From Wikipedia, the free encyclopedia
2017 பிபா U-17 உலகக் கோப்பை போட்டி என்பது 17 வது முறையாக நடத்தப்படும் பிபா U-17 உலகக் கோப்பை போட்டியாகும், மேலும் இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 17 வயதுக்குட்பட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த தேசிய அணிகள் போட்டியிடும் ஒரு சர்வதேச ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியாகும். இந்த முறை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியாவிற்குக் டிசம்பர் 5, 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்தப் போட்டி 6 அக்டோபர் 2017 ஆம் தேதி தொடங்கி 28 அக்டோபர் 2017 தேதி வரை நடைபெறும். இதுவே இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் எந்தவொரு சர்வதேச கால்பந்தாட்ட போட்டியாகும்.
FIFA U-17 World Cup India 2017 | |
---|---|
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | India |
நாட்கள் | 6–28 அக்டோபர் 2017 |
அணிகள் | 24 (6 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 6 (6 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | இங்கிலாந்து (1-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | எசுப்பானியா |
மூன்றாம் இடம் | பிரேசில் |
நான்காம் இடம் | மாலி |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 52 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 183 (3.52 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 13,47,133 (25,906/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | இங்கிலாந்து ரியன் பிரவுஸ்டர் (8 goals ) |
சிறந்த ஆட்டக்காரர் | பில் ஃபோடான் |
சிறந்த கோல்காப்பாளர் | கேபிரியல் பிராசோ |
நேர்நடத்தை விருது | பிரேசில் தேசிய காற்பந்து அணி |
← 2015 2019 → | |
2017 பிபா U-17 உலகக்கோப்பையை நடத்துவதற்கான தேர்வில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பம் 28 மே 2013 ஆம் தேதி அன்று அஜர்பைஜான், இந்தியா, அயர்லாந்து குடியரசு மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் சமர்பித்தன. [1] இதற்கான முடிவை பிபா 15 நவம்பர் 2013 ஆம் தேதி [2] அன்று வெளியிட்டது. அந்த குறிப்பில் இந்தியா போட்டி நடத்துவதற்கான உரிமையை வென்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. [3]
போட்டி நடத்தும் நாடு எனபதன் அடிப்படையில் இந்தியா முதல் முறையாக 2017 பிபா U-17 உலகக்கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பை பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா தவிர்த்து 23 அணிகள் உலகக்கோப்பை போட்டியில் விளையாட தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் சேர்த்து முதல் முறையாக உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்த முறை நியூ கடலோனியா மற்றும் நைஜர் நாடுகள் தகுதி பெற்றுள்ளன்.
கூட்டமைப்பு | தகுதிச் சுற்றுப் போட்டிகள் | தேர்வு செய்யப்பட்ட அணிகள் |
---|---|---|
ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு AFC (Asia) | போட்டி நடத்தும் நாடு | இந்தியா1 |
2016 AFC U-16 Championship | ஈராக் ஈரான் சப்பான் வட கொரியா | |
ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு CAF (Africa) | 2017 Africa U-17 Cup of Nations | கானா கினியா மாலி நைஜர்1 |
வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (CONCACAF) (Central, North America and Caribbean) |
2017 CONCACAF U-17 Championship | கோஸ்ட்டா ரிக்கா ஒண்டுராசு மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா |
தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு CONMEBOL (South America) | 2017 South American Under-17 Championship | பிரேசில் சிலி கொலம்பியா பரகுவை |
ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு OFC (Oceania) | 2017 OFC U-17 Championship | நியூ கலிடோனியா1 நியூசிலாந்து |
ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் UEFA (Europe) | 2017 UEFA European Under-17 Championship | இங்கிலாந்து பிரான்சு செருமனி எசுப்பானியா துருக்கி |
இந்த போட்டிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு இடங்களுக்கு பிபா U-17 உலகக் கோப்பைக்கு முன்னதாக அரங்கங்கள் பெரும் புனரமைப்பு செய்யப்பட்டது. [4] அனைத்து விளையாட்டு அரங்குகளுக்கும் புதிய இருக்கைகள், புதிய உடைமாற்றும் அறைகள், ரசிகர்கள் ஆபத்துகாலத்தில் தப்பிக்க புதிய வழிகள் மற்றும் புதிய பயிற்சி மைதானங்கள் என்று புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் அமைப்பாளர்களின் குழு இயக்குனர் ஜாவியர் செபி இவ்வாறு கூறுகிறார், மெதுவாக தொடங்கிய புனரமைப்பு வேலைகள், பின்னர் வேகம் எடுத்து என்றார். மேலும் "கடந்த இரு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட ஒரு நீண்ட செயல்முறை ஆகும், இந்தியாவில் இது போன்ற விஷயங்களை ஆரம்பிக்க நேரம் எடுக்கிறது ஆனால் செயல்படுத்தும் வேகம் எடுத்தவுடன் விரைவாக செய்து முடிக்கப்படும். அதனால் திட்டங்களை செயல் படுத்துவதில் நான் எப்போதும் இந்தியாவை ஒரு மிகச் சிறந்து நாடு என்று கூறுவேன் என்றார்" [5]
2016 AFC U-16 சாம்பியன்ஷிப் போட்டியின் போது கோவாவில் 2016 செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டது. [6] பிபாவின் செய்தி வெளியீட்டின் படி இந்த சின்னம் "போட்டி நடத்தும் நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரங்களின் கொண்டாட்டமாக வடிவமைக்கப்பட்டது, இந்திய பெருங்கடலின் முக்கிய கூறுகள், ஆல மரம், காத்தாடி மற்றும் நட்சத்திர தீவு கொண்டதாக வடிவமைக்கப்பட்டது, இது அசோக சக்கர்த்தின் விளக்கமாகும், அசோக சக்ரம் இந்திய தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாகும்." [6]
2017 பிபா U-17 உலக கோப்பைக்கான நுழைவுச் சீட்டு விற்பனை தில்லியில் ஒரு விழாவில் மே 16, 2017 அன்று சிறப்பு விருந்தினர் கார்ல்ஸ் பியொல்லால் தொடங்கிவைக்கப்பட்டது. [7] பொது டிக்கட்டுகள் விற்பனை அதிகாரபூர்வமாக 17 மே 2017 அன்று 19:11 மணிக்கு தொடங்கியது. இது 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற (IFA Shield) கால்பந்துப் போட்டியில் முதல் முறையாக மோகன் பகான் அணி கிழக்கு யாக்சயர் ரெஜிமன்ட் அணியுடன் வெற்றி பெற்றதான் நினைவுகொள்ளும் வகையில் தொடங்கபட்டது. [7]
கொல்கத்தா | கொச்சி | தில்லி |
---|---|---|
சால்ட் லேக் அரங்கம் | ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், கொச்சி | ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி |
இருக்கைகள் எண்ணிக்கை: 66,687[8] | *இருக்கைகள் எண்ணிக்கை: 41,700[8] | இருக்கைகள் எண்ணிக்கை: 58,000[8] |
நவி மும்பை | குவகாத்தி | கோவா |
பாட்டில் விளையாட்டு அரங்கம் | இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் | பாஃடொரடா விளையாட்டு அரங்கம் |
இருக்கைகள் எண்ணிக்கை: 58,300[8] | இருக்கைகள் எண்ணிக்கை: 23,800[8] | இருக்கைகள் எண்ணிக்கை: 16,200[8] |
*பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இருக்கைகள் எண்ணிக்கை 29,000 மட்டும் பிபாவால் அனுமதிக்கப்பட்டுள்ளது
2017 பிபா U-17 உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியிலும் தலா 21 வீரர்கள் கொண்ட அணியாக இருக்கும். [9] இதில் பங்குபெரும் ஒவ்வொரு தேசிய நாடும் தங்களுது அணியில் விளையாடும் வீரர்கம்ளின் பட்டியலை 21 செப்டம்பர் 2017 குள் வெளியிட வேண்டும். 24ங்கு அணிகளையும் சேர்த்து மொத்தம் 504 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்குபெருவர். 26 செப்டம்பர் 2017 ஆம் தேதி அன்று பிபா அனைத்து அணிகளின் வீரர்கள் குறித்த விபரங்களை அதிகார பூர்வமாக வெளியிட்டது. [10][11]
ஒவ்வொரு குழுவில் இருந்தும் சிறந்த முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் இரண்டு அணிகள் மற்றும் குழுவில் சிறந்த மூன்றாம் அணிகள் என்ற முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் மொத்தம் 16 அணிகள் அடுத்தச் சுற்று (சுற்று 16) ஆட்டத்திற்கு தகுதி பெரும். குழுவில் உள்ள ஒவ்வொரு அணியின் நிலை பின்வரும் முறைகளை பயன்படுத்தி வரிசைப்படுத்தப் படுகிறது (ஒழுங்குபடுத்துதலுக்கான கட்டுரை 17.7) [12]
குழுவிற்குள் நடக்கும் அனைத்துப் போட்டிகளில் ஒரு அணியால்,
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | கானா (A) | 3 | 2 | 0 | 1 | 5 | 1 | +4 | 6 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | கொலம்பியா (A) | 3 | 2 | 0 | 1 | 5 | 3 | +2 | 6 | |
3 | ஐக்கிய அமெரிக்கா (A) | 3 | 2 | 0 | 1 | 5 | 3 | +2 | 6 | |
4 | இந்தியா (H, E) | 3 | 0 | 0 | 3 | 1 | 9 | −8 | 0 |
இந்தியா | 0–3 | ஐக்கிய அமெரிக்கா |
---|---|---|
அறிக்கை |
|
கானா | 0–1 | ஐக்கிய அமெரிக்கா |
---|---|---|
அறிக்கை |
|
ஐக்கிய அமெரிக்கா | 1–3 | கொலம்பியா |
---|---|---|
|
அறிக்கை |
|
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பரகுவை (A) | 3 | 3 | 0 | 0 | 10 | 5 | +5 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | மாலி (A) | 3 | 2 | 0 | 1 | 8 | 4 | +4 | 6 | |
3 | நியூசிலாந்து (E) | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1 | பெரும்பாலும் ஆட்டமிழக்கும் நிலை |
4 | துருக்கி (E) | 3 | 0 | 1 | 2 | 2 | 7 | −5 | 1 |
நியூசிலாந்து | 1–1 | துருக்கி |
---|---|---|
|
அறிக்கை |
|
பரகுவை | 4–2 | நியூசிலாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
மாலி | 3–1 | நியூசிலாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ஈரான் (A) | 3 | 3 | 0 | 0 | 10 | 1 | +9 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | செருமனி (A) | 3 | 2 | 0 | 1 | 5 | 6 | −1 | 6 | |
3 | கோஸ்ட்டா ரிக்கா (E) | 3 | 0 | 1 | 2 | 3 | 7 | −4 | 1 | |
4 | கினியா (E) | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1 |
செருமனி | 2–1 | கோஸ்ட்டா ரிக்கா |
---|---|---|
|
அறிக்கை |
|
கோஸ்ட்டா ரிக்கா | 2–2 | கினியா |
---|---|---|
|
அறிக்கை |
|
கோஸ்ட்டா ரிக்கா | 0–3 | ஈரான் |
---|---|---|
அறிக்கை |
|
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பிரேசில் (A) | 3 | 3 | 0 | 0 | 6 | 1 | +5 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | எசுப்பானியா (A) | 3 | 2 | 0 | 1 | 7 | 2 | +5 | 6 | |
3 | நைஜர் (A) | 3 | 1 | 0 | 2 | 1 | 6 | −5 | 3 | |
4 | வட கொரியா (E) | 3 | 0 | 0 | 3 | 0 | 5 | −5 | 0 |
பிரேசில் | 2–1 | எசுப்பானியா |
---|---|---|
|
அறிக்கை |
|
எசுப்பானியா | 4–0 | நைஜர் |
---|---|---|
|
அறிக்கை |
எசுப்பானியா | 2–0 | வட கொரியா |
---|---|---|
|
அறிக்கை |
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பிரான்சு | 3 | 3 | 0 | 0 | 14 | 3 | +11 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | சப்பான் | 3 | 1 | 1 | 1 | 8 | 4 | +4 | 4 | |
3 | ஒண்டுராசு | 3 | 1 | 0 | 2 | 7 | 11 | −4 | 3 | |
4 | நியூ கலிடோனியா | 3 | 0 | 1 | 2 | 2 | 13 | −11 | 1 |
நியூ கலிடோனியா | 1–7 | பிரான்சு |
---|---|---|
|
அறிக்கை |
|
ஒண்டுராசு | 5–0 | நியூ கலிடோனியா |
---|---|---|
|
அறிக்கை |
சப்பான் | 1–1 | நியூ கலிடோனியா |
---|---|---|
|
அறிக்கை |
|
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இங்கிலாந்து | 3 | 3 | 0 | 0 | 11 | 2 | +9 | 9 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | ஈராக் | 3 | 1 | 1 | 1 | 4 | 5 | −1 | 4 | |
3 | மெக்சிக்கோ | 3 | 0 | 2 | 1 | 3 | 4 | −1 | 2 | |
4 | சிலி | 3 | 0 | 1 | 2 | 0 | 7 | −7 | 1 |
சிலி | 0–4 | இங்கிலாந்து |
---|---|---|
அறிக்கை |
|
ஈராக் | 1–1 | மெக்சிக்கோ |
---|---|---|
|
அறிக்கை |
|
இங்கிலாந்து | 3–2 | மெக்சிக்கோ |
---|---|---|
|
அறிக்கை |
|
இங்கிலாந்து | 4–0 | ஈராக் |
---|---|---|
|
அறிக்கை |
மூன்றாம் இடம் பிடித்த முதல் நான்கு அணிகள் கீழ்கண்ட விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்படும். (ஒழுங்குப்படுத்துதலுக்கான விதிகளின் கட்டுரை 17.7):[12]
நிலை | குழு | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | அ | கானா | 3 | 2 | 0 | 1 | 5 | 3 | +2 | 6 | ஆட்டமிழக்கும் நிலை |
2 | உ | ஒண்டுராசு | 3 | 1 | 0 | 2 | 7 | 11 | −4 | 3 | |
3 | ஈ | நைஜர் | 3 | 1 | 0 | 2 | 1 | 6 | −5 | 3 | |
4 | ஊ | மெக்சிக்கோ | 3 | 0 | 2 | 1 | 3 | 4 | −1 | 2 | |
5 | ஆ | நியூசிலாந்து | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1[lower-alpha 1] | |
6 | இ | கோஸ்ட்டா ரிக்கா | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1[lower-alpha 1] |
16 அணிகளின் சுற்று | காலிறுதிகள் | அரையிறுதிகள் | இறுதிப்போட்டி | |||||||||||
16 October — தில்லி | ||||||||||||||
கொலம்பியா | 0 | |||||||||||||
22 October — கொல்கத்தா | ||||||||||||||
செருமனி | 4 | |||||||||||||
செருமனி | 1 | |||||||||||||
18 October — ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (கொச்சி) | ||||||||||||||
பிரேசில் | 2 | |||||||||||||
பிரேசில் | 3 | |||||||||||||
25 October — இந்திராகாந்தி விளையாட்டரங்கம் | ||||||||||||||
ஒண்டுராசு | 0 | |||||||||||||
பிரேசில் | 1 | |||||||||||||
16 October — தில்லி | ||||||||||||||
இங்கிலாந்து | 3 | |||||||||||||
பரகுவை | 0 | |||||||||||||
21 October — கோவா | ||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா | 5 | |||||||||||||
ஐக்கிய அமெரிக்கா | 1 | |||||||||||||
17 October — கொல்கத்தா | ||||||||||||||
இங்கிலாந்து | 4 | |||||||||||||
இங்கிலாந்து (pen.) | 0 (5) | |||||||||||||
28 October — கொல்கத்தா | ||||||||||||||
சப்பான் | 0 (3) | |||||||||||||
இங்கிலாந்து | 5 | |||||||||||||
17 October — கோவா | ||||||||||||||
எசுப்பானியா | 2 | |||||||||||||
மாலி | 5 | |||||||||||||
21 October — இந்திராகாந்தி விளையாட்டரங்கம் | ||||||||||||||
ஈராக் | 1 | |||||||||||||
மாலி | 2 | |||||||||||||
18 October — பாட்டில் விளையாட்டு அரங்கம் (நவி மும்பை) | ||||||||||||||
கானா | 1 | |||||||||||||
கானா | 2 | |||||||||||||
25 October — பாட்டில் விளையாட்டு அரங்கம் (நவி மும்பை) | ||||||||||||||
நைஜர் | 0 | |||||||||||||
மாலி | 1 | |||||||||||||
17 October — இந்திராகாந்தி விளையாட்டரங்கம் | ||||||||||||||
எசுப்பானியா | 3 | மூன்றாம் இடம் | ||||||||||||
பிரான்சு | 1 | |||||||||||||
22 October — ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (கொச்சி) | 28 October — கொல்கத்தா | |||||||||||||
எசுப்பானியா | 2 | |||||||||||||
எசுப்பானியா | 3 | பிரேசில் | 2 | |||||||||||
17 October — கோவா | ||||||||||||||
ஈரான் | 1 | மாலி | 0 | |||||||||||
ஈரான் | 2 | |||||||||||||
மெக்சிக்கோ | 1 | |||||||||||||
பரகுவை | 0–5 | ஐக்கிய அமெரிக்கா |
---|---|---|
அறிக்கை |
|
ஈரான் | 2–1 | மெக்சிக்கோ |
---|---|---|
|
அறிக்கை |
|
பிரான்சு | 1–2 | எசுப்பானியா |
---|---|---|
|
அறிக்கை |
|
இங்கிலாந்து | 0–0 | சப்பான் |
---|---|---|
அறிக்கை | ||
ச.நீ | ||
|
5–3 |
|
ஐக்கிய அமெரிக்கா | 1–4 | இங்கிலாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
எசுப்பானியா | 3–1 | ஈரான் |
---|---|---|
|
அறிக்கை |
|
பிரேசில் | 1–3 | இங்கிலாந்து |
---|---|---|
|
|
மாலி | 1–3 | எசுப்பானியா |
---|---|---|
|
|
இங்கிலாந்து | 5–2 | எசுப்பானியா |
---|---|---|
|
|
கீழ்கண்ட விருதுகள் இறுதிப் போட்டியின் முடிவில் வழங்கப்பட்டது.
தங்கப் பந்து | வெள்ளிப் பந்து | வெண்கலப் பந்து |
---|---|---|
பில் ஃபோடான் | சர்ஜியோ கோம்ஸ் மார்டின் | ரியன் பிரவுஸ்டர் |
தங்கப் பூட் | வெள்ளிப் பூட் | வெண்கலப் பூட் |
ரியன் பிரவுஸ்டர் | லிசானா நிதியா | அபெல் ரூஸ் |
8 goals | 6 goals | 6 goals |
தங்கக் கையுறை | ||
கேப்ரியல் பிராசோ | ||
பிஃபா சிறந்த ஒழுக்க விருது | ||
பிரேசில் |
28 அக்டோபர் 2017 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கும் பிஃபா 17 வயதுக்குடபட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி பல புதிய சாதனைகளை படைத்திருக்கிறது.
தரவரிசை | அணி | ஆ | வெ | ச | தோ | கோ த | கோ எ | கோ வே | பு | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இங்கிலாந்து | 7 | 6 | 1 | 0 | 23 | 6 | +17 | 19 | |
2 | எசுப்பானியா | 7 | 5 | 0 | 2 | 17 | 10 | +7 | 15 | |
3 | பிரேசில் | 7 | 6 | 0 | 1 | 14 | 5 | +9 | 18 | |
4 | மாலி | 7 | 4 | 0 | 3 | 16 | 11 | +5 | 12 | |
காலிறுதிச் சுற்றுடன் வெளியேற்றம் | ||||||||||
5 | ஈரான் | 5 | 4 | 0 | 1 | 13 | 5 | +8 | 12 | |
6 | கானா | 5 | 3 | 0 | 2 | 8 | 3 | +5 | 9 | |
7 | ஐக்கிய அமெரிக்கா | 5 | 3 | 0 | 2 | 11 | 7 | +4 | 9 | |
8 | செருமனி | 5 | 3 | 0 | 2 | 10 | 8 | +2 | 9 | |
16 சுற்று ஆட்டத்தில் வெளியேற்றம் | ||||||||||
9 | பிரான்சு | 4 | 3 | 0 | 1 | 15 | 5 | +10 | 9 | |
10 | பரகுவை | 4 | 3 | 0 | 1 | 10 | 10 | 0 | 9 | |
11 | கொலம்பியா | 4 | 2 | 0 | 2 | 5 | 7 | −2 | 6 | |
12 | சப்பான் | 4 | 1 | 2 | 1 | 8 | 4 | +4 | 5 | |
13 | ஈராக் | 4 | 1 | 1 | 2 | 5 | 10 | −5 | 4 | |
14 | ஒண்டுராசு | 4 | 1 | 0 | 3 | 7 | 14 | −7 | 3 | |
15 | நைஜர் | 4 | 1 | 0 | 3 | 1 | 8 | −7 | 3 | |
16 | மெக்சிக்கோ | 4 | 0 | 2 | 2 | 4 | 6 | −2 | 2 | |
குழு ஆட்டத்தில் வெளியேற்றம் | ||||||||||
17 | கினியா | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1 | |
நியூசிலாந்து | 3 | 0 | 1 | 2 | 4 | 8 | −4 | 1 | ||
19 | கோஸ்ட்டா ரிக்கா | 3 | 0 | 1 | 2 | 3 | 7 | −4 | 1 | |
20 | துருக்கி | 3 | 0 | 1 | 2 | 2 | 7 | −5 | 1 | |
21 | சிலி | 3 | 0 | 1 | 2 | 0 | 7 | −7 | 1 | |
22 | நியூ கலிடோனியா | 3 | 0 | 1 | 2 | 2 | 13 | −11 | 1 | |
23 | வட கொரியா | 3 | 0 | 0 | 3 | 0 | 5 | −5 | 0 | |
24 | இந்தியா | 3 | 0 | 0 | 3 | 1 | 9 | −8 | 0 |
கவனிக்கவும்: தடிமனான பெயர்கள் இருக்கும் வீரர்கள் இன்னும் போட்டியில் உள்ளனர்.
பிஃபா 2017 - 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஊடகம் மற்றும் ஒளிபரப்பும் உரிமையை 21 செப்டம்பர் 2017 ஆம் தேதி வெளியிட்டது. [15] இந்தியாவிற்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி டென் (Sony TEN) மற்றும் சோனி ஈஸ்பின் (Sony ESPN) [16] பெற்றது. அமெரிக்காவில் Fox Sports 2 தொலைக்காட்சியும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் Eurosport தொலைக்காட்சியும் பெற்றுள்ளது.[17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.