இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும்.2005 செப்டம்பர் 14 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சியாக தொடங்கப்பட்டது.குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது.தற்போது தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு கட்சியாக செயல்படுகிறது. திராவிடக் கட்சிகளில் ஒன்றான தேமுதிக தந்தை பெரியார் பெருந்தலைவர் காமராஜர் பேரறிஞர் அண்ணா புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆகியோரின் சமூக-சனநாயக, சமூக நீதிக் கொள்கைகளை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது விஜயகாந்த் இதன் நிறுவனத் தலைவர் ஆவார்.
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் | |
---|---|
சுருக்கக்குறி | தேமுதிக |
தலைவர் | விஜயகாந்த்[1] |
நிறுவனர் | விஜயகாந்த் |
பொதுச் செயலாளர் | பிரேமலதா விஜயகாந்த் |
தொடக்கம் | 14 செப்டம்பர் 2005 |
தலைமையகம் | கேப்டன் ஆலயம், 125/7, ஜவகர்லால் நேரு சாலை, கோயம்பேடு, சென்னை – 600107, தமிழ்நாடு, இந்தியா. |
மாணவர் அமைப்பு | தேமுதிக மாணவர் அணி |
இளைஞர் அமைப்பு | தேமுதிக இளைஞர் அணி தேமுதிக இளம்பெண்கள் அணி |
பெண்கள் அமைப்பு | தேமுதிக மகளிர் அணி அணி |
தொழிலாளர் அமைப்பு | தேசிய முற்போக்குத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு |
கொள்கை | |
நிறங்கள் | மஞ்சள் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[2] |
கூட்டணி | அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (தமிழ்நாடு சட்டப் பேரவை) | 0 / 234 |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
dmdkparty.com | |
இந்தியா அரசியல் |
தனது கொள்கைகளாக தேமுதிக அறிவித்துள்ளவை பின்வருமாறு:[3]
இக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.
15வது மக்களவை (2009 பொதுத் தேர்தல்) தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் 2006 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட முரசு சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது [4].
தொகுதி | வேட்பாளர்[5] | பெற்ற வாக்குகள் |
---|---|---|
திருவள்ளூர் (தனி) | சுரேஷ். | 110,452 |
வட சென்னை | யுவராஜ் | 66,375 |
தென்சென்னை | வி.கோபிநாத் | 67,291 |
மத்திய சென்னை | வி.வி.ராமகிருஷ்ணன் | 38,959 |
ஸ்ரீபெரும்புதூர் | மு.அருண் சுப்பிரமணியன். | 84,530 |
காஞ்சீபுரம் (தனி) | தமிழ்வேந்தன். | 103,560 |
அரக்கோணம் | லயன் எஸ்.சங்கர் | 82,038 |
வேலூர் | செளகத் ஷெரீப் | 62,696 |
கிருஷ்ணகிரி | பி.டி.அன்பரசன் | 97,546 |
தர்மபுரி | இளங்கோவன் | 103,494 |
திருவண்ணாமலை | எஸ்.மணிகண்டன் | 56,960 |
ஆரணி | இரா. மோகன் | 105,729 |
விழுப்புரம் | கணபதி | 127,476 |
கள்ளக்குறிச்சி | சுதீஷ் | 132,223 |
சேலம் | அழகபுரம் மோகன்ராஜ் | 120,325 |
நாமக்கல் | என். மகேஷ்வரன் | 79,420 |
ஈரோடு | முத்து வெங்கடேஸ்வரன். | 91,008 |
திருப்பூர் | திணேஷ்குமார் | 86,933 |
நீலகிரி (தனி) | செல்வராஜ். | 76,613 |
கோவை | ஆர்.பாண்டியன். | 73,188 |
பொள்ளாச்சி | கே.பி. தங்கவேல். | 38,824 |
திண்டுக்கல் | ப. முத்து வேல்ராஜ் | 100,788 |
கரூர் | ஆர்.ராமநாதன். | 51,196 |
திருச்சி | ஏ.எம்.ஜி. விஜயகுமார் | 61,742 |
பெரம்பலூர் | துரை.காமராஜ். | 74,317 |
கடலூர் | முன்னாள் அமைச்சர் தாமோதரன் | 93,172 |
சிதம்பரம் (தனி) | சபா சசிகுமார். | 66,283 |
மயிலாடுதுறை | ஜி.கே.பாண்டியன் | 44,754 |
நாகப்பட்டினம் (தனி) | மகா.முத்துக்குமார். | 51,376 |
தஞ்சாவூர் | டாக்டர் ராமநாதன். | 63,852 |
சிவகங்கை | பர்வத ரெஜீனா பாப்பா | 60,054 |
மதுரை | கே. கவிஅரசு | 54,419 |
தேனி | எம்.சி. சந்தானம் | 70,908 |
விருதுநகர் | க. பாண்டியராஜன் | 125,229 |
ராமநாதபுரம் | சிங்கை ஜின்னா. | 49,571 |
தூத்துக்குடி | சுந்தர் | 61,403 |
தென்காசி (தனி) | இன்பராஜ் | 75,741 |
திருநெல்வேலி | எஸ். மைக்கேல் ராயப்பன் | 94,562 |
கன்னியாகுமரி | எஸ். ஆஸ்டின் | 68,472 |
புதுச்சேரி | கே.ஏ.யூ. அசனா | 52,638 |
2011 சட்டமன்ற தேர்தலில் புரட்சி தலைவி அம்மா அவர்களின் தலைமையிலானஅதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.[6]
இத்தேர்தலில் பாசக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.[7]
மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.[8][9].
கட்சி/அணி | போட்டியிடவிருக்கும் தொகுதிகள் |
---|---|
தேமுதிக | 104 |
மக்கள் நலக் கூட்டணி + தமாகா | 130 |
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|
104 | 0 | 1034384 | 2.4 % .[10] |
Seamless Wikipedia browsing. On steroids.