பரவலாக அண்ணா ஹசாரே (Anna Hazare) என்று அறியப்படும் கிசான் பாபுராவ் அசாரே (Kisan Baburao Hazare, பிறப்பு: சனவரி 15, 1938), ஓர் இந்திய சமூக சேவகர். கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வெளிப்படையான அரசாங்க செயல்பாடுகளை அதிகரிக்கவும், விசாரணை மற்றும் உத்தியோக ஊழல்களை தண்டிக்கவும் இயக்கங்கள் அமைத்த இந்திய சமூக ஆர்வலர் ஆவார்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
கிசான் பாபட் பாபுராவ் அசாரே | |
---|---|
பிறப்பு | சனவரி 15, 1940 பிங்கார், மகாராட்டிரம், இந்தியா |
அறியப்படுவது | நீர்ப்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்; தகவல் அறியும் உரிமைச் சட்டம்; ஊழல் எதிர்ப்பு இயக்கம் |
சமயம் | இந்து |
பெற்றோர் | லட்சுமிபாய் அசாரே (தாய்) பாபுராவ் அசாரே (தந்தை) |
வலைத்தளம் | |
http://www.annahazare.org |
அடிமட்ட இயக்கங்களை அமைக்கவும் ஊக்குவிப்பதைத் தவிரவும் ஹசாரே தனது தந்திரோபாயத்தை நினைவுபடுத்தும் வகையில் அடிக்கடி நடத்திய உண்ணாவிரதம் மோகன்தாசு கரம்சந்த் காந்தி [1][2][3] சத்தியாக்கிரக போராட்டத்தை பலருக்கும் நினைவு படுத்தியது. ஹசாரே மகாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டம் பர்நேர் தாலுகாவில் ரலேகன் சித்தியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு பணியாற்றினார். மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக இந்த கிராமத்தை ஏற்படுத்துவதில் அவரின் பங்களிப்பிற்காக அவருக்கு நாட்டின் மூன்றாம் மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் 1992 ல் வழங்கப்பட்டது.
ஒரு தனி மனிதனின் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் குறைகேள் அதிகாரி நிறுவனம் அமைத்து பொது இடங்களில் உள்ள ஊழல்களை சமாளிக்கவும் ஜன லோக்பால் மசோதாவை போல் லோக்பால் மசோதா 2011 அமைத்து கடுமையான ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றவும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி ஏப்ரல் 5, 2011-ல் கால வரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அரசாங்கம் ஹசாரே-வின் கோரிக்கைகளை ஏற்ற ஒரு நாளைக்குப்பிறகு 9 ஏப்ரல் 2011-ம் தேதி உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. அரசாங்கம் மற்றும் மக்கள் சமூக பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு குழு அமைத்து சட்ட வரைவு எழுத அரசாங்கம் ஒரு அரசிதழ் அறிவிப்பு வெளியிட்டது.[4][5]
2011-ன் உலக சிந்தனையாளர்கள் பட்டியலின் முதல் 100 இடங்களில், வெளி நாட்டு கொள்கை இதழ் அவரின் பெயரையும் வெளியிட்டது.[6] மேலும் 2011-ல் அன்னா மும்பையில் வெளியாகும் தேசிய நாளிதழ் மூலம் மிகுந்த மக்கள் செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றார்.[7] அவருடைய நீதியை நிலைநாட்டும் சர்வாதிகார கருத்துகெதிராகவும், ஊழல் செய்த பொது அதிகாரிகளின் மரண தண்டனை கொள்கைக்கெதிராகவும், வாசெக்டமி முறை மூலம் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு ஆதரவுக்கெதிராகவும் அவர் மாறுபட்ட விமர்சனங்களை சந்தித்தார்.[8][9]
2009-ல் அன்னா ஹசாரே-வை கொலை செய்யும் சதி வெளிப்படுத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர் பதவி வகித்தவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் நெருங்கிய உறவினருமான பத்மசிங் படிலே சதிக்கு காரணம் என்று ஹசாரே குற்றம் சாட்டினார். கொலை சதி தொடர்பான வழக்கு நடந்து தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
இளமைப் பருவம்
கிசான் ஹசாரே 15 ஜூன் 1937-ல் (1940 என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன) அஹமத்நகர் அருகில் உள்ள பிங்கர் என்ற இடத்தில் பிறந்தார்.அவர் இரண்டு சகோதரிகளுக்கும், நான்கு சகோதரர்களுக்கும் முன்னால் பிறந்த மகன் ஆவார். அவர் பின்னர் மராத்தியில் " மூத்த நபர் " அல்லது " தந்தை " என பொருள்படும் " அண்ணா " என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். அவருடைய தந்தை மருந்தகத்தில் வேலை பார்த்தபோதிலும் குடும்ப பராமரிப்புக்கு நிதி பற்றாக் குறையால் போராடினார். அந்த சமயத்தில் தங்கள் மூதாதையரின் சொந்த விவசாய நிலம் இருந்த " ரலேகன் சித்தி " என்ற சிறிய கிராமத்திற்கு குடும்பம் இடம் பெயர்ந்தது. ஆரம்பப் பள்ளி கூட அந்த கிராமத்தில் இல்லாததால் கிசானின் படிப்பிற்கு உறவினர் ஒருவர் பொறுப்பேற்று மும்பைக்கு அழைத்துச் சென்றார். உறவினரின் நிதி நிலைமை சரியில்லாததால் கிசானின் படிப்பு அவரின் ஏழாம் வகுப்புடன் முடிவு பெற்றது; அவரின் உடன் பிறந்தவர்கள் பள்ளிக்குச் செல்லவே இல்லை. அவர் மும்பை ரயில் நிலையத்தில் பூ விற்க ஆரம்பித்து இறுதியில் அம்மாநகரத்தில் இரண்டு பூக்கடைகளை சொந்தமாக நிறுவினார்.[10] அவர் எப்பொழுதும் எச்சரிக்கையாகவும், ஏழைகளின் தங்குமிடத்தை குண்டர்களை வைத்துப் பறிக்கும் நில உரிமையாளர்களைத் தடுக்கும் குழுக்களிலும் இணைந்து செயல்பட்டார்.
படைத்துறை பணி
1962-ல் நடந்த இந்திய-சீனா போர், இந்திய இராணுவத்தில் அவசர ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு வழி வகுத்தது. ஹசாரே தேவையான உடல் தகுதி இல்லாதவராக இருந்த போதிலும் 1963-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு ஔரங்காபாத்தில் பயிற்சி மேற்கொண்ட பின் அந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு சிப்பாயாக உறுதி செய்யப்பட்டார்.[11]
1965-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது ஹசாரே கேம் கரன் துறையில் எல்லையில் பணிக்காக அனுப்பப்பட்டார். அவர் எதிரிகளின் குண்டு வீச்சிலிருந்தும், வான் வழி தாக்குதலிளிருந்தும், துப்பாக்கிச் சுடுதலிளிருந்தும் எல்லையிலிருந்து தப்பிய ஒரே கனரக வண்டி (TRUCK) ஓட்டுநர் ஆவார்.[12] சிறு வயது வறுமை இணைந்த போர்க்கால அனுபவங்கள் அவரை மிகவும் பாதித்தது. அவர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய நினைத்து பின் வாழ்க்கை மற்றும் இறப்பின் பொருளை உணர்ந்து கைவிட்டார். அவர் கனரக வண்டி தாக்குதல் என்னை மறுபடி நினைக்க வைத்தது பற்றி கூறினார். கடவுள் என்னை சில காரணங்களுக்காக நான் உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதினார். நான் கேம் கரன் போர்க்களத்திலிருந்து மறுபிறவி எடுத்துள்ளேன். என் புதிய வாழ்க்கையை மக்கள் சேவைக்கு செலவிட முடிவு செய்துள்ளேன். அவர் தனது ஓய்வு நேரத்தை சுவாமி விவேகானந்தா, காந்தி மற்றும் வினோபா பாவே ஆகியோரின் படைப்புகளைப் படிப்பதில் செலவிட்டார்.[13] அவர் ஒரு வலைதள செய்தி வெளியீட்டில் "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கெதிராக போரில் பங்கு பெற தயார் என்றும் கூறியுள்ளார்.
1970 மத்தியில் இராணுவ வாகனத்தை ஓட்டும் போது ஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார். இவ்விபத்திளிருந்து உயிர் தப்பியது தனது வாழ்க்கையின் நோக்கம் மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதன் அறிகுறியாகும் என்று நம்பினார். அவர் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்த போதிலும், உத்தியோகபூர்வ பதிவுகள் அவரின் 12 ஆண்டு சிறப்பான சேவை முடிந்து 1975-ல் வெளியேறியதாகக் குறிப்பிடுகின்றது.[14]
ரலேகன் சித்தியின் மாற்றம்
ரலேகன் சித்தி யைப் பற்றி " கடுமையான வறுமை, இழப்பு, வலுவிழந்த சுற்றுச் சூழ்நிலை,புறக்கணிக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையிழந்த இந்திய கிராமங்களில் ஒன்று " என்று சத்பதி மற்றும் மேத்தா விவரித்த இடத்திற்கு ஹசாரே திரும்பினார்.[15]
பொதுவாக எல்லா கிராமங்களுக்கும் சில நிலம் சொந்தமானது என்றாலும், பருவ மழையின் நீரை சேமிக்க முடியாத பாறை நிலம் சாகுபடி செய்ய உகந்ததாக இல்லை. மரத்தை வெட்டுதல், நில அரிப்பு மற்றும் வறட்சி ஆகியவற்றுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் சேர்ந்து இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மறுபயன்பாடு ஆகிய காரணங்களால் சுகாதாரமற்ற நிலைமையும் நோய் பரவும் அபாயமும் இருந்தது. கிராம பொருளாதாரம் சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் மதுவை சார்ந்தும், கிராம மக்கள் இந்த பொருளை சார்ந்து இருக்கும் நிலைமையுமாக மாறியது. பல கிராம மக்கள் மிக அதிகமாக, 10% மாத வட்டிக்கு கடன் வாங்கி உயிர் கடன்காரர்கள் ஆனார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறைவாக இருந்த அந்த சமயத்தில் குற்றமும் வன்முறையும் (உள்நாட்டு வன்முறை உட்பட) மிகவும் சாதாரணமாக நடைபெற்றது.[16]
ஹசாரே அவரது இராணுவ சேவையில் இருந்து முடிவு பெற்று வந்தபோது கிடைத்த உபகாரத் தொகையால் ஓரளவு வசதியானவராக இருந்தார். ஹசாரே அந்தத் தொகையை வீண் செலவு செய்யாமல் கிராமத்தில் அழியும் நிலையிலிருந்த கோவிலை மீட்டு சமூகத்திற்கு ஒரு மைய புள்ளியாக மாற்றினார். சிலபேர் சிறு நன்கொடைகள் வழங்கியபோதிலும் பல கிராம மக்கள் அதிலும் முதியவர்கள் " ஷ்ராம்தான் " என்றழைக்கப்படும் முறையில் தங்கள் தொழிலாளர்களை வழங்கினர். இளைஞர்கள் இந்த வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் " தருண் மண்டல் " என்றழைக்கப்படும் இளைஞர் சங்கத்தை துவங்கினார். அவர் படித்த விவேகனந்தரின் படைப்புகளில் " CALL TO THE YOUTH FOR NATION BUILDING ", அதாவது தேசத்தை கட்டியெழுப்ப இளைஞர்களை கூப்பிடு என்பதும் ஒன்று.
மது தடை
ஹசாரே மற்றும் இளைஞர் சங்க உறுப்பினர்கள் சீர்திருத்த முறையை கொண்டுவர மதுப்பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனையை கையிலெடுக்க முடிவெடுத்தனர். கிராமத்தில் மதுவை தடை செய்யவும் மறைவிடங்களில் காய்ச்சும் மதுக்கடைகளை மூடவும் கோவிலில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த முடிவு கோவிலில் எடுக்கப்பட்டதல் கிராம மக்களுக்கு இது ஒரு மதம் சார்ந்த முடிவாகவும் கடமையாகவும் மாறியது. முப்பதுக்கும் மேற்பட்ட மது தயாரிக்கும் கிடங்குகளின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்களது நிறுவனங்களை மூடினர். சமூக முடிவுகளுக்கு கட்டுப்படாத சிலர், இளைஞர்கள் தங்கள் வளாகத்தை அடித்து நொறிக்கியபோது நிறுவங்களை மூடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். சட்ட விரோதமாக தொழில் நடத்தியதால் உரிமையாளர்களால் புகார் கொடுக்க முடியவில்லை.[17]
கிராமத்தில் உள்ள குடிகாரர்களை தூண்களில் கட்டி பின் சாட்டையால் அடித்தனர், சில சமயம் ஹசாரே தனிப்பட்ட முறையில் அடித்தார். அவர் " கிராமப்புற இந்தியா ஒரு கடுமையான சமூகமாக உள்ளது " என்று கூறி இந்த தண்டனை நியாயமானது என்கிறார். மேலும்,25% கிராமப் பெண்கள் தடை விதிக்கக் கோறும்போது ஒரு சட்டம் இயற்றி அந்த தடையை அமல் படுத்த வேண்டும் என்று ஹசாரே மகாராஷ்டிரா அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 2009-ல் மாநில அரசு, பாம்பே தடைச் சட்டம் 1949 -ஐ இதைப் பிரதிபலிக்கும் முறையில் திருத்தி அமைத்தது.
கிராமத்தில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடி (காகிதத்திற்குப் பதிலாக டெண்டு (Diospyros Melanoxylon) இலைகளால் புகையிலை உருட்டுவது போல் சுருட்டப்பட்ட வடிகட்டப்படாத சிகரெட்) ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை செயல்படுத்தும் பொருட்டு இளைஞர் சங்கம் ஒரு தனிப்பட்ட " ஹோலி " விழாவை 22 வருடங்களுக்கு முன்னால் நிகழ்த்தியது. இந்த ஹோலிப் பண்டிகை தீய சக்திகளை எரிக்கும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இளைஞர் சங்கம் கிராமத்தின் கடைகளில் இருந்த புகையிலை, சிகரெட் மற்றும் பீடிகளை கொண்டு வந்து ஹோலி-த் தீயில் இட்டு எரித்தது. புகையிலை, சிகரெட் மற்றும் பீடி ஆகியவை இப்பொழுதும் விற்கப்படவில்லை.[18][19]
தானிய வங்கி
வறட்சி அல்லது பயிர் விளையாத காலங்களில் தேவைப்படும் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்துடன் 1980-ல் கோவிலில் தானிய வங்கி தொடங்கினார். பணக்கார விவசாயிகளோ அல்லது உபரி தானிய உற்பத்தி உள்ளவர்களோ ஒரு குவிண்டால் அளவு தானியத்தை வங்கிக்கு கொடுக்கலாம். தேவைப்படும்போது விவசாயிகள் தானியத்தைப கடனாகப் பெற முடியும். ஆனால் அவர்கள் வாங்கிய அளவு தானியத்துடன் கூடுதலாக ஓரு குவிண்டால் தானியம் வட்டியாக திருப்பித் தர வேண்டும். இந்தத் திட்டத்தால் கிராமத்தில் யாரும் பசியுடனோ அல்லது பணக் கடனுடன் தானியம் வாங்கும் நிலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் திட்டம் அறுவடை நேரத்தில் குறைந்த விலையில் தானியம் விற்கும் துயரத்தையும் தடுத்தது.
ஆற்று பள்ளத்தாக்கு வளர்ச்சி திட்டம்
ரலேகன் சித்தி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதனால் ஹசாரே மலையடிவாரத்தில் ஒரு ஆற்றுப் பள்ளத்தாக்கு அமைத்து அது தொடர்பான மற்ற வேலைகளை அதாவது ஓடும் தண்ணீரை நிறுத்தி ஊற்றாக மாறும் படியும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், அந்தப் பகுதியில் பாசனத்தை மேம்படுத்தவும் கிராம மக்களை ஊக்குவித்தார். இந்த முயற்சிகள் கிராமத்தில் நீர் பற்றாக்குறையை தீர்க்கவும், பாசனத்திற்கு வழி வகுக்கவும் செய்தது. சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படும் கரும்பு போன்றவை பயிரிட தடை செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் குறைந்த தண்ணீரில் அதிக லாபம் தரும் பயிர்கள் பயிரடப்பட்டது. பயிரீட்டு முறைகளை மாற்றி அதிக லாபம் தரும் பயிர்களை பயிரிட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 70-க்கும் மேற்பட்ட வறட்சி மிகுந்த பகுதிகளில் இருந்த விவசாயிகளுக்கு ஹசாரே 1975 முதல் உதவினார்.[20] 1975-ல் ஹசாரே ரலேகன் சித்தி-க்கு வரும் போது 70 ஏக்கர் நிலத்தில் மட்டுமே பாசனம் செய்யப்பட்டிருந்ததை, ஹசாரே 2500 ஏக்கராக மாற்றினார்.
பால் உற்பத்தி
பகுதி நேர வேலையாக ரலேகன் சித்தியில் பால் உற்பத்தி மேம்படுத்தப்பட்டது. புதிய கால் நடை வாங்குவது, செயற்கை முறை கருவூட்டலின்படி தற்போதுள்ள கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் விலங்கியல் மருத்துவர் சரியான நேரத்தில் வழிகாட்டி மற்றும் உதவி செய்தது ஆகியவை கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பால் உற்பத்தியைப் பெருக்கவும் வழி வகுத்தது.
கல்வி
ரலேகன் சித்தியில் ஒரே ஒரு வகுப்பரையுடன், முதல் சாதாரண ஆரம்பப் பள்ளி 1932-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சமூக தன்னார்வத் தொண்டர்கள் மூலம் மேலும் சில வகுப்பறைகள் சேர்க்கப்பட்டது. 1971-ல் மக்கள் தொகை மதிப்பீட்டின்படி அங்கிருந்த 1,209 பேரில் 30.43% (72 பெண்கள் மற்றும் 290 ஆண்கள்) மக்களே படிப்பறிவு பெற்றிருந்தனர். உயர் கல்வியைத் தொடர ஆண் பிள்ளைகள் அருகிலுள்ள ஷிரூர் மற்றும் பார்னர் நகரங்களுக்கு சென்றனர்.ஆனால், பெண் பிள்ளைகளின் படிப்பு ஆரம்பக் கல்வியுடன் நிறுத்தப்பட்டது. ஹசாரே இளைஞர்களுடன் சேர்ந்து எழுத்தறிவு விகிதம் மற்றும் கல்வி நிலையை உயர்த்த பாடுபட்டார். அவர்கள் 1976-ல் ஒரு மாதிரிப் பள்ளியையும் (PRE SCHOOL) 1979-ல் உயர்நிலைப் பள்ளியையும் தொடங்கினர். கிராம மக்கள் ஒரு தருமஸ்தல நிறுவனம் , சந்த் யாதவ்பாபா ஷிக்ஷன் பிரசாரக் மண்டல் என்ற பெயரில் அமைத்தனர். பின்னர் அது 1979-ல் பதிவு செய்யப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு
இந்தியாவின் சாதியமைப்பு காரணமாக இருந்த சமூக தடைகள் மற்றும் பாகுபாடு ஆகியவை ரலேகன் சித்தி கிராம மக்களால் பெருமளவில் ஒழிக்கப்பட்டது. தீண்டாமை மற்றும் சாதி பாகுபாடு ஒழிப்புக்கு , ஹசாரே-வின் தார்மீக தலைமை, கிராம மக்களை ஊக்குவித்து அவர்களின் மனதைக் கவர்ந்தது. தலித் மக்களின் திருமணம் மற்ற சாதியினரின் சமூக திருமண விழாக்களுடன் இணைந்து ஒரு பகுதியாக நடைபெற்றது. தலித் மக்கள் கிராமத்தின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையுடன் ஒன்றிணைந்தனர். உயர் சாதி கிராம மக்கள் கீழ் சாதி தலித் இன மக்களுக்கு " ஷ்ரம்தான் " திட்டம் மூலம் வீடு கட்டிக் கொடுத்தும் அவர்கள் கடனை அடைக்கவும் உதவினர்.[21][22][23]
கூட்டு திருமணங்கள்
பெரும்பாலான ஏழை கிராமத்தினர், தங்களின் மகன் அல்லது மகள் திருமணத்தின்போது ஏற்படும் அதிக செலவினால் கடன் வலையில் சிக்கினர். இது ஒரு விரும்பத்தகாத நடைமுறையாக ஆனால் ஒரு சமூக கடமையாகவே இந்தியாவில் உள்ளது. இதற்குப் பதிலாக ரலேகன் சித்தியினர், கூட்டுத் திருமணத்தை கொண்டாடத் தொடங்கினர். கூட்டு விழாக்கள் நடைபெற்றதாலும், தருண் மண்டல் சமையல் மற்றும் உணவு பரிமாறும் பொறுப்பைத் தன்வசம் எடுத்துக் கொண்டதாலும் செலவு மேலும் குறைந்தது. பாத்திரங்கள், ஒலிபெருக்கி, மண்டபம் மற்றும் அலங்காரங்கள் ஆகியவையும் ஒடுக்கப்பட்ட தருண் மண்டல் உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். 1976 முதல் 1986 வரை 424 திருமணங்கள் இந்த முறையின் மூலம் நடத்தப்பட்டது.
கிராம சபா
இந்திய கிராமங்களில் கிராமப்புற வளர்ச்சிக்கு கூட்டு முடிவெடுக்கும் ஒரு முக்கியமான ஜனநாயக நிறுவனமாக கிராம சபா விளங்குவதாக காந்தியத் தத்துவங்கள் கூறுகிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு, கிராம மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வழி செய்ய, கிராம சபா திட்டத்தை திருத்தி அமைக்க, 1998 முதல் 2006 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பிரசாரம் செய்தார். மாநில அரசு முதலில் மறுத்தாலும் பொது மக்களின் விடாப் பிடியான கருத்தால் விட்டுக்கொடுத்தது. கிராம மேம்பாட்டு பணிக்கு ஆகும் செலவினங்களுக்கு கிராம சபாவின் (கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் அனைத்து கிராம பெரியவர்களும் கூடி எடுக்கும் முடிவு) ஒப்புதல் பெறுவது கட்டாயமானது.
செயற்பாடுகள்
மகாராஷ்டிராவில் ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
ஊழலுக்கு எதிராக போராட ஒரு வெகுஜன இயக்கத்தை 1991-ல் பிராஷ்டாசார் விரோதி ஜன் ஆண்டோலன் (ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம்)-ஐ ரலேகன் சித்தியில் தொடங்கினார். அந்த வருடமே, 40 வனத்துறை அதிகாரிகள் மற்றும் மர வியாபாரிகளின் கூட்டு சதிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பு அவ்வதிகாரிகளின் தற்காலிக பணி நிறுத்தம் அல்லது இடமாற்றத்திற்கு வழி வகுத்தது.[24]
மே 1997-ல் வசந்த் ராவ் நாயக் பாத்யா விமுக்த் ஜட்ரா கவர்னர் பி சி அலெக்ஸாண்டர் மின்தறி வாங்குவதில் நடந்த முறைகேட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்.[25] 4 நவம்பர் 1997-ல் காலாப் ஊழல் குற்றச்சாட்டில் ஹசாரே-க்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தார். ஏப்ரல் 1998-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ரூபாய் 5000/- தனிப்பட்ட பிணைப்பில் வெளிவந்தார். 9 செப்டம்பர் 1998-ல் மும்பை பெருநகர நீதிமன்றம் உத்தரவின்படி எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவு பா.ஜ.க மற்றும் சிவா சேனா தவிர அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை ஆதரிக்க வழி வகுத்தன.
பின்னர் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக மகாராஷ்டிரா அரசு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. அவாமி வணிக வங்கி வழக்கில் கலாப்-ஐ அவரின் தவறான செயல்களுக்காக, அவை வெளியேற்றம் செய்யக் கோரி அப்போதைய முதலமைச்சர் மனோகர் ஜோஷிக்கு ஹசாரே கடிதம் எழுதினார். கலாப் அமைச்சரவையிலிருந்து 27 ஏப்ரல் 1999-ல் ராஜினாமா செய்தார்.[26]
2003-ல் தேசியவாத காங்கிரஸ் அரசின் 4 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பினார். அவர் 9 ஆகஸ்ட் 2003-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அப்போதைய முதலமைச்சர் சுஷில் குமார் தோஷி அவரின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஒரு தனி நபர் ஆணைக்குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி P B சவாந்த் தலைமையில் நியமித்ததால் 17 ஆகஸ்ட் 2003-ம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். P B சவாந்த் குழுவின் அறிக்கை 23 பிப்ரவரி 2005-ல் சுரேஷ்தாதா ஜெயின், நவாப் மாலிக் மற்றும் பத்மாசிங் பாட்டில் ஆகியோரை குற்றம் சாட்டியது. அந்த அறிக்கை விஜயகுமார் கவிட்-ஐ விடுவித்தது. ஜெயின் மற்றும் மாலிக் ஆகியோர் மார்ச் 2005-ல் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தனர்.[27]
P B சவாந்த் குழு தனது அறிக்கையில் அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட மூன்று அறக்கட்டளைகளைக் குற்றம் சாட்டியிருந்தது. ஹிந்த் ச்வராஜ் அறக்கட்டளை அன்னா ஹசாரே-வின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு ரூபாய் 2,20,000/- செலவு செய்ததை, அபய் பிரோடியா என்ற தொழிலதிபர் ரூபாய் 2,48,000/- அந்த விழாவிற்காக அரகட்டளைக்கு நன்கொடையாக அளித்தபோதிலும், அது ஒரு சட்ட விரோத மற்றும் ஊழல் செயல் என்று குழு முடிவு செய்தது.[28][29][30] தொண்டு ஆணையர் அனுமதி பெறாமல் 11 ஏக்கர் நிலத்தை ஜில்லா பரிஷத்-க்கு பிரித்துக் கொடுத்தது சீரற்ற நிர்வாகம் என்று முடிவு செய்தது. பிராஷ்டசார் விரோதி ஜன் ஆண்டோலன் டிரஸ்டின் கணக்குப் பராமரிப்பு 10 நவம்பர் 2001-க்குப் பிறகு விதிகளின்படி இல்லை என்றும், மதச் சார்பற்ற கல்வி மேம்பாட்டிற்காக செயல்பட வேண்டிய சந்த் யாதவ்பாபா ஷிக்ஷன் பிரசாரக் மண்டல் டிரஸ்ட், அதன் நோக்கத்தை முறியடிப்பதைப்போல் ரூபாய் 46,374/- யை கோவில் புதுப்பிப்பதற்காக செலவு செய்ததையும் குறை கூறியது.[28][29]
தகவல் அறியும் உரிமை இயக்கம்
2000-ன் முற்பகுதியில் ஹசாரே-வின் தலைமையில் நடந்த ஒரு இயக்கம் அந்த மாநில அரசை திருத்தப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு வரும் கட்டாயத்தில் நிறுத்தியது. இந்தச் சட்டம் பின்னர் அரசு 2005-ல் இயற்றிய தகவல் பெரும் உரிமைச் சட்டத்திற்கு அடிப்படை ஆவணமாக கருதப்படுகிறது. இந்திய ஜனாதிபதி இந்தப் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.[31]
20 ஜூலை 2006-ல், அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட கோப்பு திருத்தம் செய்வது தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ல் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தத்திற்கு எதிராக ஹசாரே ஆலன்டி-யில் 9 ஆகஸ்ட் 2006 தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அரசு தனது முந்தைய முடிவை மாற்றிக் கொள்ள ஒப்புதல் அளித்த பின்னர் 19 ஆகஸ்ட் 2006-ல் ஹசாரே உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்.[32]
இடமாற்றங்கள் ஒழுங்குமுறை மற்றும் உத்தியோகப்பூர்வ பணியில் தாமதத் தடுப்பு
2006-ஆம் வருடத்திற்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேர்மையான அரசு அதிகாரிகள் அமைச்சர்களின் இஷ்டப்படி வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டும், சில ஊழல் மற்றும் அரசுக்கு ஆதரவு தரும் அதிகாரிகள் பல சகாப்தங்களுக்கு ஒரே இடத்திலும் இருந்தனர். ஒரு அரசு ஊழியர், கோப்புகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வழி செய்யவும், இடமாற்றம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க வழி செய்யும் சட்டம் இயற்ற கடுமையாக அன்னா போராடினார். அன்னாவின் இடைவிடாத பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு மகாராஷ்டிரா அரசு 25 மே 2006-ல் உத்தியோகப் பணியில் தாமதத் தடுப்புச் சட்டம் 2006-க்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்தச் சட்டம், கோப்புகளை மெதுவாக நகர்த்தும் அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், கோப்புகளை நகர்த்தாமல் மற்றும் ஊழல் தொடர்பு உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்தது.
இந்தச் சட்டத்தின்படி எல்லா அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களைத் தவிர பிற ஊழியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பின்னரோ அவசர அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் இடமாற்றம் செய்யும் கட்டாயத்தை ஏற்படுத்தியது. இது போல் ஒரு சட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் மகாராஷ்ட்ராவே ஆகும். எனினும் இந்தச் சட்டம் மற்ற மாநிலங்களைப் போலவே முழுமையாக செயல்படுத்தப் படவில்லை.[33][34]
உணவு தானியங்களில் இருந்து மது உற்பத்திக்கு எதிராக பிரச்சாரம்
இந்திய அரசியலமைப்பின் 47-வது நடைமுறை விதிகளின்படி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் மற்றும் போதையூட்டும், ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் பானம் மற்றும் மருந்துகளை உட்கொள்ள அரசு தடை விதித்தது.[35][36]
2007-ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசு, தொழில்துறையின் தேவைகளுக்காகவும் போதைக்கு பயன்படும் மது சார்ந்த ஸ்பிரிட்-ன் கூடுதலான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், உணவு தானியங்களிலிருந்து மது உற்பத்தியை ஊக்குவித்து , தானியம் சார்ந்த மதுக் கொள்கையை வெளியிட்டது. உணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்கும் 36 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு உரிமம் வழங்கியது.
உணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்க ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை அன்னா ஹசாரே எதிர்த்தார். உணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்க ஊக்குவிப்பது தவறான செயல் என்றும் மகாராஷ்டிரா உணவு இறக்குமதி செய்யவேண்டி வரும் என்றும் வாதிட்டார்.[37] மாநில அமைச்சர்களில் ஒருவரான லக்ஷ்மண் தோப்லே என்பவர் தனது உரையில் உணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்கும் முடிவை எதிர்க்கும் நபர்கள் விவசாயிகளின் எதிரி என்றும் அவர்களை கரும்புக் குச்சிகளை வைத்து தாக்க வேண்டும் என்றும் கூறினார். ஹசாரே தனது உண்ணாவிரதத்தைத் ஷீரடியில் தொடங்கியதற்குப்பின் 21 மார்ச் 2010-ல் அரசாங்கம் இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதாக வாக்குறுதி கொடுத்ததையடுத்து தனது ஐந்து நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் அரசாங்கம் பின்னர் 36 உரிமங்கள் மற்றும் உணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்கும் அரசியல்வாதிக்கு அல்லது அவர்களின் மகன்களுக்கு ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் மானியம் வழங்கியது. அவ்வாறு மானியம் பெற்றவர்களில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன்களான அமித் மற்றும் தீரஜ் தேஷ்முக், பாரதீய ஜனதா கட்சித் தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜ பால்வே மற்றும் அவரது கணவர் சாருதத்தா பால்வே , P V நரசிம்ம ராவின் மருமகன்கள் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் கோவிந்த்ராவ் அதிக் ஆவர். திட்டமிடல் மற்றும் நிதித் துறையிலிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும் அரசாங்கம் அயல் நாடுகளில் கரும்புச் சாரிலிருந்து தயாரிக்கும் மொலசெஸ்-ஐக் காட்டிலும் மதுவிற்கு பரவலாக தேவை இருப்பதாகக் கூறி உரிமங்களை அங்கீகரித்தது.[38] மகாராஷ்டிரா அரசின் இந்தக் கொள்கை மீது அன்னா பாம்பே நீதி மன்றத்தின் நாக்பூர் ஆயத்தில் வழக்கு தொடர்ந்தார். 20 ஆகஸ்ட் 2009-ல் மகாராஷ்டிரா அரசு இந்தக் கொள்கையை நிறுத்தியது. எனினும் அந்தத் தேதிக்கு முன் உரிமம் வாங்கிய தொழிற்சாலைகளுக்கும், இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கியவர்களுக்கும் மானியம் வழங்க உறுதியளித்தது.
5 மே 2011-ல், நீதிமந்திரன் மனுவை பரிசீலிக்க மறுத்து, " இது ஒரு சட்ட நீதி மன்றம், நீதி மன்றம் அல்ல " என்றும் பரிசீலிக்க மறுத்ததின் காரணமாகக் கூறியது.[39][40] மகாராஷ்டிராவின் ஒரு முதல் செயலாளர் C S சங்கீத் ராவ், இந்த உரிமங்களை ரத்து செய்ய எந்த சட்டமும் இல்லை என்று கூறினார்.
லோக்பால் மசோதா இயக்கம்
2011-ஆம் வருடம், ஊழலுக்கு எதிரான வலுவான ஒரு வலுவான ஜன் லோக்பால் மசோதாவை (மக்கள் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் மசோதா) இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஒரு சத்தியாக்ராஹ இயக்கத்தைத் தொடங்கினார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி N சந்தோஷ் ஹெக்டே, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், சமூக ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர்களுடன் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்ந்து ஜன லோக்பால் மசோதா வரையப்பட்டது. 2010-ல் அரசாங்கம் வெளியிட்ட வரைவைவிட கடுமையான வசதி மற்றும் கூடுதல் அதிகாரத்தையும் லோக்பால்-க்கு (OMBUDSMAN) வழங்கும்படி வரையப்பட்டிருந்தது.[41] இது பிரதம மந்திரியை இந்த உத்தேச லோக்பால்-ன் அதிகாரங்களின் வரம்பில் வைப்பதையும் சேர்த்து வரையப்பட்டிருந்தது.[42]
உண்ணாவிரதப் போராட்டம்
லோக்பால் மற்றும் லோகயுக்தாஸ் (மாநில OMBUDSMEN) ஆகிய மசோதாக்களுக்கு வலுவான தண்டனை நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் சுதந்திரம்அளிக்கும் வரைவை அரசு பிரதிநிதிகள் மற்றும் மக்கள் சமூக பிரதிநிதிகள் அடங்கிய ஒரு கூட்டுக்குழு அமைத்து வரையும் ஆலோசனையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்ததால் ஹசாரே தனது கால வரையற்ற உண்ணாவிரதத்தை 5 ஏப்ரல் 2011-ல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடங்கினார்.[43] He stated, "I will fast until Jan Lokpal Bill is passed".[44] அவர் "ஜன லோக்பால் மசோதா நிறைவேறும்வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார்.
இந்த இயக்கம் ஊடகத்தின் கவனத்தையும் ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களையும் ஈர்த்தது. ஏறக்குறைய 150 பேர் ஹசாரேவுடன் உண்ணாவிரதத்தில் சேர்ந்தனர்.[45] மேதா பட்கர், அர்விந்த் கேஜ்ரிவால், முன்னால் ஐ பி எஸ் அதிகாரி கிரண் பேடி, ஜெயப்ரகாஷ் நாராயண் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதரவைக் கொடுத்தனர். மக்களும் தங்களது ஆதரவை சமூக ஊடகங்களின் மூலம் வெளியிட்டனர். மேலும் ஆன்மீக தலைவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி ராம்தேவ், சுவாமி அக்னிவேஷ், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் பல பிரபலங்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.[46][47] ஹசாரே எந்த ஒரு அரசியல்வாதியையும் தன்னுடன் உட்கார அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்தார். உமா பாரதி, ஓம் பிரகாஷ் சௌதாலா மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொழுது எதிர்ப்பாளர்கள் அவர்களை நிராகரித்தனர். 2010-ன் வரைவை மறுபரிசீலனை செய்வதை எதிர்த்து ஷரத் பவார் அமைச்சர்கள் குழுவிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.[48]
மும்பை, சென்னை, அஹமெதாபாத், குவஹாட்டி, ஷில்லாங், அய்சால் மற்றும் பல நகரங்களிலும் எதிர்ப்புகள் பரவியது.[49]
ஏப்ரல் 8-ம் தேதி இயக்கத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றது. ஏப்ரல் 9-ம் தேதி ஒரு கூட்டுக் குழு அமைக்க இந்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அந்தக் குழுவில் ஒரு அரசியல் தலைவர், ஒரு போராளி மற்றும் அரசியலில் இல்லாத துணைத் தலைவர் ஆகியோர் இடம் பெற வேண்டும் என்ற திட்டத்தை ஏற்றது. ஐந்து இந்திய அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் ஐந்து மக்கள் சமூக பிரதிநிதிகள் இந்த வரைவுக் குழுவில் இடம்பெறுவர் என்று இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. இந்திய அரசின் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள், நிதி அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சட்டம் மற்றும் நீதி அமைச்சர் எம் வீரப்ப மொய்லி, மனித வள மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் மற்றும் நீர் வள மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஆகியோர் ஆவர். அரசியலில் இல்லாத ஐந்து வேட்பாளர்கள், அன்னா ஹசாரே, N சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் ஆவர்.[50][51]
ஏப்ரல் 9-ஆம் தேதி ஹசாரே தனது 98 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். அவர் ஆகஸ்ட் 15-ஆம் தேதியை மசோதா அமைக்க காலக் கெடுவாக விதித்து மக்களிடம் கீழ்வருமாறு உரையாற்றினார்.
மசோதா நிறைவேறவில்லை என்றால் ஒரு வெகுஜன நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடப் போவதாக அறிவித்தார்.[52][53] அவர் அவருடைய போராட்டத்தை " இரண்டாவது சுதந்திரப் போராட்டம் " என்றும் அவருடைய போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.
லோக்பால் விவகாரத்திற்காக 28 ஜூலை 2012-க்கு அடுத்த நாள் முதல் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடரப் போவதாக அச்சுறுத்தினார். நாட்டின் எதிர்காலம் காங்கிரஸ் அல்லது பா ஜ க -வின் கைகளில் பாதுகாப்பாக இல்லை என்றும், வரும் தேர்தலில் சுத்தமான பின்னணி உடையவர்களுக்கு பிரசாரம் செய்யப் போவதாகக் கூறினார். தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பிரதம மந்திரியுடன் கூடப் பேசத் தயாராக இல்லை என்று தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் மூன்றாவது நாளில் கூறினார். புதிய அரசியல் கட்சித் துவங்குவதில் எந்தத் தவறுமில்லை என்றும் ஆனால் அவர் எந்தக் கட்சியிலும் சேரவோ தேர்தலில் போட்டியிடவோ மாட்டேன் என்று 2 ஆகஸ்ட் 2012-ஆம் தேதி தனது அறிக்கையில் கூறினார். .[54]
அரசியலில் ஈடுபடுவது குறித்த தங்களது முடிவை பின்னர் அறிவிக்கும் என்றும், அன்னா -வும் குழுவினரும் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை 3 ஆகஸ்ட் 2012-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிப்பதாகவும் முடிவெடுத்தனர்.[55]
வரைவு சட்டம்
பிரதம மந்திரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை வரைவு லோக்பால் மசோதா குறியிலக்கின் கீழ் கொண்டு வர மத்திய அரசு உறுப்பினர்கள் 30 மே-ல் நடந்த கூட்டு வரைவுக்குழு கூட்டத்தில் எதித்தனர்.[56] மே 31-ம் தேதி முகெர்ஜி எல்லா மாநில முதலமைச்சைர்களுக்கும் மற்றும் கட்சித் தலைவர்களுக்கும், பிரதம மந்திரி மற்றும் உச்ச நீதி மன்ற மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகளை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது உட்பட ஆறு சர்ச்சைக்குரிய பிரச்சனைகளில் அவர்களின் கருத்தைக் கேட்டு கடிதம் எழுதினார்.[57] ஆனால் அரசியலில் இல்லாத சமூகப் பிரதிநிதிகள் வரைவுக் குழு உறுப்பினர்கள், முன் கூறியவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வராமலிருப்பது ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் விதி மீறல் என்று கருதியது.[58]
கறுப்புப் பண த்துக்கெதிராகவும், ஊழலுக்கெதிராகவும் அரசாங்கத்தின் தீவிரத்தை எதிர்த்து சமூகப் பிரதிநிதிகள் ஜூன் 5-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்தபோது ராம் லீலா மைதானத்திலிருந்து சுவாமி ராம்தேவ் அவர்கள் தில்லி போலீசாரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து அன்னா ஹசாரே மற்றும் மற்ற சமூகப் பிரதிநிதிகள் ஜூன் 6-ல் நடைபெறவிருந்த வரைவுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்தனர்.[59]
முக்கிய பிரச்சினைகளில் பொதுவாக செயல்படவும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததின் காரணங்களை விளக்கியும் ஜூன் 6-ம் தேதி சமூகப் பிரதிநிதிகள் முகர்ஜிக்கு கடிதம் எழுதினர். மேலும் எதிர்காலங்களில் நேரடி ஒளிபரப்பாகும் கூட்டங்களில் மட்டுமே கலந்து கொள்வதென முடிவெடுத்தனர்.[60] வரைவுக்குழுவை இழிவுபடுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் கூறிய அன்னா 8 ஜூனில் ராஜ்காட்டில் அவருடைய இயக்கத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று விமர்சித்து, லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றால் 16 ஆகஸ்ட் முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அச்சுறுத்தினார். மசோதா நிறைவேராமலிருக்க தடை செய்வதாகவும், சமூகப் பிரதிநிதிகளை அவமானப் படுத்துவதாகவும் அரசை விமர்சித்தார்.[61][62][63]
காலவரையற்ற உண்ணாவிரதம்
பிரதம மந்திரி, நீதிபதிகள் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடுகளை மீறியவர்கள் ஆகியோரை தவிர்த்த புகார்களை விசாரிக்கும் மசோதாவின் வரைவை மத்திய அமைச்சரவை ஏற்றது. அரசாங்கத்தின் இந்தச் செயலை ஒரு கொடூரமான நகைச்சுவை என்றும் சமூகப் பிரதிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்காமல் தனது சொந்த வரைவை அறிமுகப்படுத்தினால், தனது காலவரையற்ற உன்னவரதத்தை 16 ஆகஸ்ட் முதல் தொடங்கப் போவதாகவும் சிங் -க்கு ஒரு கடிதம் எழுதினார்.[64][65]
பலவீனமான லோக்பால் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்ளாக பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒரு வலுவான சட்டத்தைக் கோரி அரசாங்கத்திற்கு நேரடியாக தொலைநகலை அனுப்பினர்.[66] ஆகஸ்ட் 16-ம் தேதி, மும்பை உந்து வண்டி ஆண்கள் ஒன்றியத்தின் 30,000 உந்து வண்டி ஓட்டுனர்கள் வண்டிகளை இயக்காமல்அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவளித்தனர்.[67] அலகபாத் உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் அரசாங்கத்தின் வரைவு தேசிய நோக்கத்துக்கெதிராக உள்ளது என்று கூறி 16 ஆகஸ்ட்-ல் உண்ணாவிரதமிருந்து ஹசாரே-விற்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். ஒரு பயனுள்ள ஊழல் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு தேவை என்று கூறி விஸ்வ ஹிந்து பரிஷத் தங்களது ஆதரவை தெரிவித்தது.
ஹேமந்த் பாட்டில் என்ற மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக பணியாளர் மற்றும் வணிகர் ஹசாரேவின் கோரிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் சட்டமன்ற செயல்பாட்டில் குறுக்கிடுகிறது என்றும் ஹசாரே-வின் செயல்களை கட்டுப்படுத்த ஒரு பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதி மன்றத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடர்ந்தார்.[68]
கைதும் பின்விளைவுகளும்
தொடர்பான செய்திகள் உள்ளது.
காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கும் நான்கு மணி நேரத்திற்கு முன், ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஹசாரே கைது செய்யப்பட்டார்.[69] தில்லி காவல் துறையின் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத், தில்லி பூங்காவில் சட்ட விரோதமான முறையில் உண்ணாவிரதத்தை தொடங்க கூட்டம் கூட்டியதாகவும், எதிர்ப்பை அனுமதிக்க காவல் துறையின் நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுத்ததாகவும் கூறினார். உண்ணாவிரத நாட்கள் மூன்றாகவும், எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 5000-மாகவும் கட்டுப்படுத்துவது நிபந்தனைகளில் ஒன்றாகும்.[70] பின்னர் அன்று மதியம் ஹசாரே-விற்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. தண்டனை அதிகாரி 7 நாள் சிறை தண்டனை வழங்கி திகார் சிறைக்கு அனுப்பி வைத்தார். பிரஷாந்த் பூஷனின் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக தளங்களில் (FACEBOOK உட்பட) இந்த அறிவிப்பிற்குப் பிறகு ஆயிரக் கணக்கான மக்கள் ஜந்தர் மந்தரில் உள்ள இந்தியா கேட்டிலிருந்து அணிவகுத்துச் சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.[71]
அர்விந்த் கேஜ்ரிவால், சாந்தி பூஷன், கிரண் பேடி மற்றும் மனிஷ் சிசோடியா உட்பட ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் 1,300-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை தில்லியில் தடுத்து நிறுத்தியதாக ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கைது செய்யப்பட்டதாக பிற அறிக்கைகள் தெரிவித்தன. 1975-ல் அவசரகால நிலை பிரகடனப் படுத்தியது போன்ற ஒரு நிலையை அரசாங்கம் கொண்டு வருவதாகக் கூறி எதிர்க் கட்சிகள் வெளி நடப்பு செய்தன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.[72]
காவலில் வைக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு காவல் துறையின் கோரிக்கையின் பேரில் விடுதலை செய்யப் பட்டபோதும், திகார் சிறையிலிருந்து வெளியேற மறுத்து விட்டார். ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை தொடங்க நிபந்தனையற்ற அனுமதி கோரி அவர் வெளியேற மறுத்தார். ஹசாரே சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.[73]
அவருடைய கைதுக்குப் பின்னர் ஹசாரே நாடு முழுவதிலும் உள்ள மக்களின் ஆதரவைப் பெற்றார். நாடு முழுவதிலும், கிட்டத்தட்ட 570-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக் கூட்டங்களையும் அன்னா ஆதரவாளர்கள் நடத்தியதாக அறிக்கைகள் கூறுகின்றன. பல லட்சக் கணக்கானவர்களின் நாடு தழுவிய போராட்டங்கள் காரணமாக அரசு அவருக்கு 15 நாட்கள் பொது உண்ணாவிரதம் தொடங்க அனுமதியளித்தது. பொது அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தைக்குப்பின், ஹசாரே தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் தனது எதிர்ப்பை நடத்த முடிவு செய்தார். ஆகஸ்ட் 20-ஆம் தேதி திகார் சிறையை விட்டு ராம் லீலா மைதானத்திற்கு சென்றார்.[74] செப்டம்பர் 8-ஆம் தேதி முடிவடையும் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது அணியின் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற தனது கடைசி மூச்சு வரை போராடப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராம் லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம்
ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது ஆதரவை தெரிவிக்க வந்த சமயத்தில்[75], அவருடைய ஆலோசகர்கள் பொது ஆதரவு திரட்டியும் அவர்களின் எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் சமரச பேச்சுவார்த்தைக்கு மறுக்கும் இந்திய நாடாளுமன்றத்தைக் குறை கூறும் விமர்சங்களையும் தொலைக் காட்சியில் தோன்றினர்.[76] மக்கள் தகவல் அறியும் உரிமையின் தேசிய இயக்க மசோதா நிறைவேற்ற ஹசாரே விதிக்கும் கெடுவிற்கு கண்டனம் தெரிவித்தது.
மகாராஷ்டிராவின் கூடுதல் தலைமை செயலாளர் உமேஷ் சந்திர சாரங்கி (ஹசாரே மற்றும் அதிகாரிகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்பவர் என்ற வரலாறு உண்டு) அவரை மறுபடியும் சந்தித்து " உடன்பாடு ஏற்படும் வழிகளை கண்டுபிடித்து பதற்ற நிலைமை தணிய வகை செய்வார்" என்று காங்கிரஸ் கட்சி உறுதிப்படுத்தியது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கானவர்கள் ஹசாரே ஒரு உயர்ந்த மேடையில் அமர்ந்து இருந்ததைப் பார்த்தனர்.[77] ஹசாரே அந்த நேரத்தில் உண்ணாவிரதம் ஆரம்பித்ததிலிருந்து ஏழு பவுண்டுகள் குறைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்திலும், அவர் " ஜன லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும் வரை என்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற மாட்டேன். நான் இறக்கவும் செய்வேன் ஆனால் வளைந்து கொடுக்க மாட்டேன்" என்று கூறினார்.
லோக்பால் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதற்குப்பின் ஹசாரே ஆகஸ்ட் 28-ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
உண்ணாவிரதத்திர்க்குப்பின் உடல்நிலை கவனிப்பிற்காக மேதாந்த மெடிசிட்டி, குர்கான்-ல் சேர்க்கப்பட்டார். 288 மணி நேர உண்ணாவிரதத்துக்குப் பிறகு 7.50 கிலோக்ராம் எடை குறைந்து மிக நீர்ப்போக்குடன் உடலில் நீரின் அளவு குறைந்து இருந்தார்.[78]
நான் அன்னா மந்திரம்
(2011 ஏப்ரல் 5-ஆம் தேதி) வலுவான லோக்பால் மசோதாவிர்க்காக அன்னா ஹசாரே-வின் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தின் சில தினங்களுக்குள்ளாக, " நாங்கள் எல்லோரும் காலேத் சாயீத் " என்ற எகிப்திய எழுச்சியைப் போல் " நான் அன்னா ஹசாரே " என்ற பிரச்சாரத்தை ஆதரவாளர்கள் தொடங்கினர்.[79] அன்னா ஹசாரே-வின் இரண்டாவது போராட்டத்தின்போது,அன்னா ஹசாரே-வைப் போல் தொப்பி அணிவது கிட்டத்தட்ட அவரது பாணி ஆனது. தொப்பி விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு உயரத்தை எட்டியது. யாராவது லஞ்சம் கேட்கும் போதெல்லாம் "நான் அன்னா" தொப்பி அணிய, கிரண் பேடி பரிந்துரைத்தார்.[80]
MMRDA மைதானத்தில் நடந்த உண்ணாவிரதம்
விவாதத்தில் இருந்த லோக்பால் வரைவை விட வலுவானதைக் கோரி, 27 டிசம்பரில் ஹசாரே 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.[81] அவர் உண்ணாவிரதம் தொடர்ந்து இருந்தால் சிறுநீரகம் பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியதால் ஹசாரே, டிசம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.[82]
குறிப்பிட்ட இடத்தை அடையுமுன் அன்னா ஜுஹு கடற்கரையில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பல்லாயிரக் கணக்கான மக்களுடன் பேரணிக்குப் போகும் வழியில் சாந்தாகுரூஸ், துலிப் நட்சத்திர விடுதி, மித்திபாய் கல்லூரி, S V சாலை, வைல் பார்லே, கார் மற்றும் பந்திரா நெடுஞ்சாலை வழியாக இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொண்டு மைதானத்தை அடைந்தார்.[83]
போராட்டத்துக்கு எதிரான ஒரு பொது நல மனுவை கர்நாடக உயர் நீதி மன்றம் நிராகரித்தது. ஒரு நீதிபதி இந்த மனுவில் எந்த பொது நல விருப்பமும் இல்லை என்று குறிப்பிட்டார்.[84]
தேர்தல் சீர்திருத்த இயக்கம்
2011-ல் அன்னா ஹசாரே இந்திய தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் "மேற்கூறிய எதுவும் இல்லை" என்ற ஒரு விருப்பத்தை இணைத்துக் கொள்ள தேர்தல் சட்டத்தில் ஒரு திருத்தம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.[85][86] இந்த "மேற்கூறிய எதுவும் இல்லை" என்பது, தேர்தல் முறைமையில் வாக்காளரை அவருடைய விருப்பத்துக்குரிய எந்த ஒரு வேட்பாளரும் இல்லை என்பதை குறிக்க அவருக்கு உரிமை அளித்தது. உடனடியாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஷாஹப்புதின் யாகூப் க்வரைஷி ஹசாரே-வின் தேர்தல் சட்ட திருத்த கோரிக்கையை ஆதரித்தார்.[87]
சுவாமி ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மீது நடக்கும் அட்டுழியங்களுக்கு எதிர்ப்பு
சுவாமி ராம்தேவின் ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிராக ஜூன் 5-ல் தில்லி காவல்துறையினர் நடத்திய நள்ளிரவு நடவடிக்கையைக் கண்டித்து அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ராஜ்காட்டில் ஜூன் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிருதமிருந்தனர்.[61][88] இந்த அட்டுழியங்களுக்கு பிரதம மந்திரியே பொறுப்பு என்றும், காவல் துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என்றும் அன்னா ஹசாரே கூறினார்.[89] அன்னாவின் இளம் ஆதரவாளர்களில் ஒருவர், காந்திய வழியில் வன்முறையைப் பயன்படுத்தாத எதிர்ப்பு ஆகியவையே அதிக இளைஞர்கள் பங்கு பெறுவதற்கு காரணம் என்றார்.[90]
சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள்
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS)-உடன் உள்ள தொடர்பினால் வரும் குற்றச்சாட்டு
அன்னா ஹசாரே இந்து மதத்தின் வலது சாரி, RSS-ன் முகவர் என்று விமர்சிக்கப்பட்டார்.[91] தற்போது இந்தியாவை ஆளும் அரசான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே சொந்தமாக அந்த கருத்தை வெளியிட்டது. இந்திய தேசிய காங்கிரஸ்-ன் மூத்த தலைவரான திக்விஜய் சிங் என்பவர் 2011-ல் நடந்த இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் போராட்டம் RSS-ன் திட்டமிட்ட செயல் என்றும் இதில் முதல் திட்டம் பாபா ராம்தேவ் என்றும் இரண்டாவது திட்டம் அன்னா ஹசாரே என்றும் கூறினார்.[92] தேசிய பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பதே அவர்களின் அடிப்படை வேலை என்றார். அன்னா ஹசாரே செயலாளராக பணியாற்றிய மறைந்த RSS தலைவர் நானாஜி தேஷ்முக்-உடன் இருந்த தொடர்பை குற்றம் கூறினார்.[93] அன்னா இந்த தொடர்பை மறுத்தார்.
நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் மீதான எண்ணம்
ஏப்ரல் 2011-ல் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் அன்னா ஹசாரே குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரையும் கிராமப்புற வளர்ச்சிக்காக அவரது முயற்சியைப் பாராட்டி மற்ற முதலமைச்சர்களும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் திக் விஜய் சிங் அவரது இந்த கருத்தை குற்றம் கூறினார். மே 2011-ல் குஜராத் வருகையின் போது தன்னுடைய கருத்தை மாற்றி பரவலான ஊழலுக்காக குற்றம் சாட்டினார். ஒரு லோகயுக்தா-வை அமைக்க மோடியை வலியுறுத்தினார். துடிப்பான குஜராத் என்ற ஒரு தவறான நோக்கத்தை ஊடகங்கள் வெளியிடுவதாக கருத்து தெரிவித்தார்.[94]
உண்ணாவிரதத்தின் போது மோசடி
பொது சுகாதார வளர்ச்சி, இயற்கைப் பேரழிவு மற்றும் சமூக பிரச்சாரம் செய்யும் ஆரோக்ய சேனா, ஒரு அரசு சாரா நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் இதய நோய் மருத்துவரான அபிஜித் வைத்யா, ரலேகன் சித்தியில் நடந்த உண்ணாவிரதத்தின் போது ஹசாரே-வுக்கு பழச் சர்க்கரை (Glucose) மற்றும் எலெக்ட்ரோலைட் (Electrolyte) கொடுக்கப்பட்டதாக ஹசாரே-வின் நெருங்கிய கூட்டாளிகள் தகவல் கொடுத்ததாக குற்றம் கூறினார். ஹசாரே மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த குற்றச் சாட்டின் மேல் கருத்து தெரிவிக்க மறுத்தனர்.[95]
ஊழல் குற்றச்சாட்டுகள்
மகாராஷ்டிரா மாநில அரசாங்கம் ஹசாரே தலைமையிலான ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை, நான்கு மாநில அமைச்சர்கள் மற்றும் பல மக்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க விசாரணைக் குழுவை நீதிபதி P B SAWANT தலைமையில் நிறுவியது. அந்த விசாரணைக் குழு 22 பிப்ரவரி 2005-ல் வெளியிட்ட அறிக்கையில் ஹசாரே-வின் பிறந்த நாளுக்காக ரூபாய் 2.20 லட்சம் அறக்கட்டளையின் விதிகளுக்கு மாறாக செலவு செய்ததாக குற்றம் சாட்டியது.[96]
லோக்பால் உண்ணாவிரதத்துக்கு இரண்டு நாட்கள் முன்பாக, இந்திய தேசிய காங்கிரஸின் P B சாவந்த் ஆணையம் ஹசாரே-வின் அறநெறி அகற்றப்பட்டு விட்டது என்று குற்றம்சாட்டி தாக்கியது.[97]
ஹசாரேவின் வழக்கறிஞர் மிலிந்த் பவார் தனது பதிலில், ஆணையம் கணக்குகளில் உள்ள முறைகேடுகளைப்பற்றி குறிப்பிட்டதேயன்றி எந்த ஊழல் நடைமுறைகளிலும் அவரை குற்றவாளியாக குறிப்பிட்டுக் காட்டவில்லை என்று குறிப்பிட்டார். அமெரிக்காவின் அரசு சாரா இயக்கத்தின் ஒரு விருதை ஹசாரே வென்றதற்காக வாழ்த்து தெரிவிக்க 16 ஜூன் 1998-ல் ஒரு கொண்டாட்டத்தை அறக்கட்டளை ஏற்பாடு செய்தது, அது அவரது 61-வது பிறந்த நாளுடன் ஒத்துப் போனதாக பவார் தெரிவித்தார். அறக்கட்டளை அந்த விழாவிற்காக ருபாய் 2.18 லட்சம் செலவு செய்தது. இந்த விழாவை நடத்த முயற்சி எடுத்த பூனாவை சேர்ந்த தொழிலதிபர் அபய் பிரோடியா விழாவிற்குப் பிறகு ரூபாய் 2,48,950/--ஐ காசோலை மூலம் நன்கொடையாகக் கொடுத்தார்.[98] குற்றச்சாட்டை நிரூபிக்க ஒரு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசிடம் தைரியமாகக் கூறினார்.[99]
ஜனநாயக எதிர்ப்பு மற்றும் தலித் எதிர்ப்பவர் என்ற குற்றச்சாட்டு
ராமச்சந்திர குஹா கொல்கத்தா தந்தியில் எழுதிய ஒரு கட்டுரையில், முகுல் சர்மா என்ற சுற்றச்சூழல் பத்திரிகையாளர், அன்னா ஹசாரே ரலேகன் சித்தியில் உள்ள தலித் குடும்பங்களை சைவ உணவை ஏற்கவும் அந்த ஆணையை மீறுபவர்கள் தூண்களில் கட்டப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டனர் என்று கூறியதாக தெரிவித்தார்.[100] இரண்டு தசாப்தங்களாக பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறவில்லை என்பதையும் ஹசரேவின் அறிவுரைப்படி மாநில மற்றும் தேசிய தேர்தலின்போது பிரச்சாரங்கள் அனுமதிக்கப் படவில்லை என்பதையும் சர்மா கண்டறிந்தார்.
தலித் கட்டுரையாளர் சந்திரபான் பிரசாத் என்பவர் ஹசரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஜனநாயக பிரதிநிதிகளை நிராகரிப்பதாகவும், அது ஒரு உயர் சாதி எழுச்சி என்று குற்றம் சாட்டியும் தேர்ந்தெடுக்கப்படாத லோக்பால் இயக்கத்திடம் மத்திய அதிகாரத்தைக் கொடுப்பது ஜனநாயக விரோத செயல் என்று கூறினார்.
தலித் ஆர்வலர் காஞ்சா இலயாஹ் அதே பாணியில் "அன்னாவின் இயக்கம் சமூக விரோத நீதி என்றும் ஏமாற்று இயக்கம் என்றும், தலித், பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு இந்த இயக்கத்தால் ஒன்றும் இல்லை. நாங்கள் இதை எதிர்க்கிறோம்." [101] என்று கருத்து தெரிவித்தார். சீர்திருத்தவாதி அனூப் கேரி என்பவர் " மொழி, இயக்கம் பயன்படுத்தும் குறியீடுகள் மேல்சாதி இந்து மதத்தை குறிப்பதாகவும், ஒரு வலதுசாரி இந்து மத தேசப்பற்று நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராகப் பெற, பயன்படுத்தப்படுவதை பிரதிபலிக்கிறது. மேலும் நான் ஒரு தலித், அதனால் எனக்கு ஒரு பிரச்சனை." என்று கூறுகிறார்.
தகவல் பெரும் உரிமை ஆர்வலர் ஒருவருக்கு ரலேகன் சித்தியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அன்னா ஹசாரே மட்டுமே அவருடைய கிராமத்தில் இது போன்ற விரதம் இருக்கலாம் என்று கிராமசபா கூறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.[102]
அன்னாவை நாடாளுமன்ற செயல்முறைகளுக்கு எதிரானவர் என்று கூறும் உதித் ராஜ்-க்கு , அன்னா ஹசாரே-க்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்க அனுமதி தரப் படவில்லை. ஹசாரே-வின் கோரிக்கைகளுக்கு பலியாதலால் பின் தங்கிய வகுப்புகள் அதிகம் பாதிக்கப்படும் ஒரு ஆபத்தான போக்கை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். நிறைய மக்களை திரட்டுவது, சில திட்டவட்ட தீர்வுகளை அரசியல் செயல்முறைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வற்புறுத்துவதும் மற்றும் ஜனநாயக அச்சுறுத்தலுமாகும் என்று கூறினார்.
ஏழை தலித் மக்கள் ஒவ்வொருவரும் அன்னாவுக்கெதிராக கோஷம் எழுப்ப ரூபாய் 200 கூலியாக பெற்றனர் என்பது பின்னர் தெரிய வந்தபோதிலும் அமைப்பாளர்கள் அதை மறுத்தனர். சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இது ஒரு அன்னா சார்ந்த போராட்டம் என்று அவர்களிடம் கூறப்பட்டதாகவும் ஆனால் ஹசாரே-க்கு எதிரானது என்று அறியப்பட்டதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகவும் கூறினர்.[103]
முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு
22 ஆகஸ்ட் 2011-ல் ஒரு பத்திரிகை கட்டுரையில் எழுத்தாளர் மற்றும் நடிகையான அருந்ததி ராய், ஹசாரே ஒரு மத சார்பின்மையற்றவர் என்று குற்றம் சாட்டியுள்ளார். ராஜ் தாக்கரேயின் மராத்தி MANOOS இனவெறிக்கு ஆதரவு கொடுத்ததையும் மற்றும் 2002-ல் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளை மேற்பார்வையிட்ட குஜராத் முதலமைச்சரை வளர்ச்சியின் மாதிரியாக பாராட்டியதையும் குற்றம் கூறினார். அவரது இந்த கருத்துக்களை வலைதளத்தில் வெளியிட்டபோது அவரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து மறு தொடர்பு வந்தது. அவருடைய கருத்துக்களை தொலைத்து விட்டதாக மேதா பட்கர் ராயை குற்றம் கூறினார். மகாராஷ்ட்ராவில் சிவ சேனா மற்றும் பா ஜ க அரசாங்கங்களுக்கு ஹசாரே-வின் உறுதியான எதிர்ப்பு இருந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வன்முறைக்கு ஆதரவு
அவருடைய "ஒரு அறை மட்டும்" என்ற குறிப்பில், வன்முறைக்கு பலியான சரத் பவார் மகாராஷ்டிராவின் ஒரு எதிரி என்று குறிப்பிட்டு வன்முறையின் மேல் தனக்குள்ள கோட்பாடுகளை வெளிப்படையாகக் கூறுகிறார்.[104]
ஹசாரே-வை கொலை செய்ய சதி
15-வது லோக் சபா உறுப்பினரும், ஒச்மனபாத்-ல், தேசிய வாத காங்கிரஸின் உயர் பதவிவகித்தவருமான டாக்டர் பத்மாசிங் பிஜிராவ் பாட்டிலின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவு சர்க்கரை ஆளை மற்றும் பலவற்றில் இருந்த ஊழலை அன்னா ஹசாரே வெளிக் கொண்டு வந்தார். 2006-ல் நடந்த காங்கிரஸ் தலைவர் பவன்ராஜே நிமபல்காரின் கொலை வழக்கில் 2006-ல் பாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.[105][106]
நிம்பல்கார் கொலை வழக்கில் பரஸ்மால் ஜெயின் என்ற குற்றவாளி நீதிவான் முன் கொடுத்த எழுத்து வாக்குமூலத்தில் நிம்பல்காரை கொலை செய்ய ரூபாய் 30,00,000/- பாட்டில் என்பவர் கொடுத்ததாகவும் மேலும் அன்னா ஹசாரே-வை கொலை செய்ய சுபாரி (கொலை செய்ய ஒப்பந்த தொகை) வழங்க முன் வந்ததாகவும் தெரிவித்தபோது ஹசாரே-வை கொல்ல செய்த சதி அம்பலமாகியது.[1][2][3] இந்த எழுத்து வாக்கு மூலத்திற்குப்பிறகு அன்னா ஹசாரே மகாராஷ்டிரா அரசாங்கத்திடம் பாட்டில்-க்கு எதிராக ஒரு முதல் தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுகோள் விடுத்தார், ஆனால் அரசாங்கம் மறுத்து விட்டது. 26 செப்டம்பர் 2009-ல் பாட்டிலுக்கு எதிராக அஹ்மத்நகர் மாவட்டம் பார்னேர் காவல் நிலையத்தில் தனது சொந்த புகாரை பதிவு செய்தார். பாட்டில் முன் ஜாமீன் கோரி உயர் நீதி மன்றத்தை அணுகினார், ஆனால் 14 அக்டோபர் 2009-ல் பாம்பாய் உயர் நீதி மன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு மூல முதல் வழக்கு இல்லை என்பதை கவனித்து அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. பத்மாசிங் பாட்டில், 6 நவம்பர் 2009-ல் மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் மனு செய்தார். 11 நவம்பர் 2009-ல் லதூர் நீதிமன்ற அமர்வு முன் சரணடைந்தபின் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். 16 டிசம்பர் 2009-ஆம் நாள் ஔரங்காபாத் அமர்வு ஜாமீன் அளித்தது.[107] 16 ஆகஸ்ட் 2011 தேதியின்படி தீர்ப்பு நிலுவையில் உள்ளது.
டிசம்பர் 2011-ன் விவரப்படி ஹசாரேவு Z+ பாதுகாப்பு பெற்றார்.[108]
கௌரவங்கள், விருதுகள் மற்றும் சர்வதேச அங்கீகாரம்
ஆண்டு | விருது | வழங்கிய அமைப்பு |
---|---|---|
2011 | இந்த ஆண்டின் NDTV இந்தியன் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் [109] | என்டிடிவி |
2008 | சிட் கில் நினைவு விருது | உலக வங்கி |
2005 | கவுரவ டாக்டர் பட்டம் | காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் |
2003 | ஒருமைப்பாடு விருது | வெளிப்படையான சர்வதேச |
1998 | கேர் சர்வதேச விருது | கேர் (நிவாரண அமைப்பு) |
1997 | மஹாவீர் விருது | |
1996 | ஷிரோமணி விருது | |
1992 | பத்ம பூஷன் | இந்திய ஜனாதிபதி |
1990 | பத்ம ஸ்ரீ | இந்திய ஜனாதிபதி |
1989 | வேளாண் பூஷணா விருது | மகாராஷ்டிரா அரசு |
1986 | இந்திரா பிரியதர்ஷினி வ்ரிக்ஷமித்ரா விருது | இந்திய அரசாங்கம் |
தனிப்பட்ட வாழ்க்கை
அன்னா ஹசாரே திருமணமாகாதவர். 1975 முதல் சந்த் யாதவ்பாபா கோவிலுடன் இணைந்த ஒரு சிறிய அறையில் வசித்து வருகிறார். 16 ஏப்ரல் 2011-ஆம் தேதி அவர் ரூபாய் 67,183/- -ம் கையிருப்பு பணமாக ரூபாய் 1500/- இருப்பதாகவும் அறிவித்தார்.[110] அவருக்கு சொந்தமான 0.07 ஹெக்டேர் குடும்ப நிலத்தை அவருடைய சகோதரர்கள் பயன்படுத்துகிறார்கள். அவருக்கு இந்திய இராணுவம் மற்றும் ஒரு கிராமவாசி ஆகியோர் நன்கொடையாக அளித்த வேறு வேறு இரு நில பகுதிகளை அவர் கிராமத்திற்கு வழங்கினார்.[111]
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.