![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/SE1955Jun20T.png/640px-SE1955Jun20T.png&w=640&q=50)
1955 சூன் 20 கதிரவ மறைப்பு
From Wikipedia, the free encyclopedia
முழுமையான கதிரவ மறைப்பு ஒன்று 1955 சூன் 20 அன்று இடம்பெற்றது. புவிக்கும் ஞாயிறுக்கும் இடையே நிலா வரும் போது கதிரவ மறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெறுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் கதிரவனை விட அதிகமாக இருக்கும் போது முழுமையான மறைப்பு ஏற்படுகிறது. இதன்போது, கதிரவனின் நேர்க் கதிர்கள் அனைத்தும் புவிக்கு வருவது தடுக்கப்பட்டு புவி இரவாகிறது.
சூன் 20, 1955-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | முழு மறைப்பு |
காம்மா | -0.1528 |
அளவு | 1.0776 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | 428 வி (7 நி 8 வி) |
ஆள் கூறுகள் | 14.8°N 117°E / 14.8; 117 |
பட்டையின் அதியுயர் அகலம் | 254 km (158 mi) |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 4:10:42 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 136 (34 of 71) |
அட்டவணை # (SE5000) | 9410 |
1955 கதிரவ மறைப்பு மொத்தம் 7 நிமிடங்கள் 7.74 செக்கன்களுக்கு நீடித்திருந்தது. இதுவே சாரோசு தொடர் 136 இல் இடம்பெற்ற மிக நீண்ட கதிரவ மறைப்பும், 11-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இடம்பெற்ற மிக நீண்ட மறைப்பும், அத்துடன் 2150 சூன் 25 இற்கு முன்னர் இடம்பெற்ற மிக நீண்ட கதிரவ மறைப்பும் ஆகும்.[1] முழுமையான மறைப்பு இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மேலாக சீசெல்சு, மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளில் ஆரம்பித்து இலங்கை (கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட), அந்தமான் தீவுகள், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோசு, தென் வியட்நாம், பராசெல் தீவுகள், அதன் பின்னர் பிலிப்பீன்சு (மணிலா உட்பட), பசிபிக் தீவுகளான பலாவு, நுக்குமானு தீவுகள், ஆகியவற்றைக் கடந்து பின்னர் பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள் வழியாக தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் முடிவடைந்தது.