From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022, (2022 Tamil Nadu urban local elections) தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, 2022 பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.[1][2] இத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னங்களைப் பயன்படுத்தலாம். இத்தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் 2022 மார்ச்சு 2 அன்று பதவி ஏற்பர். 2022 மார்ச் 4 அன்று மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் மன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவார்கள். [3]
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர்களையும், 142 நகராட்சிகளில் உள்ள 3,843 வார்டு உறுப்பினர்களையும், 487 பேரூராட்சிகளில் உள்ள 7,621 வார்டு உறுப்பினர்களையும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய 2022 பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் கட்சி சின்னங்களை பயன்படுத்தலாம்.
தேர்தல் அட்டவணை[4] | |
---|---|
வேட்பு மனு தாக்கல் | சனவரி 28 - பிப்ரவரி 4 |
வேட்பு மனு பரிசீலனை | பிப்ரவரி 5 |
வேட்பு மனு திரும்பப் பெறுதல் | பிப்ரவரி 7 |
தேர்தல் நாள் | பிப்ரவரி 19 |
வாக்கு எண்ணிக்கை நாள் | பிப்ரவரி 22 |
வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நாள் & முதல் கூட்டம் | பிப்ரவரி 24 |
மேயர், துணை, தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு நாள் | மார்ச் 4 |
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள் மற்றும் 487 பேரூராட்சிகளில் மொத்தம் 12,607 வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. திமுக கூட்டணியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு, சிபிஐ, சிபிஐ (மார்க்சிஸ்ட்) தவிர்த்த பிற கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிட்டது.
திமுக கூட்டனி மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. மேலும் பெரும்பான்மையான நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை திமுக கூட்டணி கட்சி கைப்பற்றிது. அதிமுக மற்றும் பாஜக கட்சிகளும் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.[5]
மாநகராட்சியில் ஒரு வார்டிலும், நகராட்சியில் 18 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 196 வார்டுகளிலும் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாநகராட்சி மற்று நகராட்சி வார்டுகளில் தலா ஒரு இடத்திலும், பேரூராட்சி வார்டுகளில் 4 இடங்களிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பேரூராட்சி வார்டுகளில் 12 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அரசியல் கட்சி | மாநகராட்சி வார்டுகள் (வாக்குகள் %) |
நகராட்சி வார்டுகள் (வாக்குகள் %) |
பேரூராட்சி வார்டுகள் (வாக்குகள் %) | |
---|---|---|---|---|
திமுக | 952 (43.59%) | 2360 (43.49%) | 4389 (41.91%) | |
அதிமுக | 164 (24%) | 638 (26.86%) | 1206 (25.56%) | |
பாரதிய ஜனதா கட்சி | 22 (7.17%) | 56 (3.31%) | 230 (4.30%) | |
இந்திய தேசிய காங்கிரசு திமுக கூட்டணி | 73 (3.16%) | 151 (3.04%) | 368 (3.85%) | |
சிபிஐ (மார்க்சிஸ்ட்) திமுக கூட்டணி | 24 (1.31%) | 41 (0.82%) | 101 (1.34%) | |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணி | 21 (0.90%) | 34 (0.69%) | 34 (0.36%) | |
விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணி | 16 (0.72%) | 26 (0.62%) | 51 (0.61%) | |
சிபிஐ திமுக கூட்டணி | 13 (0.88%) | 19 (0.38%) | 26 (0.44%) | |
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுக கூட்டணி | 6 (0.27%) | 23 (0.64%) | 12 (0.14%) | |
பாட்டாளி மக்கள் கட்சி | 5 (1.42%) | 48 (1.64%) | 73 (1.56%) | |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | 3 (1.38%) | 33 (1.49%) | 66 (1.35%) | |
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி திமுக கூட்டணி | 1 | 5 | 16 | |
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு திமுக கூட்டணி | 0 | 1 | 0 | |
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | 0 | 1 | 0 | |
சமத்துவ மக்கள் கட்சி | 0 (0.04%) | 1 (0.02%) | 0 (0.01%) | |
பகுஜன் சமாஜ் கட்சி | 0 (0.24%) | 3 (0.10%) | 1 (0.04%) | |
தேசிய முற்போக்கு திராவிட கழகம் | 0 (0.95%) | 12 (0.67%) | 23 (0.55%) | |
எஸ்டிபிஐ | 0 (0.06%) | 2 (0.08%) | 1 (0.01%) | |
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | 0 | 1 | 0 | |
மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணி | 0 (0.02%) | 4 (0.11%) | 13 (0.14%) | |
நாம் தமிழர் கட்சி | 0 (2.51%) | 0 (0.74%) | 6 (0.80%) | |
தேசியவாத காங்கிரசு கட்சி | 0 | 0 | 1 | |
புதிய தமிழகம் | 0 (0.01%) | 1 (0.06%) | 3 (0.04%) | |
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் | 0 | 0 | 1 | |
மனிதநேய ஜனநாயகக் கட்சி | 0 | 1 | 1 | |
மக்கள் நீதி மய்யம் | 0 (1.82%) | 0 (0.21%) | 0 (0.07%) | |
சுயேட்சைகள் | 73 | 381 | 980 | |
Source:www.tnsec.tn.nic.in[6][7] |
Seamless Wikipedia browsing. On steroids.