From Wikipedia, the free encyclopedia
மேற்கிந்தியத் தீவுகள் அல்லது கரிபியன் (Caribbean, டச்சு: Cariben அல்லது Caraïben அல்லது Antillen; பிரெஞ்சு: Caraïbe அல்லது Antilles; ஸ்பானிஷ்: Caribe) அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதி ஆகும். இது கரிபியன் கடல், மற்றும் அதன் தீவுகள், அவற்றின் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கும். இப்பகுதி வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியையும் மத்திய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியையும் தென் அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
நீலம் = கரிபியன் கடல் பச்சை = மேற்கிந்தியத் தீவுகள் |
கரிபியன் தீவுகள் என்பது 2,500 மைல்கள் நீளமும் 160 மைல்களுக்கும் குறைவான அகலமும் கொண்ட ஒரு தீவுத் தொடராகும்.[1]
இப்பகுதியில் மொத்தம் 7,000 தீவுகள், சிறு தீவுகள், கடற்பாறைகள், மற்றும் மணற்திட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கரீபியன் கடலை சுற்றிலும் ஒரு தீவு சங்கிலியாக இவை படர்ந்து கிடக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்காக தெற்கே புளோரிடா முதல் வெனிசுலா வரை 4 ஆயிரம் கி.மீ., நீளத்துக்கு தீவுகள் சிதறியிருக்கின்றன. இதில் 11 சுதந்திர நாடுகளும் பிற நாடுகளின் ஆட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளும் உள்ளன. மேற்கிந்திய தீவில் கியூபா, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, ஜமைக்கா, பார்படோஸ், பஹாமாஸ், டிரினாட் மற்றும் டொபாகோ, டொமினிக்கா, செயின்ட் கிட்ஸ் நெவிஸ், செயின்ட் லூஸியா, செயின்ட் வின்சென்ட் கிரெனடா, ஆன்டிகுவா, பார்புடா என்ற நாடுகள் சேர்ந்ததே மேற்கிந்திய தீவு. இவற்றில் மிக பெரிய நாடு கியூபாவே. கரீபியன் கடலில் ஒரு பெரிய தீவையும், ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளையும் கொண்ட நாடு தான் கியூபா. மேற்கிந்தியாவின் ஒரு பகுதியான ஆன்டிலிஸின் மிக அழகிய தீவு கியூபாவே. இதனால்தான் இதனை ஆன்டிலிஸின் முத்து என்று அழைக்கின்றனர். அமெரிக்க கடற்படை கேந்திரங்களில் ஒன்றாக விளங்கும் குவன்டனாமா, கியூபாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.
மேற்கிந்தியத் தீவுகள் என்பவை அண்டிலெஸ் (Antilles), மற்றும் பஹாமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். பொதுவாக, மேற்கிந்தியத் தீவுகள் என்பது வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகவும் விடுதலை பெற்ற நாடுகள், வெளிநாட்டுத் தாபனங்கள், மற்ற நாடுகளில் தங்கியிருக்கும் பிரதேசங்கள் என மொத்தம் 28 தனியான பிரதேசங்களை உள்ளடக்கியவை ஆகும். ஒரு காலத்தில் 10 ஆங்கிலம்-பேசும் நாடுகளைக் கொண்ட "மேற்கிந்தியக் கூட்டமைப்பு" என்ற நாடு சிறிது காலம் இங்கிருந்தது.
ஐரோப்பிய மாலுமிகலான வாஸ்கோடகாமா போன்ற நாடுகாண்பயணிகள் இந்தியாவுடன் கடல் வழி வாணிபம் செய்வதற்காக பயணவழி வரையறுத்ததன் விளைவாக இந்த மேற்கிந்திய தீவுகள் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இந்த தீவுக்கூட்டங்கள் தான் இந்தியா என்று தவறாக கணித்த மாலுமிகள் பின்னர் அது இந்திய நிலப்பகுதி இல்லை என்று தெரிந்து கொண்டதும் இதற்கு மேற்கிந்திய தீவுகள் என அழைக்க தொடங்கினர்.
1492ல் ஐரோப்பிய கடற்பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ்சே மேற்கிந்திய தீவிற்குதான் முதன் முதலில் வந்தார். தான் வந்து சேர்ந்த இடம் இந்தியா என்று தவறாக நினைத்து இதற்கு மேற்கிந்தியா என்று பெயர் சூட்டினார். பிற்பாடு இங்குள்ள பல தீவுகளும் ஐரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக மாறியதை தொடர்ந்து ஐரோப்பிய கலாசாரம் இங்கு படர்ந்தது.
ஹைதியும், டொமினிக்கா குடியரசும் சேர்ந்த ஹிஸ்பானியோவா இப்பகுதியின் 2வது பெரிய தீவு. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஹாலந்து, வெனிசுலா போன்ற நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையே பிற நாடுகள். மேற்கிந்திய தீவுகள் அமெரிக்க கண்டத்தில் இருந்தாலும் வரலாற்றிலும் சரி, கலாசார அளவிலும் சரி அது ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களிலும் மிக அதிகமான தொடர்பு கொண்டது. உலகில் வேறு எந்த பகுதியும் இந்த அளவுக்கு சமூக பொருளாதார, கலாசார வேறுபாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.