![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/2004MN4_Sormano.gif/640px-2004MN4_Sormano.gif&w=640&q=50)
99942 அப்போஃபிஸ்
சிறுகோள் / From Wikipedia, the free encyclopedia
99942 அப்போஃபிஸ் (99942 Apophis) என்பது பூமிக்குக் கிட்டவாக உள்ள சிறுகோள் (Asteroid). டிசம்பர் 2004 ஆம் ஆண்டு ஆய்வுகளின் பின்னர் இச்சிறுகோள் 2029 ஆம் ஆண்டில் பூமியை மோதும் வாய்ப்பு 45,000 இற்கு ஒன்று என அறியப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட தகவல்களின் படி இந்த வாய்ப்பு 2029 இல் பூமியையோ அல்லது நிலவையோ தாக்கும் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டன. எனினும், 2029 ஆம் ஆண்டில் பூமிக்குக் கிட்டவாக இது வரும்போது புவியீர்ப்பின் காரணமாக விண்வெளியில் ஏறத்தாழ 600 மீட்டர் விட்டமுள்ள பகுதிக்கூடாக இது செல்லும் என்றும், அப்போது இது 2036 ஆம் ஆண்டு பூமியை மோதும் வாய்ப்புகள் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பு ஆகஸ்ட் 2006 வரை டொரினோ மோதல் அளவுகோலில் முதலாவது நிலையில் வைக்கப்பட்டிருந்தது[4].
![]() |
|
கண்டுபிடிப்பு[1]
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | ரோய் டக்கர், டேவிட் தோலென், பாப்ரீசியோ பெர்னார்டி |
கண்டுபிடிப்பு நாள் | ஜூன் 19, 2004 |
பெயர்க்குறிப்பினை
| |
சிறு கோள் பகுப்பு |
அட்டென் |
காலகட்டம்நவம்பர் 26, 2005 | |
சூரிய சேய்மை நிலை | 1.099 AU |
சூரிய அண்மை நிலை | 0.746 AU |
அரைப்பேரச்சு | 0.922 AU |
மையத்தொலைத்தகவு | 0.191 |
சுற்றுப்பாதை வேகம் | 323.587 நாள் |
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 30.728 கிமீ/செக் |
சராசரி பிறழ்வு | 111.000° |
சாய்வு | 3.331° |
Longitude of ascending node | 204.466° |
Argument of perihelion | 126.364° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | ~270 மீ[1] |
நிறை | 2.7×1010 கிகி |
விடுபடு திசைவேகம் | ~0.52 கிமீ/மணி[2] |
சுழற்சிக் காலம் | ~30 மணி[3] |
எதிரொளி திறன் | 0.33 [1][3] |
வெப்பநிலை | ~290K |
விண்மீன் ஒளிர்மை | 19.7 [1][3] |
குறித்த மேலதிக அவதானிப்புகள் இச்சிறுகோள் பூமியை அடையமாட்டாது என்பதை உறுதிப்படுத்தி, 2006, ஆகஸ்ட் 5 இல் டொரினோ அளவுகோல் 0 இற்குக் குறைக்கப்பட்டது. 2009, அக்டோபர் 7 ஆம் நாளன்று 2036 இல் பூமியை மோது வாய்ப்பு 250,000 இற்கு 1 ஆகக் கணிக்கப்பட்டது[5]. மேலதிக மோதல் நாள் 2037 ஆம் ஆண்டாகக் கணிக்கப்பட்டு அதன் வாய்ப்பு 12.3 மில்லியன்களுக்கு 1 ஆகக் கணிக்கப்பட்டது.
அப்போபிஸ் பூமியை மோதவிடாமல் தடுக்கும் முயற்சி ஒன்றைத் தாம் ஆராய்ந்து வருவதாக 2009 டிசம்பர் 30 இல் ரஷ்யாவின் நடுவண் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரொஸ்கொஸ்மொசின் தலைவர் அனத்தோலி பெர்மீனொவ் தெரிவித்தார்[6].