![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/President_Droupadi_Murmu_official_portrait_higher_version.jpg/640px-President_Droupadi_Murmu_official_portrait_higher_version.jpg&w=640&q=50)
2022 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
16வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
2022 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2022 Indian presidential election) 16வது இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் 18 சூலை 2022 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் 9 சூன் 2022 அன்று அறிவித்துள்ளது. முறைப்படியான தேர்தல் அறிவிப்பு 15 சூன் 2022 அன்று வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 29 சூன் 2022 ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை நாள் 2 சூலை 2022 ஆகும். தேர்தல் நாள் 18 சூலை 2022 மற்றும் தேர்தல் முடிவு 21 சூலை 2022 அன்று வெளியிடப்படும். [1][2][3]
![]() | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 99.12% (1.83%![]() | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||
![]() மாநிலங்கள் வாரியாக வெற்றியாளர்கள் . திரௌபதி முர்மு ஆரஞ்சு, யஷ்வந்த் சின்கா பச்சை. | ||||||||||||||||||||||||||
|
மாநிலங்களவை தலைமைச் செயலாளர் இத்தேர்தலை நடத்துவார். தற்போதுள்ள குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 24 சூலை 2022 அன்றுடன் முடிவடைகிறது.
15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவடைந்த பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இத்தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,403 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகள் செலுத்த உள்ளனர். இத்தேர்தலில் யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பது குறிதது அரசியல் கட்சிகளின் கொறடாக்கள், தங்கள் கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது.