Remove ads
From Wikipedia, the free encyclopedia
கலாபகசுத் தீவுகள் ('Galápagos Islands, Archipiélago de Colón; வேறு ஸ்பானியப் பெயர்கள்: Islas de Colónumio அல்லது Islas Galápagos) என்பன பசிபிக் கடலில் எக்குவாடோருக்கு மேற்கே 965 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டங்கள் ஆகும் (1°S 91°W).[1]
கலாபகசுத் தீவுகள் Galápagos Islands | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | vii, viii, ix, x |
உசாத்துணை | 1 |
UNESCO region | இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1978 (2வது தொடர்) |
விரிவாக்கம் | 2001 |
கிட்டத்தட்ட 30,000 பேர் வசிக்கும் இத்தீவுகள் தென் அமெரிக்காவின் எக்குவாடோர் நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் "புவெர்ட்டோ பாக்குவெரிசோ மோரெனோ" (Puerto Baquerizo Moreno).
சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே HMS Beagle என்னும் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை அடைந்தன.
இங்கு 13 பெரிய தீவுகளும் 6 சிறிய தீவுகளும் 107 சிறிய தீவுத் திட்டுகளும் உள்ளன. இந்தத் தீவுகள் புவியியல் உயர் வெப்பப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எரிமலை வெடிப்பு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. மிகப் பழைய தீவு சுமார் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. மிகவும் அண்மையில் 2007 இல் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளினால் இசபெல்ல தீவு, பேர்டினட்டீனா தீவு ஆகியன உருவாகின.
கலாபகசுத் தீவுகளுக்கு ஐரோப்பியரின் வருகை மார்ச் 10, 1535 இல் ஆரம்பமானது. பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் இங்கு தரையிறங்கியது. 1593ல் ஆங்கிலேயர் "ரிச்சார்ட் ஹோக்கின்ஸ்" என்பவன் வந்திறங்கினான். பொதுவாக 19ம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை இத்தீவுகள் சென்னமெரிக்காவில் இருந்து ஸ்பெயினுக்கு பொன், வெள்ளி போன்றவற்றைக் கடத்தும் கடற்கொள்ளைக்காரர்களின் புகலிடமாகவே இருந்து வந்திருக்கிறது.
1793இல் ஜேம்ஸ் கோல்நெட் என்பவர் பசிபிக் கடலில் திமிங்கில வேட்டையாடுவோருக்கான மையமாக இதனை உருவாக்கினார். இவர்கள் இத்தீவுகளில் ஆயிரக்கணக்கான ஆமைகளை அவற்றின் கொழுப்புகளுக்காக வேட்டையாடிக் கொன்றனர். இந்த ஆமை வேட்டைகளினால் இத்தீவுகளின் பல உயிரினங்கள் முற்றாக அழிந்தோ அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்தோ வந்தது. இத்தீவில் புதிய வகை இராட்சத ஆமை ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக கடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் [2]
எக்குவாடோர் கலாபகசுத் தீவுகளை பெப்ரவரி 12, 1832இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவை எக்குவாடோரின் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்பட்டன. இதன் முதலாவது ஆளுநர் ஜெனரல் ஜோசே டெ வில்லாமில் என்பவர் பல சிறைக்கைதிகளை இங்கு கொண்டுவந்து குடியேற்றினார். அதன்பின்னர் பல அக்டோபர், 1832இல் பல விவசாயிகளும் குடியேறினர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.