From Wikipedia, the free encyclopedia
ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812 (Air India Express Flight 812), என்பது துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் மங்களூருக்கு இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவால் இயக்கப்படும் குறைந்த கட்டண வான் ஊர்தியாகும். இவ்விமானம் 22 மே 2010 அன்று காலை சுமார் 06:30 மணிக்கு மங்களூர் விமான நிலையத்தில் தரையிரங்கும் போது ஓடுதளத்தில் இருந்து விலகி பெரும் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சுமார் 160திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.[4].
விபத்துக்குள்ளான விமானத்தை ஒத்த ஏர் இந்தியா எக்சுபிரசு போயிங் 737 | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 22 மே 2010 |
சுருக்கம் | Runway overrun |
இடம் | மங்களூர் பன்னாட்டு விமானநிலையத்தின் ஓடுதளம் 06/24 இற்கு அப்பால் |
பயணிகள் | 160[1][2] |
ஊழியர் | 6[3] |
காயமுற்றோர் | 8 |
உயிரிழப்புகள் | 158[3] |
தப்பியவர்கள் | 8[3] |
வானூர்தி வகை | போயிங் 737-8HG |
இயக்கம் | ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் |
வானூர்தி பதிவு | VT-AXV |
பறப்பு புறப்பாடு | துபாய் |
சேருமிடம் | மங்களூர், இந்தியா |
பயணிகள் பட்டியலில் மொத்தம் 169 பெயர்கள் இருந்தாலும் 9 பயணிகள் விமானத்தில் ஏறவில்லை.[5] சுமார் 152 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, மேலும் விமானம் தீ பிடித்ததால் பலரது உடல்கள் அடையாளம் காண இயலாத அளவில் கருகியது.[6] இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனர் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.[7] இவர்களில் இறந்தவர்களில் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்தவர்கள் ஆவர்.[8]
நாடு | கொல்லப்பட்டவர்கள் | உயிர்பிழைத்தவர்கள் | மொத்தம் | |
---|---|---|---|---|
பயணிகள் | விமான ஊழியர்கள் | |||
வங்காளதேசம் | 0 | 0 | 1 | 1 |
ஐக்கிய இராச்சியம் | 0 | 1 | 0 | 1 |
இந்தியா | 152 | 5 | 7 | 164 |
மொத்தம் | 152 | 6 | 8 | 166 |
இவ்விமானத்தை ஓட்டிய விமானி 10,500 மணிநேரம் ஓட்டிய அனுபவம் உள்ளவர் என்றும் ஆனால் விபத்து நடந்த அன்றைய தினம் தொடர்ந்து 10 மணிநேரம் வரை தொடர்ந்து இயக்கியதாகவும் அதனால் அவர் களைப்படைந்திருக்கலாம் என்றும் தினத்தந்தி மே 24,2010 அன்று செய்தி வெளியிட்டுள்ளது (சென்னைப் பதிப்பு).
இறந்தவர்கள் குடும்பத்துக்கு ௹ 2,00,000 ம் காயமடைந்தவர்களுக்கு ௹ 50,000 ம் வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இவை பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் [9]. கருநாடக முதல்வர் எதியூரப்பாவும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ௹ 2,00,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார் [10]. இவையல்லாமல் மாண்ட்ரீல் கருத்தரங்கில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக இந்திய வான் பயண சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்ததின் படி இறந்தவர்கள் குடும்பத்துக்கு இந்திய ரூபாய் 72,00,000 வழங்கும் படி விமான நிருவனத்துக்கு விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது [11]. இடைக்கால இழப்பீடாக 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ௹ 10,00,000 ம் 12 வயதுக்கும் குறைவானவர்களுக்கு ௹ 5,00,000 ம் காயமடைந்தவர்களுக்கு ௹ 2,00,000 ம் வழங்குவதாக இந்தியன் ஏர்லைன்சு அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு பிரதமர் அறிவித்துள்ள இழப்பீடுக்கு மேலதிகமானதாகும்.[12]
தொடர்பான செய்திகள் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.