85ஆவது அகாதமி விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
85ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது[7]) பிப்ரவரி 24, 2013 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழா டால்பி திரையரங்கு, ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியாவில் நடந்தது.[8] செத் மெக்ஃபார்லேன் முதல்முறையாக இவ்விழாவினை எடுத்து நடத்தினார்.[1][9] 76ம் அகாதமி விருதுகளுக்கு அடுத்து அதிகம் பார்க்கப்பட்ட அகாதமி விழா இதுவே. 2004இல், இதனை 42.40 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.[10]
85-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
![]() | ||||
திகதி | பெப்ரவரி 24, 2013 (2013-02-24) | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா | |||
நடத்துனர் | செத் மெக்ஃபார்லேன்[1] | |||
முன்னோட்டம் |
| |||
தயாரிப்பாளர் |
| |||
இயக்குனர் | டான் மிஸ்செர் | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | அர்கோ | |||
அதிக விருதுகள் | லைப் ஆஃப் பை (4) | |||
அதிக பரிந்துரைகள் | லிங்கன் (12) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் | |||
கால அளவு | 215 நிமிடங்கள்[4] | |||
மதிப்பீடுகள் | 40.3 மில்லியன் 26.6% (நீல்சன் தரவுகள்)[5][6] | |||
|
ஆங் லீக்கான சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதினையும் சேர்த்து, லைப் ஆஃப் பை அதிகபட்சமாக நான்கு விருதுகளை வென்றது.[11] சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து., ஆர்கோ மூன்று விருதுகளை வென்றது.[11] லெஸ் மிசரபில்ஸ் திரைப்படமும் மூன்று விருதுகளை வென்றது. சாங்கோ அன்செயின்டு, லின்கன் மற்றும் ஸ்கைஃபால் ஆகிய திரைப்படங்கள் இரண்டு விருதுகளை வென்றன. மற்ற விருதுகளை சில்வர் லைனிங்சு பிளேபுக், பிரேவ், சீரோ டார்க் தெர்டி, அன்னா கரினினா, சியர்சிங் ஃபொர் இன்னொசென்ட் மேன், இனொசென்டே, கர்பியூ, அமோர், மற்றும் பேபர்மேன் ஆகியவை வென்றன.[11][12][13][14]