7ஜி ரெயின்போ காலனி
செல்வராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
7ஜி ரெயின்போ காலனி (7G Rainbow Colony) 2004 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா அறிமுகமானார். சோனியா அகர்வால் நடித்திருந்த இப்படத்தை எழுதி இயக்கியவர் செல்வராகவன்.[1] யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடன் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் இத்திரைப்படம் உருவானது.
விரைவான உண்மைகள் 7 ஜி ரெயின்போ காலனி, இயக்கம் ...
7 ஜி ரெயின்போ காலனி | |
---|---|
![]() | |
இயக்கம் | செல்வராகவன் |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
கதை | செல்வராகவன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் சுமன் ஷெட்டி |
வெளியீடு | 15 அக்டோபர், 2004 |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
மூடு
15 அக்டோபர் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று படம் வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் வணிக ரீதியாக வெற்றியும் பெற்றது.[2][3] ரவி கிருஷ்ணா தனது நடிப்பிற்காக பிலிம்பேரின் சிறந்த ஆண் அறிமுக நடிகர் (தெற்கு) விருதைப் பெற்றார்.[4] அதே நேரத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.