தமிழ் நடிகர் From Wikipedia, the free encyclopedia
உசிலை மணி (Usilai Mani) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ளார். இவர் சுமார் 1000 படங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள் எங்க ஊரு காவல்காரன், ஆயுள் கைதி போன்றவை ஆகும். இவரது பிரபலமான உரையாடலாக 'பேஷ் ... பேஷ் ... ரொம்ப நன்னாயிருக்கு... என்ற நரசுஸ் காபியின் விளம்பரம் 1980 கள் மற்றும் 1990 களில் மிகவும் பிரபலமானதாக இருந்தது.
உசிலைமணி | |
---|---|
பிறப்பு | சுப்ரமணியன் ஐயர் 1934 தமிழ்நாடு, மதுரை, உசிலம்பட்டி |
இறப்பு | 14 மே 1996 |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1965-1991 |
பெற்றோர் | தந்தை : கிருஷ்ணன் ஐயர் தாயார் : சுப்புலட்சுமி |
வாழ்க்கைத் துணை | மீனாட்சி |
பிள்ளைகள் | மகன் : ராஜூ மகள் : சாந்தி |
இவரது இயற்பெயர் சுப்ரமணியன் ஐயர். இவர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஷ்ணன் ஐயர்–சுப்புலட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பின்பு தனது அண்ணனுடன் மதுரைக்கு அருகே உள்ள உசிலம்பட்டி ஓட்டல் வியாபாரம் செய்து வந்தனர். பின்பு இவரது ஊர்ப் பெயரையும் சேர்த்து சுருக்கமாக உசிலை மணி என்று அழைக்கப்பட்டார் .[1]
இயல்பான முறையில் நடிப்பவர் உசிலை மணி. யானை போன்ற இவரது உருவமே சிரிப்பை வரவழைக்ககூடியது. தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்திருந்தாலும், இவர் 1000 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி முதல் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விசயகாந்து, மோகன் போன்ற நடிகர்கள் வரை அதாவது மூன்று தலைமுறை நடிகர்களுடன் நகைச்சுவை நடிகராக நடித்தார்.[2]
1993 இல் இவர் சில மாதங்கள் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் இவரது இரண்டு கால்களும் அகற்றப்பட்டன. இதன் பின்னர், இவர் தன் நடிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். 14. 5. 1996 அன்று இவர் தனது 62 ஆம் வயதில் காலமானார். இவருக்கு ஒரு மனைவி, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.[3]
இது முழுமையான பட்டியல் அல்ல நீங்கள் இதை விரிவாக்கலாம்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1965 | திருவிளையாடல் | ||
1966 | செல்வம் | ||
1966 | மகாகவி காளிதாஸ் | கவிஞர் | |
1966 | சாது மிரண்டால் | ||
1966 | வாலிப விருந்து | ||
1966 | பெற்றால்தான் பிள்ளையா | ஐயர் | |
1967 | காவல்காரன் | நோயாளி | |
1968 | கல்லும் கனியாகும் | ||
1968 | கணவன் | ||
1968 | ஒளி விளக்கு | ||
1968 | கண்ணன் என் காதலன் | போலி ஜோதிடர் | |
1968 | சோப்பு சீப்பு கண்ணாடி | ||
1968 | ஜீவனாம்சம் | ||
1968 | நாலும் தெரிந்தவன் | ||
1968 | அன்று கண்ட முகம் | ||
1968 | ரகசிய போலீஸ் 115 | ||
1969 | காவல் தெய்வம் | ||
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1970 | மாட்டுக்கார வேலன் | ||
1970 | காலம் வெல்லும் | ||
1970 | கண்மலர் | ||
1970 | பாதுகாப்பு | ||
1971 | குமரிக்கோட்டம் | ||
1971 | ஆதி பராசக்தி | ||
1971 | சவாலே சமாளி | ||
1971 | ரிக்சாகாரன் | ||
1971 | நீரும் நெருப்பும் | ||
1971 | தெய்வம் பேசுமா | ||
1972 | திருநீலகண்டர் | ||
1972 | நீதி | ||
1972 | ராமன் தேடிய சீதை | ||
1972 | என்ன முதலாளி சௌக்கியமா | ||
1972 | அகத்தியர் | ||
1972 | ஜக்கம்மா | ||
1972 | நம்ம வீட்டு தெய்வம் | ||
1973 | சொல்லத்தான் நினைக்கிறேன் | ||
1973 | மணிப்பயல் | ||
1973 | நத்தையில் முத்து | ||
1973 | பொன்னூஞ்சல் | ||
1973 | மறுபிறவி | ||
1974 | எங்கம்மா சபதம் | ||
1974 | பிள்ளைச்செல்வம் | ||
1974 | அன்புத்தங்கை | ||
1974 | உரிமைக்குரல் | ||
1974 | பிராயசிர்த்தம் | ||
1974 | டாக்டரம்மா | ||
1974 | அக்கா | ||
1975 | மாலை சூடவா | ||
1975 | புது வெள்ளம் | ||
1975 | இதயக்கனி | ||
1975 | பிஞ்சு மனம் | ||
1976 | கணவன் மனைவி | ||
1976 | முத்தான முத்தல்லவோ | ||
1976 | உழைக்கும் கரங்கள் | ||
1977 | சொல்லு கண்ணா சொல்லு | ||
1978 | காற்றினிலே வரும் கீதம் | ||
1978 | சட்டம் என் கையில் | ||
1978 | அதிரிஷ்டக்காரன் | ||
1978 | இவள் ஒரு சீதை | ||
1978 | புண்ணிய பூமி | ||
1978 | ஜெய்க்கானே ஜனிச்சவன் | மலையாளம் | |
1979 | இனிக்கும் இளமை | ||
1979 | நான் வாழவைப்பேன் | ||
1979 | கவரிமான் | ||
1979 | பட்டாகத்தி பைரவன் | ||
1979 | திசை மாறிய பறவைகள் | ||
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | பில்லா | ||
1980 | பாமா ருக்மணி | ||
1980 | எல்லாம் உன் கைராசி | ||
1980 | திரையம் தீரவம் | மலையாளம் | |
1980 | அன்புக்கு நான் அடிமை | ||
1981 | சஞ்சரி | மலையாளம் | |
1982 | சிம்லா ஸ்பெஷல் | ||
1982 | தனிக்காட்டு ராஜா | ||
1982 | பரிச்சைக்கு நேரமாச்சு | ||
1982 | அயிரம் முத்தங்கள் | ||
1983 | உயிருள்ளவரை உஷா | ||
1983 | சிவப்பு சூரியன் | ||
1983 | தங்கைக்கோர் கீதம் | ||
1983 | அபூர்வ சகோதரிகள் | ||
1983 | சமயபுரத்தாலே சாட்சி | ||
1984 | உறவை காத்த கிளி | ||
1984 | அன்புள்ள ரஜினிகாந்த் | ||
1984 | நிரபராதி | ||
1984 | தராசு | ||
1984 | நினைவுகள் | ||
1985 | ஓரு மலரின் பயனம் | ||
1985 | உயர்ந்த உள்ளம் | ||
1985 | உதயகீதம் | ||
1985 | கன்னிராசி | ||
1985 | ஆண்பாவம் | ||
1986 | முதல் வசந்தம் | ||
1986 | மைதிலி என்னை காதலி | ||
1986 | அறுவடை நாள் | ||
1986 | தழுவாத கைகள் | ||
1987 | ஆனந்த் | ||
1987 | எங்க ஊரு பாட்டுக்காரன் | ||
1988 | என் தங்கை கல்யாணி | ||
1988 | ராசவே உன்னை நம்பி | ||
1988 | எங்க ஊரு காவல்காரன் | ||
1988 | பாசப் பறவைகள் | ||
1988 | நெத்தியடி | ||
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1990 | பாட்டாளி மகன் | ||
1990 | பாலைவன பறவைகள் | ||
1990 | ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன் | ||
1990 | மைக்கேல் மதன காமராஜன் | ||
1990 | புதுப்பாடகன் | ||
1991 | ஆயுள் கைதி (திரைப்படம்) | ||
1991 | நம்ம ஊரு மாரியம்மா (திரைப்படம்) | ||
1991 | மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் | ||
1991 | பொண்டாட்டி பொண்டாட்டிதான் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.