1999 ஒடிசா புயல் ( இந்திய வானிலை ஆய்வுத்துறை இட்ட பெயர் BOB 06,[1][2] ) என்பது வட இந்திய பெருங்கடலில் உருவாகிய மிகப்பெரிய வெப்பமண்டல புயலாகும். இது இப்பகுதியைத் தாக்கிய மிகவும் அழிவுகரமான புயலாக இருந்தது.
1999 ஒடிசா புயல் 25 அக்டோபர் அன்று அந்தமான் கடலில், புயலாக உருவாகியது. பின் மேற்கு-வட மேற்கு நோக்கி நகரத் துவங்கியப் புயல் தொடர்ந்ந்து வலு அடைந்துக் கொண்டே இருந்தது. பின் 28 அக்டோபர் அன்று சாதகமான சூழலில் மிகவும் தீவிரம் அடைந்து அதி தீவிரப் புயலாக உருமாறியது.
அடுத்த நாளில் 260 கீமீ / ம (160 மைல்/ம) வேகத்தில் காற்று வீசியது மற்றும் 912 பார் என குறைந்த அழுத்தம் பதிவானது. இப்புயல் ஒடிசாவில் அக்டோபர் 29 தேதி கரையைக் கடக்கத்தொடங்கியது. தொடர்ச்சியான நில பரவல் மற்றும் வறண்ட காற்று காரணமாக புயல் பலவீனம் ஆனது. புயல் நவம்பர் 4 இல் வங்காள விரிகுடாவில் மறைந்தது.
தாக்கம்
மியான்மர் மற்றும் பங்களாதேஷ்
மியான்மரில், 10 மக்கள் புயலில் கொல்லப்பட்டனர் மற்றும் 20,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.[3]
பங்களாதேஷின் தெற்கே கடந்து, 1999 ஒடிசா புயலின் வடக்குப் பகுதி நாடெங்கும் வீசியடித்தது. இப்புயலின் காரணமாக பங்களாதேஷில் இரண்டு பேர் இறந்தனர்.[4]
இந்தியா
ஒடிசா மாநிலத்தைத் தாக்கிய இப்புயல், 20ஆம் நூற்றாண்டில் ஒடிசாவைத் தாக்கிய மிக கடுமையானப் புயலாகும்.[5]
ஒடிசாவின் பன்னிரெண்டு மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன. இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இவற்றில், ஜகத்சிங்பூரில் உள்ள இராஸ்மா மற்றும் குஜாங்க் ஊராட்சிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
புயல் காரணமாக மொத்தம், 12.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; புயல் இறப்பு எண்ணிக்கை கணிசமாக மாறுபட்டன. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் படி சுமார் 9,887 இப்புயலில் கொல்லப்பட்டனர், மேலும் 40 பேர் காணாமல் போனவர்கள் மற்றும் 2,507 பேர் காயமடைந்தனர். இந்த மரணங்கள் பெரும்பாலானவை ஜகத்சிங்பூரில் நிகழ்ந்தன. இந்த மாவட்டத்தில் மட்டும் 8,119 கொல்லப்பட்டனர்.[1] EM-DAT பேரழிவு தரவுத்தளம் புயலில் 10,915 மக்கள் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடுகிறது .[6] இருப்பினும், மற்ற மதிப்பீடுகள் இறப்பு எண்ணிக்கை 30,000 ஆக உயர்ந்திருக்கக்கூடும் என்று தெரிவித்தது. புயலின் விளைவுகள் 14,643 கிராமங்கள் மற்றும் 97 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1.6 மில்லியன் வீடுகள் சேதமடைந்தன .[1] இப்புயலில் மட்டும் 2.5 மில்லியன் மக்கள் சிக்கிக்கொண்டு இருந்தனர்.[5] மொத்தமாக இந்த புயலினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 4.4444 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிட்டுள்ளனர்.
வெளிநாடுகளின் பங்களிப்பு
நாடு | பங்களிப்பு (USD) [note 1] |
---|---|
ஆஸ்திரேலியா | $1,91,700 |
கனடா | $2,03,964 |
டென்மார்க் | $64,361 |
ஐரோப்பிய ஒன்றியம் | $21,02,000 |
பின்லாந்து | $1,76,955 |
ஜெர்மனி | $2,34,447 |
நெதர்லாந்து | $2,38,554 |
நியூசிலாந்து | $99,823 |
ஸ்வீடன் | $1,21,959 |
சுவிச்சர்லாந்து | $8,45,236 |
ஐக்கிய ராஜ்யம் | $13,00,000 |
அமெரிக்கா | $74,82,000 |
மொத்த | $1,30,60,999 |
மேலும் காண்க
- கோனு புயல்
- பைலின் புயல்
- ஹூத் ஹுத் புயல்
- 1977 ஆந்திரா பிரதேசப் புயல்
- 1970 போலா சூறாவளி
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.