Remove ads
From Wikipedia, the free encyclopedia
பாரம்பரிய கட்சி அல்லது சபா பாரம்பரிய கட்சி (வாரிசான்) (ஆங்கிலம்: Heritage Party (Warisan Malaysia); மலாய்: Parti Warisan (Warisan); சீனம்: 人民復興黨; சாவி: ڤرتي واريثن ) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும்.[1]
சபா பாரம்பரிய கட்சி Heritage Party Parti Warisan | |
---|---|
சுருக்கக்குறி | வாரிசான் Warisan |
தலைவர் | சாபி அப்டால் (Shafie Apdal) |
துணைத் தலைவர் | இக்னேசியசு டாரெல் லெயிகிங் (Ignatius Darell Leiking) |
பொதுச் செயலாளர் | லோரேத்தா டாமியன் (Loretto Damien S. Padua, Jr.) |
குறிக்கோளுரை | நம் நாடு, நம் பாரம்பரியம், நம் எதிர்காலம் (Our Nation, Our Heritage, Our Future) |
தொடக்கம் | 17 அக்டோபர் 2016 |
பிரிவு | பாரிசான் நேசனல் (BN) அம்னோ (அம்னோ சபா) மக்கள் நீதிக் கட்சி (PKR) சபா ஜனநாயக செயல் கட்சி (DAP) சபா |
முன்னர் | சபா பாரம்பரிய மேம்பாட்டுக் கட்சி (Sabah Heritage Development Party (Parti Pembangunan Warisan Sabah) |
தலைமையகம் | Ibu Pejabat Parti Warisan, No 8, Aras 1, Lorong Kompleks BSA, Kolombong, கோத்தா கினபாலு, சபா |
உறுப்பினர் (2022) | 250,000 |
கொள்கை | முற்போக்குவாதம்; பல்லினம்; தேசியவாதம் |
அரசியல் நிலைப்பாடு | நடுநிலைமை |
தேசியக் கூட்டணி | கூட்டணி: பாக்காத்தான் அரப்பான் (2016–ஆகத்து 2021) (நவம்பர் 2022) பாரிசான் நேசனல் (சனவரி 2023) |
நிறங்கள் | வெளிர் நீலம், அடர் நீலம் மற்றும் சிவப்பு |
மேலவை (மலேசியா) | 0 / 70 |
மக்களவை (மலேசியா) | 3 / 222 |
மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் | 15 / 607 |
இணையதளம் | |
partiwarisan | |
- |
முன்பு இந்தக் கட்சி, சபா பாரம்பரிய கட்சி (ஆங்கிலம்: Sabah Heritage Party மலாய்: Parti Warisan Sabah) என்று அழைக்கப்பட்டது. சபா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு 2016 அக்டோபர் 17-ஆம் தேதி சாபி அப்டால் (Shafie Apdal) தலைமையில் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு இறுதி வாக்கில், இந்தக் கட்சியின் செயல்பாடுகள் தேசிய அளவில் விரிவடைந்தன. இதன் விளைவாக இந்தக் கட்சியின் பெயர் பாரம்பரிய கட்சி (Heritage Party) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2][3]
2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பாக்காத்தான் (Pakatan Harapan) கூட்டணியுடன் இந்தக் கட்சி ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கிக் கொண்டது. பாக்காத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மலேசியக் கூட்டரசு அமைச்சரவைக்குள் பாரம்பரிய கட்சி பிரதிநிதித்துவப் படுத்தப்படும் என்று அதன் தலைவர் சாபி அப்டால் உறுதி அளித்தார்.[4]
தீபகற்ப மலேசியாவில் வாரிசான் போட்டியிட விரும்பவில்லை என்றும் சாபி அப்டால் கூறியுள்ளார். ஆனாலும், தேசிய அளவில் உடன்படிக்கை எதுவும் செய்து கொள்ளாமல் பாக்காத்தான் கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற தம்முடைய பாரம்பரிய கட்சி தயாராக உள்ளது என்றும் சாபி அப்டால் கருத்து தெரிவித்தார்.
பாரம்பரிய கட்சி தொடங்கப்பட்ட தொடக்கக் காலத்தில், தம்முடைய கட்சி பல இனங்களைக் கொண்ட கட்சி என்றும்; தீபகற்ப மலேசியாவில் பாக்காத்தான் கூட்டணியின் அரசியல் பாணியை தம்முடைய பாரம்பரிய கட்சி பின்பற்றப் போவது இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறினார்.[5]
இருப்பினும் புத்ராஜெயாவில் பாக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், மத்திய அமைச்சரவையில் பாரம்பரிய கட்சிக்கும் அமைச்சர்கள் பதவிகள் கிடைக்கலாம் என்றும்; அதே வேளையில் சபா மாநில அரசாங்கத்தில் பாக்காத்தான் அமைச்சர்களும் மாநிலச் சேவையில் அமர்த்தப் படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.[6]
2018 பொதுத் தேர்தலில் பாக்காத்தான் வெற்றி பெற்ற போது, இந்தப் பாரம்பரிய கட்சி மத்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஆனாலும் பாக்காத்தான் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததும் ஏப்ரல் 2021-இல் பாக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேறியது.[7]
2020-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலின் போது, மத்திய அரசாங்கத்தை ஆட்சி செய்த பெரிக்காத்தான் நேசனல், பாரிசான் நேசனல் மற்றும் ஐக்கிய சபா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருந்த சபா மக்கள் கூட்டணியால் பாரம்பரிய கட்சி தோற்கடிக்கப்பட்டது.
அதற்கு முன்னர் பாரம்பரிய கட்சி, சபா மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சியாக இருந்தது. 2020 சபா மாநிலத் தேர்தலில், சபா மாநில அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பாரம்பரிய கட்சி ஒரு தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.[8]
இருப்பினும் 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாக்காத்தான் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. பாரிசான் நேசனல் கூட்டணியுடன் நடுவண் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன் விளைவாக இந்தப் பாரம்பரியக் கட்சிக்கும் நடுவண் அரசாங்கப் பதவிகள் வழங்கப் பட்டன.[9][10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.