![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7b/Quai_des_%25C3%2589tats-Unis%252C_Nice-001.jpg/640px-Quai_des_%25C3%2589tats-Unis%252C_Nice-001.jpg&w=640&q=50)
2016 நீசு தாக்குதல்கள்
From Wikipedia, the free encyclopedia
சூலை 14, 2016 அன்று பிரான்சின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் நாள் கொண்டாட்டங்களின் போது மக்கள்கூட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நீஸ் புரோமானாடு டெசு ஆங்கிலேசு சாலையில் வேண்டுமென்றே மக்கள்கூட்டத்தின்மீது சுமையுந்து ஒன்றை மிக விரைவாக ஓட்டியும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியும் குறைந்தது 84 பேர் வரை கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் தனியாள் என்றும் வாகனம் இரண்டு கிமீ (1.25 மைல்கள்) கூட்டத்தினுள் சென்று மோதியது என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. இந்த சுமையுந்தின் ஓட்டுநரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.[5] இந்தத் தாக்குதலை நடத்தியவர் மொகமது லாவ்யிஜ் பூலெல் என கண்டறியப்பட்டுள்ளது.[6][7]
விரைவான உண்மைகள் இடம், ஆள்கூறுகள் ...
2016 நீசு தாக்குதல் | |
---|---|
![]() புரோமானாடெ சாங்கிலேசு ( 2004இல் எடுக்கப்பட்டது) | |
![]() தாக்கிய வழி - மேற்கிலிருந்து கிழக்காக | |
இடம் | புரோமானாடெ சாங்கிலேசு, நீஸ், பிரான்சு |
ஆள்கூறுகள் | 43.693616°N 7.255654°E / 43.693616; 7.255654 |
நாள் | 14 சூலை 2016 (2016-07-14) (பாஸ்டில் நாள்) அண். 22:45 CEST (UTC+02:00) |
தாக்குதல் வகை | வாகனத் தாக்குதல் |
ஆயுதம் | A 7.5–18-டன் ரெனொ மிட்லம் சுமையுந்து, தாக்குதல் நீள் துப்பாக்கி |
இறப்பு(கள்) | 84+[1][2][3] |
காயமடைந்தோர் | 202 (52 மிகமோசமாக)[2] |
தாக்கியோர் | மொகமது லாவ்யிஜ் பூலெல், 31-அகவை பிரான்சிய-தூனிசியர்.[4] |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/2016_Nice_attack.png/640px-2016_Nice_attack.png)