சோ. ரா. பொம்மை

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சோ. ரா. பொம்மை

சோமப்பா இராயப்பா பொம்மை (S R Bommai) (6 ஜூன் 1924 - 10 அக்டோபர் 2007) கருநாடகத்தின் 11 வது முதல்வராக இருந்த ஜனதா தளம் கட்சியின் அரசியல்வாதி ஆவார். 1996 முதல் 1998 வரை ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் கல்வித் துறை அமைச்சராகவும் இருந்தார்.[1]

விரைவான உண்மைகள் சோ. இரா. பொம்மை, கல்வித்துறை அமைச்சர் ...
சோ. இரா. பொம்மை
Thumb
கல்வித்துறை அமைச்சர்
பதவியில்
ஜூன் 5, 1996  மார்ச் 19, 1998
பிரதமர்தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
முன்னையவர்அடல் பிகாரி வாச்பாய்
பின்னவர்முரளி மனோகர் ஜோஷி
11-வது முதலமைச்சர், கர்நாடக அரசு
பதவியில்
ஆகஸ்ட் 13, 1988  ஏப்ரல் 21, 1989
ஆளுநர்பி. வெங்கடசுப்பையா
முன்னையவர்இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
Member of the ஹூப்ளி சட்டமன்றத் தொகுதி சட்டமன்றம்
ஹூப்ளி
பதவியில்
1978–1989
முன்னையவர்ஜி. இரங்கசாமி சந்திரா
பின்னவர்ஜி. இரங்கசாமி சந்திரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-06-06)6 சூன் 1924
கரதகி, சிக்கான் (தற்போது ஆவேரி மாவட்டம்), மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு10 அக்டோபர் 2007(2007-10-10) (அகவை 83)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஜனதா கட்சி
துணைவர்கங்கம்மா
பிள்ளைகள்4; பசவராஜ் பொம்மை உட்பட
மூடு

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவரது மகன் பசவராஜ் பொம்மை 28 சூலை 2021 முதல் கர்நாடக மாநில முதலமைச்சராக உள்ளார்.

வாழ்க்கை

இவர் 6 ஜூன் 1924இல் சதார் லிங்காயத் குடும்பத்தில் பிறந்தார். இவர் 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். பிரித்தானிய ஆட்சியின் போது மைசூர் இராச்சியம், மும்பை பிரசிடென்சி, ஹைதராபாத் மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சி எனப் பிரிக்கப்பட்டிருந்தததை கருநாடகாவாக ஒன்றிணைத்ததில் இவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.[2]

தொழில் முறை வழக்கறிஞராக இருந்த இவர், ஹுப்பல்லி கிராமப்புறத் தொகுதியிலிருந்து பல முறை கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 1972 முதல் 1978 வரை கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.

இவர் அக்டோபர் 10, 2007 அன்று, 84 வயதில் இறந்தார். [3] இவரது மகன், எம். எஸ். பொம்மாயி பெங்களூரில் உள்ள தொழிலதிபர் ஆவார். மற்றொரு மகனான பசவராஜ் பொம்மாய் 2008ல் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தில் அமைச்சரானார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.