From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு அல்லது உப்கோ (ஆங்கிலம்: United Pasokmomogun Kadazandusun Murut Organisation); மலாய்: Pertubuhan Pasokmomogun KadazandusunMurut Bersatu) என்பது கிழக்கு மலேசியா, சபாவைச் சேர்ந்த கடசான், டூசுன், மூருட் இன மக்களையும் தீபகற்ப மலேசியாவில் பூர்வீக மக்களையும் பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் கட்சியாகும்.
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு United Pasokmomogun Kadazandusun Murut Organisation Pisompuruan Pasokmomogun Kadazandusun Murut | |
---|---|
தலைவர் | டான் ஸ்ரீ பெர்னர்ட் டொம்போக் Tan Sri Bernard G. Dompok |
செயலாளர் நாயகம் | டத்தோ வில்பரட் தாங்காவ் Datuk Wilfred M. Tangau |
தொடக்கம் | சபா மே 1964 |
தலைமையகம் | சபா பெனாம்பாங். |
இளைஞர் அமைப்பு | உப்கோ இளைஞர் அணி UPKO Youth |
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் | 1 / 222 |
இணையதளம் | |
http://upko.org/ |
உப்கோ என்று அழைக்கப்படும் இந்தக் கட்சி டான் ஸ்ரீ பெர்னர்ட் டொம்போக் என்பவரால், 1964 இல் தோற்றுவிக்கப்பட்டது.[1] சபாவில் வாழும் கடசான், டூசுன், மூருட் இன மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும் அந்தக் கட்சி அமைக்கப்பட்டது.
அண்மைய காலங்களில் இக்கட்சி தீபகற்ப மலேசியாவிலும் கிளைகளைத் திறந்துள்ளது. பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியாக இருக்கும் இந்தக் கட்சிக்கு, மலேசிய நாடாளுமன்றத்தில் நான்கு இடங்கள் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.