.நெட் வரைவுரு
From Wikipedia, the free encyclopedia
.நெட் வரைவுரு (.NET Framework, .நெட் பிரேம்வொர்க்)[1],(டொட் நெட், dot net என்று ஒலிக்கப்படுகிறது) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கட்டமைப்பு ஆகும். இது மைக்ரோசாப்ட் விண்டோசில் இயங்குகிறது.
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
---|---|
தொடக்க வெளியீடு | 13 பெப்ரவரி 2002; 22 ஆண்டுகள் முன்னர் (2002-02-13) |
அண்மை வெளியீடு | 4.5.2 (4.5.51209.34209) / 6 மே 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-05-06) |
இயக்கு முறைமை | விண்டோசு 98 உம் அதற்புக் பின்னரும், விண்டோசு என். டி. 4.0 உம் அதற்குப் பின்னரும். |
மென்பொருள் வகைமை | மென்பொருள் சட்டகம் |
உரிமம் | மூடிய மூலம் |
இணையத்தளம் | microsoft |
இந்த வரைவுரு பல உலக மொழிகளை உறுதுணை செய்கிறது (ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளில் எழுதப்பட்ட குறியீடுகளை பயன்படுத்த முடியும்). இவ்வரைவுருவில் எழுதப்பட்ட நிரல் மொழிகள் CLR எனப்படும் ஒரு மெய்நிகர் இயந்திரத்தால் (application virtual machine) இயக்கப்படுகின்றன.
இந்த CLR பாதுகாப்பு, நினைவக மேலாண்மை, மற்றும் பிழை கையாளுதல் ஆகிய சேவைகளை வழங்குகிறது. பொதுவாக CLR மற்றும் Class Library சேர்ந்ததே .நெட் பிரேம்வொர்க் எனப்படுகிறது.
பயனர் இடைமுகம், தகவல் பெறுதல், தரவுத்தளம் இணைப்பு, மறையீட்டியல், வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் போன்ற அடிப்படை வசதிகளை .நெட் பிரேம்வொர்க் வழங்குகிறது.
. நெட் மென்பொருள்கள் பெரும்பாலும் விசுவல் ஸ்டுடியோ எனப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் IDE மூலம் உருவாக்கப்படுகின்றது.