தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
எம். எம். தண்டபாணி தேசிகர் (ஆகத்து 27, 1908 - சூன் 26, 1972) ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
எம். எம். தண்டபாணி தேசிகர் | |
---|---|
பிறப்பு | திருச்செங்காட்டங்குடி, நன்னிலம், சென்னை மாகாணம், இந்தியா | 27 ஆகத்து 1908
இறப்பு | சூன் 26, 1972 63) | (அகவை
பணி | பேராசிரியர், பாடகர், நடிகர் |
அறியப்படுவது | தமிழசைக் கலைஞர், திரைப்பட நடிகர் |
பெற்றோர் | முத்தையா தேசிகர் |
தண்டபாணி தேசிகர் சென்னை மாகாணம் நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் முத்தையா தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். தெருவெங்கும் திருப்பாக்களைப் பாடி, தேவாரப் பாடகாசிரியராக அமர்ந்திருந்த தண்டபாணி தேசிகரை பட்டினத்தார் திரைப்படம் அவரைச் சென்னைக்கு இழுத்து வந்தது. பட்டினத்தார், நந்தனார் உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1952 தியாகராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு, சமசுகிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தை கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடினார்கள்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.