தரில் மிட்செல்

From Wikipedia, the free encyclopedia

தரில் யோசப் மிட்செல் (Daryl Joseph Mitchell, பிறப்பு: 20 மே 1991) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக பல்துறைகளிலும் விளையாடி வருகிறார். இவர் உள்ளூரில் கேன்டர்பரி துடுப்பாட்ட அணியில் விளையாடுகிறார்.[1][2]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
தரில் மிட்செல்
Daryl Mitchell
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டரில் யோசப் மிட்செல்
பிறப்பு20 மே 1991 (1991-05-20) (அகவை 33)
ஆமில்டன், நியூசிலாந்து
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மத்திமவீச்சு
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 276)29 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு17 மார்ச் 2023 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 199)20 மார்ச் 2021 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாப22 அக்டோபர் 2023 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்75
இ20ப அறிமுகம் (தொப்பி 81)6 பெப்ரவரி 2019 எ. இந்தியா
கடைசி இ20ப5 செப்டம்பர் 2023 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்75
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011/12–2019/20வடக்கு மாவட்டங்களின் அணி
2020/21–இன்றுகேன்டர்பரி அணி
2021மிடில்செக்சு அணி
2022ராஜஸ்தான் ராயல்ஸ்
2023லங்காசயர் அணி
2023இலண்டன் இசுப்பிரிட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ப.ஒ.நா இ20ப மு.த
ஆட்டங்கள் 18 33 56 98
ஓட்டங்கள் 1,316 1,163 1,069 5,653
மட்டையாட்ட சராசரி 57.21 54.48 24.86 40.96
100கள்/50கள் 5/8 5/5 0/5 15/31
அதியுயர் ஓட்டம் 190 129 72* 190
வீசிய பந்துகள் 655 288 89 5,677
வீழ்த்தல்கள் 3 13 8 98
பந்துவீச்சு சராசரி 110.33 21.07 18.50 30.98
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/7 3/25 2/27 5/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
24/– 18/- 28/– 109/–
பதக்கத் தகவல்கள்
மூலம்: கிரிக்கின்ஃபோ, 17 அக்டோபர் 2023
மூடு

200 இற்கும் அதிகமான உள்ளூர் போட்டிகளில் பங்குபற்றிய மிட்செல், 2019 இல் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.[3][4][5] 2022 பெப்ரவரியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022 இந்தியன் பிரீமியர் லீக் சுற்றில் விளையாட இவரை ஏலத்தில் வாங்கியது.[6]

பன்னாட்டுப் போட்டிகள்

2019 சனவரியில், மிட்செல் நியூசிலாந்தின் பன்னாட்டு இருபது20 அணியில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட இணைக்கப்பட்டார்.[7] தனது முதலாவது இ20ப போட்டியை இந்தியாவுக்கு எதிராக 2019 பெப்ரவரி 6 அன்று விளையாடினார்.[8] 2019 நவம்பரில்,தேர்வு அணியில் இங்கிலாந்துக்கு எதிரான சுற்றில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] தனது 1-ஆவது தேர்வுப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 2019 நவம்பர் 19 இல் விளையாடினார்.[10]

சிறப்புகள்

அபுதாபியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான பரபரப்பான அரையிறுதி மோதலின் முக்கியமான தருணத்தின் போது, இங்கிலாந்து பந்துவீச்சாளர் அடில் ரசீத்தை அவர் வழியில் தடுத்ததை உணர்ந்த பிறகு, ஒரு ஓட்டம் கூட ஓடக்கூடாது என்ற மிட்செல் எடுத்த முடிவுக்காக, 2021 ஐசிசி விருதுகளின் போது ஐசிசி துடுப்பாட்ட உணர்வு விருதை வென்றவராக இவர் பெயரிடப்பட்டார்.[11][12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.