From Wikipedia, the free encyclopedia
சூறாவளி கத்ரீனா (Hurricane Katrina) என்பது ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் மோசமான விளைவுகளைத் தந்த ஒரு சூறாவளியாகும். இதுவே அட்லாண்டிக் மாகடலில் பதிவாகிய மிகவும் வலிமையான சூறாவளிகளில் ஆறாவதாகும். கட்ரீனா ஆகஸ்ட் 23, 2005 இல் உருவாகி, அமெரிக்க வளைகுடாக் கரையோரப் பகுதியின் வடமத்திய பகுதிகள் அனைத்தையும் மோசமாகப் பாதித்தது. மிகவும் மோசமான பாதிப்பு லூசியானாவில் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் ஏற்பட்டது[1]. இச்சூறாவளி மிசிசிப்பியின் முழு கரையோரப் பகுதிகளிலும் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது.
Category 5 major hurricane (SSHWS/NWS) | |
தொடக்கம் | ஆகஸ்டு 23, 2005 |
---|---|
மறைவு | ஆகஸ்டு 31, 2005 |
உயர் காற்று | 1-நிமிட நீடிப்பு: 175 mph (280 கிமீ/ம) |
தாழ் அமுக்கம் | 902 பார் (hPa); 26.64 inHg |
இறப்புகள் | 1,836 |
சேதம் | $81.2 பில்லியன் (2005 US$) |
பாதிப்புப் பகுதிகள் | பகாமாசு, தென் புளோரிடா, கியூபா, லூசியானா (முக்கியமாக பாரிய நியூ ஓர்லியன்ஸ்), மிசிசிப்பி, அலபாமா, புளோரிடா Panhandle, பெரும்பான்மையான வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி |
2005 அத்திலாந்திக் சூறாவளி பருவம்-இன் ஒரு பகுதி |
ஆகஸ்ட் 23, 2005 இல் பஹாமாசில் ஆரம்பமாகிய கட்ரீனா தெற்கு புளோரிடாவைத் தாண்டிய போது இதன் தாக்கம் அதிகமாகத் தெரியவில்லை. ஆனாலும் சில உயிரிழப்புகளும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. பின்னர் அது மெக்சிகோ வளைகுடாவைத் தாண்டியபோது அதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. ஆகஸ்ட் 29 இல் லூசியானாவில் நிலைகொண்டபோது அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.[1]
குறைந்தது 1,836 பேர் மொத்தமாக இச்சூறாவளியின் பாதிப்பால் உயிரிழந்தனர். அமெரிக்க வரலாற்றில் 1928ம் ஆண்டில் இடம்பெற்ற சூறாவளிக்கு அடுத்தபடியாக இதுவே மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளியாகும். $81.2 பில்லியன் கணக்கில் சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
மிகச்செறிவான அந்திலாந்திக் சூறாவளிகள் செறிவு வளிமணடல அமுக்கத்தைக் கொண்டு அளக்கப்பட்டது | |||
---|---|---|---|
தரம் | சூறாவளி | பருவம் | குறை. அமுக்கம் |
1 | சூறாவளி வில்மா | 2005 | 882 mbar (hPa) |
2 | சூறாவளி கில்பேர்ட் | 1988 | 888 mbar (hPa) |
3 | சூறாவளி லேபர் டே | 1935 | 892 mbar (hPa) |
4 | சூறாவளி ரீட்டா | 2005 | 895 mbar (hPa) |
5 | சூறாவளி எலன் | 1980 | 899 mbar (hPa) |
6 | சூறாவளி கத்ரீனா | 2005 | 902 mbar (hPa) |
7 | சூறாவளி கமீலீ | 1969 | 905 mbar (hPa) |
சூறாவளி மிட்ச் | 1998 | 905 mbar (hPa) | |
9 | சூறாவளி டீன் | 2007 | 906 mbar (hPa) |
10 | சூறாவளி ஐவன் | 2004 | 910 mbar (hPa) |
மூலம்: ஐ.அ. வர்த்தக திணைக்களம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.