டுவைன் பிராவோ

மேற்கிந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

டுவைன் பிராவோ

டுவைன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ (Dwayne James John Bravo, பிறப்பு: அக்டோபர் 7, 1983, திரினிடாட் டொபாகோ) இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் (துடுப்பாட்டம்) ஆவார். இவர் வலதுகை மட்டையாளர். இவரின் பந்துவீச்சு வலதுகை மித விரைவு வீச்சு ஆகும். திரினிடாட் டொபாகோ அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவ துடுப்பாட்டங்களிலும் விளையாடி வருகிறார். சிறந்த சகலத்துறையர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் விதவிதமான பந்துகளை இறுதிக்கட்ட ஓவர்களை வீசுவதாலும், அதிரடியாக விளையாடுவதாலும் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவர் பாடகராகவும் உள்ளார்.[1]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
டுவைன் பிராவோ
Dwayne Bravo
Thumb
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ட்வேன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ
பட்டப்பெயர்டாக்கோ
உயரம்5 அடி 9 அங் (1.75 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதம்-விரைவு
பங்குபந்து வீச்சுசாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சூலை 22 2004 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுதிசம்பர் 5 2010 எ. இலங்கை
ஒநாப அறிமுகம்ஏப்ரல் 18 2004 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 6 2011 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 40 110 97 150
ஓட்டங்கள் 2,200 1,826 5,218 2,499
மட்டையாட்ட சராசரி 31.42 24.67 30.87 23.55
100கள்/50கள் 2/7 1/5 8/29 1/7
அதியுயர் ஓட்டம் 103 112* 197 112*
வீசிய பந்துகள் 6,466 4,363 10,763 5,692
வீழ்த்தல்கள் 86 132 171 176
பந்துவீச்சு சராசரி 39.83 28.93 33.78 27.56
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 7 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/55 4/19 6/11 6/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
41/ 44/ {{{catches/stumpings3}}} 61/
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 25 2011
மூடு

2004 ஆம் ஆண்டுமுதல் விளையாடிவரும் இவர் தற்போதுவரை 40 தேர்வுத் துடுப்பாட்டம், 164 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்,66 பன்னாட்டு இருபது20 போட்டிகளை மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். 2012 ஐசிசி உலக இருபது20 மற்றும் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் கோப்பைகளை வெல்வதற்கு மிகமுக்கிய நபராகத் திகழ்ந்தார்.

இவர் பிறந்த ஊரான திரினிடாட் டொபாகோ அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் 2002 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பாக்கித்தான் சூப்பர் லீக்கில் லாஹூர் கலாந்தர்ஸ் அணிக்காகவும், பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனெகடஸ் அணிக்காகவும், வங்காளதேச பிரீமியர் லீக்கில் சிட்டகாங் கிங்ஸ் அணிக்காகவும், இங்கிலாந்து மாகாண துடுப்பாட்டப் போட்டிகளில் கென்ட் மற்றும் எஸ்செக்ஸ் அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2013 ஆம் ஆண்டில் கரீபியன் பிரீமியல் லீக்கின் துவக்கத்தில் ஒப்போலை உரிமையுள்ள வீரராக அறியப்பட்டார்.[2]

சனவரி 31, 2015 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஜலக் திக்ஹாலா ஜா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் கோப்பை வென்றதைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் விதமாக சேம்பியன் சேம்பியன் எனும் பாடலைப் பாடி, தயாரித்து மார்ச் 2016 இல் வெளியிட்டார்.[3]

இந்தியன் பிரீமியர் லீக்

2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்த இவர் 32 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகள் பெறுபவர்களுக்கான கருஞ்சிவப்பு நிறத் தொப்பியைப் பெற்றார். பின் 2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் போட்டியில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அந்தத் தொடரில் விளையாடவில்லை. மே 3, 2015 இல் சலோ சலோ எனும் பாடலை சென்னையில் வெளியிட்டார்.[4]

2015 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்த இவர் 26 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகள் பெறுபவர்களுக்கான கருஞ்சிவப்பு நிறத் தொப்பியைப் இரண்டாவது முறையாகப் பெற்றார்.[5][5]

சாதனைகள்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 43 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அணித்தலைவராக இருந்து அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] ஜெரோம் டெய்லருடன் இணைந்து பன்னாட்டு இருபது20 போட்டியில் 9 ஆவது இணைக்கு 66 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தார்.[7]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.