From Wikipedia, the free encyclopedia
2017 கோவா சட்டப் பேரவைத் தேர்தல் கோவா சட்டமன்றத்திற்கான 40 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 4 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும். வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை அனைத்து 40 தொதிகளிலும் பொருத்தப்பட்டது. இந்தியாவில் முழு மாநிலத்திற்கும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை பயன்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.[1][2][3]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கோவா சட்டப் பேரவையின் அனைத்து 40 தொகுதிளுக்கும் அதிகபட்சமாக 21 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 82.56% ▼ 0.38% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
தற்போதைய சட்டமன்றம் மார்ச் 18, 2017 அன்று முடிவடைகிறது[4] , கடந்த தேர்தலில் பாசக மனோகர் பாரிக்கர் தலைமையில் பெரும்பான்மை பெற்றது. மனோகர் பாரிக்கர் கோவாவின் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 இல், பாதுகாப்பு அமைச்சர் ஆக தெரிவு செய்யப்பட்டதால் அவர் பதவி விலகினார், அதன் காரணமாக லட்சுமிகாந்த் பர்சேகர் முதல்வராக பொறுப்பேற்றார்.[5][6]
37 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள கிறுத்துவர்கள் பலமாக உள்ள 3 தொகுதிகளில் மற்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் என்று மாநில பாசக தலைவர் வினய் தெண்டுல்கர் தெரிவித்தார்.[8]
21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாசக அறிவித்தது.[9] வாசுகோ தொகுதி வேட்பாளர் தேர்வில் அதிருப்தி கொண்டு பாசகவின் தெற்கு கோவா மாவட்ட துணைத் தலைவர் கிருட்டிண சல்கார் கட்சியிலிருந்து விலகினார்.[10]
2012 தேர்தலுக்கு முன்பிருந்தே தாங்கள் பாசகவுடன் கூட்டணி வைத்திருந்ததாகவும், அது தற்போது முறிந்து விட்டது என்றும் சனவரி 5, 2017 அன்று இக் கட்சியின் தலைவர் கூறினார்.[11] 22 தொகுதிகளில் மகோக போட்டியிடும் என்று கூறினார்[12]
ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளராக எல்விசு கோம்சை அறிவித்தது.[13][14]
83% வாக்குப்பதிவு நடந்தது. தவறான நடத்தை விதிகள் பின்பற்றபட்டதன் காரணமாக மர்மகோவா தொகுதிக்கு மறுதேர்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டது.[15]
கட்சியின் பெயர் | வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை | பெற்ற வாக்கு % |
---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 17 | 28.4 |
பாசக | 13 | 32.5 |
தேசியவாத காங்கிரசு | 1 | 2.3 |
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி | 3 | 11.3 |
கோவா முன்னேற்ற கட்சி | 3 | 3.5 |
கட்சி சார்பற்றவர்கள் | 3 | 11.1 |
ஆளுநர் பாசகவை ஆட்சியமைக்க அழைத்து 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.[16] நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாசக அரசு வென்றுள்ளது.[17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.