தியாகராய நகர்
From Wikipedia, the free encyclopedia
தியாகராய நகர் அல்லது தி.நகர் என்பது சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இது ஒரு முக்கியமான வணிகப்பகுதி. நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திராவிட இயக்கத்தவரில் முக்கியமானவரும் நீதிக்கட்சியைத் ஆரம்பித்தவர்களில் ஒருவருமான சர் பி.தியாகராயாவின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது.
தி. நகர் | |||
— நகர்ப்பகுதி — | |||
ஆள்கூறு | 13°02′30″N 80°14′03″E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | சென்னை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
பாண்டி பஜாரும், உஸ்மான் சாலையும், ரங்கநாதன் தெருவும் தான் தி.நகரின் மிக முக்கியமான வணிகமையங்கள். ஆடைகள், அணிவகைகள், விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இங்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும். இப்பகுதியில், பல்வேறுவகைச் சேலைகள் உட்பட்ட ஆடைகள், தங்க, வைர நகைகள் முதலியவற்றுக்கான, பல மாடிகளைக் கொண்ட மிகப் பெரிய விற்பனை நிலையங்களுடன், நடைபாதைக் கடைகளும் செயற்படுகின்றன. விடுமுறை நாட்களிலும், பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களிலும் இந்தப்பகுதியில் கூட்டம் நிரம்பி வழியும்.
திருமணம் முதலியவற்றுக்காக ஆடை அணிகள் வாங்குவதற்காகப் பலர் தொலை தூரங்களிலிருந்தும் இப் பகுதிக்கு வருகிறார்கள். உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கூடச் சிறப்புத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்குத் தமிழ் மக்கள் இப்பகுதிக்கு வருவதைக் காணமுடியும். இதனால் பல தங்கு விடுதிகளும், உணவு விடுதிகளும் இங்கே பெருமளவில் உள்ளன.
தியாகராஜ நகரில் பல புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் உள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.