From Wikipedia, the free encyclopedia
2008 கோடை ஒலிம்பிக் பதக்க நிலவரம் என்பது சீனாவில் பெய்ஜிங்கில் இடம்பெற்ற 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை பட்டியல் ஆகும். இப்போட்டிகள் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெற்றன. கிட்டத்தட்ட 10,500 போட்டியாளர்கள் 28 வகையான விளையாட்டுக்களில் 302 போட்டிகளில் பங்குபற்றினர்[1].
ஆப்கானிஸ்தான்,[2] பாஹ்ரேன்,[3] மொரீசியஸ்,[4] சூடான், தஜிகிஸ்தான்[5], டோகோ[6] ஆகிய நாடுகள் தமது முதலாவது ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றன. சேர்பியா தனது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தை தனிநாடாகப் பெற்றுக் கொண்டது. இது முன்னர் யூகொஸ்லாவியா அணியில் விளையாடி பதக்கங்களைப் பெற்றிருந்தது[7]. பாஹ்ரேன், மங்கோலியா, பனாமா ஆகியன தமது முதலாவது தங்கப் பதகங்களைப் பெற்றுக் கொண்டன[8]. மொத்தம் 88 நாடுகள் பதக்கங்களைப் பெற்றன. இவற்றில் 55 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.