சுக்கூர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சுக்கூர் மாவட்டம் (Sukkur district) (சிந்தி மொழி: ضلعو سکر), (உருது: ضِلع سکّھر ), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சுக்கூர் ஆகும். இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
சுக்கூர் மாவட்டம்
ضلعو سکر | |
---|---|
மாவட்டம் | |
சிந்து மாகாணத்தில் சுக்கூர் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 27°40′N 69°30′E | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | சிந்து |
தலைமையிடம் | சுக்கூர் |
வருவாய் வட்டங்கள் | 4 |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,165 km2 (1,994 sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
இணையதளம் | www |
சுக்கூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 1977-இல் சிகார்பூர் மாவட்டமும், 1993-இல் கோத்கி மாவட்டமும் புதிதாக நிறுவப்பட்டது.
இம்மாவட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் தொடர்பான லெக்கூஞ்சதாரோ எனும் தொல்லியல் மேடு உள்ளது.
வருவாய் வட்டம் | மக்கள்தொகை (2017) |
பரப்பளவு (km²) |
ஒன்றியக் குழுக்கள் | கிராமங்கள் |
---|---|---|---|---|
சுக்கூர் | 551,357 | 300 | 26 | 50 |
ரோகிரி | 371,104 | 1319 | 12 | 400 |
சலே பாத் | 129,619 | 2339 | 03 | 250 |
பனோ அகில் | 435,823 | 1233 | 12 | 450 |
மொத்தம் | 1,487,903 | 5165 | 54 | 1150 |
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 5,216 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுக்கூர் மாவட்டத்தின் மக்கள்தொகை 14,87,903 ஆகும். அதில் ஆண்கள் 7,76,259, பெண்கள் 7,11,587, திருநங்கைகள் 57 ஆகவுள்ளனர். [2][3]மக்கள்தொகையில் 48.398% நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[4]
சுக்கூர் மாவட்டத்தில் 96% இசுலாமியர்களும், 3.28% இந்துக்களும், 0.51% கிறித்தவர்களும், மற்றவர்கள் 0.18% வாழ்கின்றனர். சுக்கூர் மாவட்ட மக்களில் 74.07% சிந்தி மொழியும், 13.82% உருது மொழியும், 6.63% பஞ்சாபி மொழியும், 1.47% பலூச்சி மொழியும், 0.99% சராய்கி மொழியும், பிற மொழி பேசுவோர் 1.49% ஆகவுள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.