Remove ads
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
அடையாறு (ஆங்கிலம்: Adyar) அல்லது அடையார், இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது தென்சென்னை பகுதியில் (முன்பு மதராசு) அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் ஆகும். இது அடையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இதன் மேற்கில் தரமணி, தெற்கே திருவான்மியூர், கிழக்கு பகுதியில் பெசண்ட் நகரும், வடமேற்கில் கோட்டூர்புரம் மற்றும் வடக்கில் இராஜா அண்ணாமலைபுரம் ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. அடையாரின் காந்தி நகர் பகுதியானது, சென்னையில் உள்ள மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாகும்.
அடையாறு
அடையார் | |
---|---|
அடையாரின் வரைபடம் | |
ஆள்கூறுகள்: 13.0063°N 80.2574°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
புறநகர் | சென்னை |
அரசு | |
• நிர்வாகம் | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
• ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 020 |
வாகனப் பதிவு | TN-07 |
மக்களவைத் தொகுதி | தென் சென்னை |
சட்டமன்றத் தொகுதி | மயிலாப்பூர் |
திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
அடையாறு நகரமானது, இந்த நகரின் வழியாக பாயும் அடையாறு நதியிலிருந்து அதன் பெயரைப் பெறுகிறது. 1883 ஆம் ஆண்டில் திருமதி எலனா பிளவாத்ஸ்கியால், பிரம்மஞான சபை தலைமையகம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடையாறு வேகமாக வளரத் தொடங்கியது. பிரம்மஞான சபை தலைமையக தோட்டத்தில், பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக, கலாசேத்திரா என்னும் கல்லூரியை ருக்மிணி தேவி அருண்டேல் 1936 இல் அடையாரில் நிறுவினார். 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமமாக அடையாறு பதிவு செய்யப்பட்டது. 1948இல் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அடையாறு சேர்க்கப்பட்டது.
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், அடையாறு அமைந்துள்ளது.
சென்னை பறக்கும் தொடருந்து ஆனது அடையாறு வழியாக செல்கிறது. மேலும் கஸ்தூர்பாய் நகர், இந்திரா நகர் மற்றும் திருவான்மியூர் ஆகிய மூன்று நிலையங்களைக் கொண்டுள்ளது. அடையாறு நகரத்திற்குள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பேருந்துகளை இயக்கும், பேருந்து பணிமனை இங்கு உள்ளது.
அடையாறில் புற்றுநோய் மையம் மற்றும் உலகின் மிகப் பெரிய தோல் ஆராய்ச்சி நிறுவனமான, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை உள்ளது. சென்னையின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான ஃபோர்டிஸ் மலரும் அடையாறில் அமைந்துள்ளது. ஐ.ஐ.டி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம், தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம், குமார் ராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசிய பத்திரிகை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனம் ஆகிய அனைத்தும் அடையாறிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் அமைந்துள்ளன.
1875 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அடையாறு செயின்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி ஆனது, பழமையான மற்றும் மிகப் பெரிய வளாகத்தை கொண்ட பள்ளி ஆகும். செயின்ட் மைக்கேல் அகாடமி, கேந்திரியா வித்யாலயா, பாலா வித்யா மந்திர், தி இந்து சீனியர் மேல்நிலைப்பள்ளி, பாரத் சீனியர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சங்கரா சீனியர் மேல்நிலைப்பள்ளி, சிஷ்யா, செயின்ட் ஜான்ஸ் ஆங்கிலப் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி, கே. எப். ஐ பள்ளி, வித்ய ரத்னா பி. டி. எஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, சென்னை பள்ளி (சர்வதேச அளவிலான).
அடையாறின் சுற்றுப்பகுதிகளில், காந்தி நகர், கஸ்தூரிபாய் நகர், நேரு நகர், இந்திரா நகர், வெங்கடரத்னம் நகர், பத்மநாப நகர், ஜீவரத்னம் நகர், சாஸ்திரி நகர் ஆகியவை உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.