இராவுத்தர் அல்லது ராகுத்தம்மார்[1] (Rowther or Raguttar or Ravuthamar) என்பவர்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் ஆவர். முஸ்லிம் பிரிவை சேர்ந்த இவர்கள், ஹனபி வழிமுறையை பின்பற்றுகின்றனர். மேலும் இவர்கள் தென் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய முழுவதும் பரவியுள்ளனர்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, மொழி(கள்) ...
இராவுத்தர் அல்லது ராவுத்தர்
Thumb
மொத்த மக்கள்தொகை
தமிழ்நாடு, கேரளம் சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
சன்னி இஸ்லாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்
மூடு

பெயர் காரணம்

'இராவுத்தர்' என்பதற்கு குதிரை வீரன் என்று பொருள்.[2] குதிரை வணிகம் செய்ய வந்த வீரர்கள் 'இராவுத்தர்' என்று அழைக்கப்பட்டனர்[3]. மரைக்காயர் (மரக்கலம்+ஆயர்) என்றால் கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அரபி மொழியில் 'ராபித்து' என்றால் 'எதிரியை எதிர்க்க சித்தமாக இருப்பவன்' அதாவது போருக்கு சித்தமாக இருப்பவர் என்று பொருள்[4].

வரலாறும்

கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் உதவியுடன் செல்யூக் பேரரசை சேர்ந்த துருக்கிய குதிரை வியாபாரிகள் கூட்டம் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது. அவர்களுடன் வந்த இஸ்லாமிய போதனை குழுக்கள் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், காரைக்கால், தோப்புத்துறை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை, கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடி ஆகிய ஊர்களில் தங்கி இஸ்லாம் மதத்தை பரப்பினர். பின்னர் தஞ்சாவூர் வந்த இவர்கள், இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பொருட்டு அங்கேயே தங்கிவிட்டனர். இவர்களின் வம்சாவளிகளின் வழித்தோன்றல்களே இராவுத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ராஜ்ஜியம் மற்றும் இராணுவம்

இராவுத்தர்கள் போர் மரபைக் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் தென் இந்தியா மற்றும் தமிழ் ராஜ்ஜியங்களில் குதிரைப்படை தளபதிகள், குதிரை வீரர்கள் , தன்னகத்தே சிலர் பெரும் குதிரை படைகளையும் வைத்திருந்தனர். 15ஆம் நூற்றாண்டில் பர்வத இராவுத்தர் என்னும் அரசர் கொங்கு நாட்டில் சிற்றசராக செய்தார். நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தமிழை தாய் மொழியாகக் கொண்ட இராவுத்தர்கள் சிற்றரசர்களாக இருந்துள்ளனர்[5]. 1730 ஆம் ஆண்டுகளில் சேதுபதி மன்னரின் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி மகன் கடம்ப தேவரின் சிறந்த காவல் தலைமை தளபதியாக இருந்தவர் ராவுத்தன் சேர்வைகாரர் என்பவர் [6].

மேலும் சில தகவல்கள்

  • இராவுத்தர்கள் தமிழ் மொழியை மட்டுமே பேசுகின்றனர், உருது பேசுவதில்லை.
  • இவர்களின் பெரும்பாலான பழக்கவழக்கங்கள், குறிப்பாக திருமணம் மற்றும் சுபவிழாக்கள் இந்து மதத்தினரின் சாயலை பெரும்பாலும் கொண்டுள்ளது.
  • தற்போதும் இவர்கள் பெரும்பாலும் வணிகங்களிலேயே ஈடுபடுகின்றனர்.
  • இவர்கள் பேசும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் சிறிது வேறுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:- அப்பா - அத்தா, குழம்பு - ஆணம்.
  • இவர்கள் மற்ற தமிழ் முஸ்லிம் பிரிவுகளை போல் அல்லாமல் பெரும்பாலும் வெளிர் நிறத்திலேயே உள்ளனர்.

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.