From Wikipedia, the free encyclopedia
C (சீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] இது ஆங்கிலத்தில் ஸீ எனப் பலுக்கப்படும். உரோம எண்களில் C என்பது 100ஐக் குறிக்கும். பதினறும எண் முறைமையில் C என்பது 12ஐக் குறிக்கும்.
வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[2] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும். இயற்கணிதத்தில் சேர்மானங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவும் C பயன்படுத்தப்படும். சிக்கலெண்களின் தொடையைக் குறிப்பிட பயன்படுத்தப்படும்.
இயற்பியலில், கொள்ளளவத்தைக் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. மின்னேற்றத்தின் அனைத்துலக முறை அலகான கூலோத்தின் குறியீடு C ஆகும். வெற்றிடத்தில் ஒளியின் கதி cஆல் குறிக்கப்படும்.
வேதியியலில், காபனின் வேதிக் குறியீடு C ஆகும். மூலர்ச் செறிவைக் குறிக்க c பயன்படுத்தப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.