இது 1930 ஆம் ஆண்டில் ஹைதராபாத்திற்கு நசீர் நவாஸ் ஜங் என்பவரால் கொண்டு வரப்பட்டது. நசீர் நவாஸ் ஜங், ஆறாம் ஆசாப் ஜாவின் மருமகன் ஆவார்., அவர் அதை ஆறாம் ஆசாப் ஜாவிற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர் அதனை அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.[6] அவர் அதை 1000 பவுண்டுகளுக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.[7] இது இந்தியாவில் காணப்படுகின்ற ஆறு எகிப்திய மம்மிகளில் ஒன்றாகும், பிற மம்மிகள் லக்னோ, மும்பை, வதோதரா, ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தாவில் உள்ளன.[8]
முன்பு மோசமடைந்து கொண்டிருந்த நிலையில் இருந்த மம்மி, 2016ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டு ஆக்ஸிஜன் புகாதப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.[9][10]
கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெரிய புத்தர் காட்சியறை இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நிஜாம் மற்றும் ககாட்டியா வம்சத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான தொல்பொருள் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.