சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்

From Wikipedia, the free encyclopedia

சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்map

சோமேஷ்வரர் கோயில், பெங்களூர் (Someshwara Temple), இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூர் நகரத்தின் அலசூர் பகுதியில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் சோழர்கள் காலத்தில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கருங்கற்களால், சிற்ப வேலைபாடுகளுடன் கட்டப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.[1] விஜயநகரப் பேரரசு காலத்தில் அல்சூர் சோமேஷ்வரர் கோயில் திருப்பணி செய்யப்பட்டது.

Thumb
சோமேஷ்வரர் கோயிலின் நுழைவாயில், அலசூர், பெங்களூரு

கோயில் அமைப்பு

இக்கோயில் கருவறையின் முன் அழகிய யாழி சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது. கோயிலின் கிழக்கு கோபுரம் சிற்பங்களுடன், 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கோயில் கருவறையின் முன் மண்டபத்தில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட அழகிய நந்தி உள்ளது. மேலும் இராவணன் கையிலை மலையைத் தூக்கும் காட்சி, மகிஷாசூரனை துர்கை வதம் செய்யும் காட்சி, நாயன்மார்கள், பார்வதி - சிவன் திருக்கல்யாணக் காட்சி மற்றும் சப்தரிஷிகளின் கருங்கல் சிற்பங்கள் அமைந்துள்ளது. இக்கோயிலின் கல்யாணி தெப்பக்குளம் 1200 ஆண்டு பழைமையானது. [2] [3]கோயில் கருவறை வாயில் முன்னர் துவாரபாலகர்களின் இரண்டு அழகிய சிற்பங்கள் அமைந்துள்ளது.

பிற செய்திகள்

பிரிட்டன் பிரதமர் தெரசா மே மூன்று நாள் இந்தியச் சுற்றுப் பயணத்தின் போது சோமேஷ்வரர் கோயிலுக்கு சென்றார். [4]

படக்காட்சிகள்

தமிழ் கல்வெட்டுகள்

12°58′31.81″N 77°37′26.01″E

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.