Remove ads
அழகிய இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
சமந்தா ருத் பிரபு (Samantha Ruth Prabhu, பிறப்பு: ஏப்ரல் 28, 1987) இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார்.[8] இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[8] ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார்.[5][9] 2007இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[10][11] இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார்.[12] இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் (2010), தூக்குடு (2011), சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு (2012), அத்தாரிண்டிகி தாரேதி (2013), கத்தி (2014) போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன.[13][14][15][16]
சமந்தா ருத் பிரபு | |
---|---|
பிறப்பு | சமந்தா ருத் பிரபு ஏப்ரல் 28, 1987[1] பல்லவபுரம், மெட்ராஸ், தமிழ்நாடு, இந்தியா[2] |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | யசோதா[3] |
கல்வி | இளநிலை வணிகம்[4] |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஸ்டெல்லா மேரிக் கல்லூரி, சென்னை[5] |
பணி | நடிகை, உருமாதிரிக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2007 - தற்போது வரை |
சமயம் | கிறித்தவம்[6] |
வாழ்க்கைத் துணை | [7] |
கையொப்பம் |
சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு.[17] இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[18] கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன் கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு இருந்தது.[19] அத்திரைப்படத்திற்காக ஆகஸ்ட் 2009-தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார், அத்திரைப்படம் பிப்ரவரி 16, 2010-ல் வெளியானது.[20] இவர் ஜெஸ்ஸி என்னும் ஐதராபாத்தில் வசிக்கும் மலையாள கிருத்துவ பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியான பிறகு, சமந்தாவின் நடிப்பை பாராட்டி நாளிதழ்களில் வரத்துவங்கியது.[21] சிபி (Sify) உட்பட பல இணையத்தளத்தில் இவரை "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்"("scene-stealer") என்றும் அவருடைய அழகு, "கவர்ந்திழுப்பதாகவும்" ("is alluring"), என சிபியில் இவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தது.[21]
அதன்பிறகு ஏ. ஆர். ரகுமான் இசையில், கௌதம் மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் தோன்றினார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது.[22] பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர்.[23]
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | நந்தினி | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2010 | ஏ மாய சேசாவே | ஜெஸ்ஸி | தெலுங்கு | சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது நந்தி சிறப்பு நடுவர் விருது |
2010 | பாணா காத்தாடி | பிரியா | தமிழ் | பரிந்துரை - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது |
2010 | மாஸ்கோவின் காவிரி | காவேரி தங்கவேலு | தமிழ் | |
2010 | பிருந்தாவனம் | இந்து | தெலுங்கு | |
2011 | நடுநிசி நாய்கள் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2011 | தூக்குடு | பிரசாந்தி | தெலுங்கு | |
2012 | ஏக் தீவானா தா | சமந்தா | இந்தி | சிறப்புத் தோற்றம் |
2012 | ஈகா | பிந்து | தெலுங்கு | |
2012 | நான் ஈ | தமிழ் | ||
2012 | நீ தானே என் பொன்வசந்தம் | நித்யா வாசுதேவன் | தமிழ் | |
2012 | யேடோ வெல்லிப்போயிந்தி மனசு | தெலுங்கு | ||
2012 | அஸ்ஸி நப்பே பூரே சாவ் | இந்தி | ||
2012 | ஆட்டோநகர் சூர்யா | சிரிசா | தெலுங்கு | |
2012 | சீதம்மா வகித்லோ சிரிமல்லே சேத்து | கீதா | தெலுங்கு | |
2012 | யெவடு | தெலுங்கு | ||
2014 | கத்தி | தமிழ் | ||
2015 | 10 என்றதுக்குள்ள | தமிழ் | ||
2015 | தங்கமகன் | தமிழ் | ||
2015 | தெறி | மித்ரா | தமிழ் | |
2016 | 24 | சத்யா எ சத்தியபாமா | தமிழ், தெலுங்கு | குரல்: பாடகி சின்மயி |
ஆண்டு | விருது | விருது பெற்றது | திரைப்படம் | முடிவு |
---|---|---|---|---|
2011 | சினிமா விருதுகள் (CineMAA Awards) | சிறந்த அறிமுக நடிகை | ஏ மாய சேசாவே | வெற்றி |
தென்னிந்திய பிலிம்பேர் விருது | சிறந்த நடிகை (தெலுங்கு) | பரிந்துரை | ||
சிறந்த அறிமுக நடிகை | வெற்றி | |||
நந்தி விருது | நந்தி சிறப்பு நடுவர் விருது | வெற்றி | ||
டி. எஸ். ஆர் தொலைக்காட்சி-9 திரைப்பட விருது | டி. எஸ். ஆர் தொலைக்காட்சி-9 சிறந்த கதாநாயகி விருது | வெற்றி | ||
விஜய் விருதுகள் | சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது | பாணா காத்தாடி | பரிந்துரை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.