From Wikipedia, the free encyclopedia
உரோமை எண்ணுரு (Roman numerals) முறைமை பண்டைய உரோமில் உருவான ஓர் எண்குறி முறைமையாகும். இம்முறை ஐரோப்பா முழுவதும் பின்னைய நடுக்காலம் வரை நடைமுறையில் இருந்து வந்தது. இது பெறுமானங்கள் கொடுக்கப்பட்ட சில இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. உரோமை எண்ணுருக்கள் பின்வரும் ஏழு அடிப்படைக் குறியீடுகளைக் கொண்டுள்ளன:[1]
உரோமை எண்ணுருக்கள் உரோமைப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. கிபி 14-ஆம் நூற்றாண்டின் பின்னர், இவை பெரும்பாலும் மிகவும் எளிதான இந்து-அராபிய எண்ணுருக்களாக மாற்றப்பட்டன; ஆனாலும், உரோமை எண்ணுருக்கள் இப்போதும் சில இடங்கலில் பயன்பாட்டில் உள்ளன.
விக்டோரியா காலத்துக்குப் பிற்பட்ட, "நவீன" ரோம எண்ணுருக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:
ரோம | அராபிய | குறிப்பு |
---|---|---|
எதுவுமில்லை | 0 | சைபருக்கான தேவை இருக்கவில்லை. |
I | 1 | . |
II | 2 | . |
III | 3 | . |
IV | 4 | IIII இப்பொழுதும் மணிக்கூடுகளிலும், சீட்டு அட்டைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. |
V | 5 | . |
VI | 6 | . |
VII | 7 | . |
VIII | 8 | . |
IX | 9 | . |
X | 10 | . |
XI | 11 | . |
XII | 12 | . |
XIII | 13 | . |
XIV | 14 | . |
XIX | 19 | . |
XX | 20 | . |
XXX | 30 | . |
XL | 40 | . |
L | 50 | . |
LX | 60 | . |
LXX | 70 | . |
LXXX | 80 | . |
XC | 90 | . |
CC | 200 | . |
CD | 400 | . |
D | 500 | . |
CM | 900 | . |
M | 1000 | . |
ↀ | 1000 | M க்குப் பதிலாக C யும் D யும் பயன்படுத்தப்பட்டுள்ளது. |
MCMXLV | 1945 | . |
MCMXCIX | 1999 | குறுக்குவழிகள் இல்லாததைக் கவனிக்கவும், I, V அல்லது X க்கு முன் மட்டுமே வரமுடியும். |
MM | 2000 | . |
MMM | 3000 | . |
ↁ | 5000 | . |
ↂ | 10000 | . |
Ↄ | Reversed 100 | Reversed C, used in combination with C and I to form large numbers. |
பெரிய எண்களை ரோம எண்ணுருக்களில் எழுதுவதற்குச் சரியான முறை, முதலில் ஆயிரத்திலிருந்து தொடங்கி, நூறு, ஐம்பது, பத்து என எழுதுவதேயாகும்.
உரோமை எண்ணுருக்கள் பழைய உரோமை எண்ணுருவான எத்துருசிய (Etruscan) எண்ணுருவிலிருந்து உருவானது. இவ்வடிவமானது இப்போது நாம் பயன்படுத்தும் அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டதாகும். எடுத்துக்காட்டாக, I, V, X, L, C, M ஆகிவற்றுக்கு 𐌠, 𐌡, 𐌢, 𐌣, 𐌚, ⊕ ஆகிய எத்துருசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் I, X ஆகியன மட்டுமே எழுத்துக்களைக் கொண்டிருந்தன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.