82ஆவது அகாதமி விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
82ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழி: 82nd Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), ஆல் 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. மார்ச்சு 7, 2010 அன்று டால்பி திரையரங்கம், ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் 19:30 ப.நே.வ. / 20:30 கி.நே.வ. மணியளவில் நடைபெற்றது. 2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக மார்ச்சிற்கு தள்ளி வைக்கப்பட்டது.[7]
விரைவான உண்மைகள் திகதி, இடம் ...
82-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
சுவரொட்டி | ||||
திகதி | மார்ச்சு 7, 2010 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | அலெக் பால்ட்வின் சுடீவ் மார்டின்[1] | |||
முன்னோட்டம் | ஜெசு கேகில் காதி ஐயர்லாந்து செர்ரி செப்பர்டு[2] | |||
தயாரிப்பாளர் | பில் மெக்கானிக் ஆடம் ஷாங்க்மன்[3] | |||
இயக்குனர் | ஹார்னிசு ஹாமில்டன்[4] | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | த ஹர்ட் லாக்கர் | |||
அதிக விருதுகள் | த ஹர்ட் லாக்கர் (6) | |||
அதிக பரிந்துரைகள் | அவதார் மற்றும் த ஹர்ட் லாக்கர் (9) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணிநேரம், 37 நிமிடங்கள்[5] | |||
மதிப்பீடுகள் | 41.62 மில்லியன் 24.89% (நீல்சன் மதிப்பீடுகள்)[6] | |||
|
மூடு
சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளையும் சேர்த்து த ஹர்ட் லாக்கர் ஆறு விருதுகளை வென்றது. இயக்குனர் கேத்தரின் பிகலோ சிறந்த இயக்குனருக்கான விருதினை வென்ற முதல் பெண் ஆவார்.[8][9] அவதார் மூன்று விருதுகளையும், கிரேஸி ஹார்ட், பிரெசியசு, மற்றும் அப், இரண்டு விருதுகளையும் வென்றன.