ஜொகூர் பாரு சென்ட்ரல்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ஜொகூர் பாரு சென்ட்ரல் அல்லது ஜொகூர் பாரு மத்திய நிலையம்; அல்லது லார்க்கின் சென்ட்ரல்; (சுருக்கம்:ஜேபி சென்ட்ரல்); (ஆங்கிலம்: Johor Bahru Sentral அல்லது JB Sentral மலாய்: Johor Bahru Sentral); ஜாவி: جوهر بهرو سينترال; சீனம்: 新山中央車站) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு, புக்கிட் சகார் (Bukit Chagar) பகுதியில் அமைந்துள்ள ஓர் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஆகும்.
கேடிஎம் இண்டர்சிட்டி | ||||||||||||||||||||||||||||||||||||
ஜொகூர் பாரு சென்ட்ரல் | ||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | தெற்கு ஒருங்கிணைந்த நுழைவாயில்; புக்கிட் சாகர், ஜொகூர் பாரு, மலேசியா ஜொகூர் | |||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 1°27′45″N 103°45′53″E | |||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | பிரதமர் துறையின் சொத்து மற்றும் நில மேலாண்மை பிரிவு | |||||||||||||||||||||||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) | |||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை | |||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 3 தீவு நடைமேடை | |||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 6 | |||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | |||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 21 அக்டோபர் 2010 | |||||||||||||||||||||||||||||||||||
முந்தைய பெயர்கள் | கெம்பாஸ் பாரு | |||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
|
இந்தப் போக்குவரத்து மையம் 2010 அக்டோபர் 21-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த மையம், முன்பு 200 மீ தெற்கே அமைந்து இருந்த ஜொகூர் பாரு தொடருந்து நிலையத்தில் (Johor Bahru Railway Station) இருந்து புக்கிட் சகார் பகுதிக்கு மாற்றப்பட்டது. பழைய ஜொகூர் பாரு தொடருந்து நிலையம் தற்சமயம் மூடப்பட்டுவிட்டது.
ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயிலின் (Southern Integrated Gateway) ஒரு பகுதியாக விளங்கும் இந்தப் போக்குவரத்து மையம், சுல்தான் இசுகந்தர் கட்டிடத்தில் அமைந்துள்ள சுல்தான் இசுகந்தர் சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப் படுத்துதல் வளாகத்துடன் (Customs, Immigration and Quarantine (CIQ) Complex) இணைக்கப்பட்டுள்ளது.[1]
மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் (Johor–Singapore Causeway) வடக்கு முனையில் இந்த வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியா-சிங்கப்பூர் எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைவதற்கான இரண்டு தரைவழி இடங்களில் இதுவும் ஒன்றாகும். ஜொகூர் சுல்தான் இசுகந்தரின் (Sultan Iskandar of Johor) நினைவாக இந்தக் கட்டிடத்திற்குப் பெயரிடப்பட்டது.
கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்துச் சேவையின்; கிம்மாஸ் - புலாவ் செபாங்/தம்பின் வழித்தடத்தின் தென் மண்டல விரைவுத் தொடருந்து (Ekspres Selatan) துணைச் சேவை; தும்பாட் வரையிலான கிழக்கு மண்டல விரைவுத் தொடருந்து (Ekspres Timuran) துணைச் சேவை; ஆகிய சேவைகளுக்கு ஜொகூர் பாரு சென்ட்ரல் நிலையம், தெற்கு முனையமாகவும் இருந்தது.
தெப்ராவ் - சிங்கப்பூர் வழித்தடத்தின் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் வழியாக சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் தொடருந்து சோதனைச் சாவடிக்கும், இந்த நிலையம் சேவை செய்தது. இருப்பினும், கோலாலம்பூர் சென்ட்ரல், பட்டர்வொர்த் மற்றும் பாடாங் பெசார் செல்லும் பயணிகள் கிம்மாஸ் நிலையத்தில் இறங்கி வேறு ஒரு தொடருந்து மூலமாகப் பயணத்தைத் தொடர வேண்டிய நிலை உள்ளது.
கிம்மாஸ்-ஜொகூர் பாரு இரட்டைப் பாதை திட்டத்தால் 2022-ஆம் ஆண்டு சனவரி முதல் சூன் வரை தொடருந்து சேவைகள் எதையும் இந்த நிலையம் வழங்கவில்லை. மேலும் ஜொகூர் பாரு மற்றும் கெம்பாஸ் பாரு இடையே புதிய தடங்கள் தயாரான பிறகு சூலை 2022-இல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.[2]
ஜொகூர் பாருவில் இருந்து சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் நோக்கி தென்பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கான மலேசிய குடிவரவு சோதனைச் சாவடியாக ஜொகூர் பாரு சென்ட்ரல் செயல்படுகிறது. சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் இருந்து மலேசிய வடக்கு பகுதிக்குச் செல்லும் பயணிகள், தொடருந்துகளில் ஏறுவதற்கு முன் உட்லண்ட்ஸ் தொடருந்துச் சோதனைச் சாவடியில் மலேசிய குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகளால் சோதனை செய்யப்படுகிறார்கள்.
ஜொகூர் பாருவில் தொடருந்து மற்றும் பேருந்து போக்குவரத்துக்கான முக்கிய மையமாகச் செயல்பட ஜொகூர் பாரு சென்ட்ரல் திட்டமிடப்பட்டுள்ளது. கேடிஎம் இடிஎஸ், கேடிஎம் கொமுட்டர், நகரிடை பேருந்து மையம் (Transit Bus Terminal) ஆகியவற்றின் முக்கிய நிலையமாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (Johor Bahru–Singapore Rapid Transit System); இசுகந்தர் மலேசியா விரைவுப் பேருந்து போக்குவரத்து (Iskandar Malaysia Bus Rapid Transit) நிலையங்களுடன் ஜொகூர் பாரு சென்ட்ரல் இணைக்கப்படும்.[3][4]
ஜொகூர் மாநிலத்தின் தொடருந்து வரலாறு 1869-இல் தொடங்கியது. ஜொகூர் சுல்தான் அபு பக்கர் (மகாராஜா) ஜொகூர் தொடருந்து கட்டுமானத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தவர் ஆகும். ஜொகூர் பாரு முனையத்திலிருந்து 18 மைல் தொலைவில் உள்ள பூலாய் மலையை நோக்கி அந்த வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. அந்த வழித்தடம் ஜொகூர் பாருவில் இருந்து உருவாக்கப்பட்டது. 1875-ஆம் ஆண்டு முதல் 6 மைல் தூரத்திற்கு இயங்கி வந்தது. பின்னர் 1889-இல் அந்த வழித்தடம் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.[5]
ஜொகூர் மாநிலத் தொடருந்து நிறுவனத்தின் கீழ் ஜொகூர் பாருவின் பழைய நிலையம் 1909-இல் திறக்கப்பட்டது. 1904-இல் கிம்மாஸ் முதல் ஜொகூர் பாரு வரையிலான முதமை இணைப்பு திறக்கப்பட்ட பின்னர்தான் ஜொகூர் பாருவின் பழைய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஜொகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்குத் தரைவழிப் போக்குவரத்துகள் எதுவும் இல்லை.
அந்தக் கட்டத்தில் தீபகற்ப மாநிலங்களின் தொடருந்துகளுக்கான தெற்கு முனையமாக ஜொகூர் பாரு பழைய தொடருந்து நிலையம் இருந்தது. இருப்பினும், சிங்கப்பூருக்குத் தரைவழிப் போக்குவரத்து இல்லாத காரணத்தினால், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways), தீபகற்ப மாநிலங்களின் தொடருந்துகளுக்கும்; சிங்கப்பூர் அரசு தொடருந்துகளுக்கும் ஓர் ஒருங்கிணைந்த தொடருந்து படகுச் சேவையை இயக்கி வந்தது.[6]
1912-இல், ஜொகூர் அரசாங்க தொடருந்து சேவையும்; சிங்கப்பூர் அரசாங்க தொடருந்து சேவையும்; தீபகற்ப மலேசியாவின் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.