துகள்கள் நிறை கொடுக்கும் ஹிக்ஸ் புலம் தொடர்பான அடிப்படை துகள் From Wikipedia, the free encyclopedia
ஹிக்ஸ் போசான் (Higgs Boson) என்பது நிறையுடைய ஓர் அணுத் துகள் ஆகும். இந்த ஹிக்ஸ் போசான் அல்லது இகிசு போசானைக் கடவுள் துகள் (God Particle) என்றும் குறிப்பிடுவர். இதனைக் கண்டுபிடிக்க அரிதாக இருந்ததால், "கிடைக்கமாட்டாது இருக்கும் துகள்" என்னும் பொருள்படும் "goddamn particle" என்று ஆங்கிலச் சொல்லை நோபல் பரிசாளர் இலியான் இலேடர்மன் (Leon M. Lederman) குறிப்பிட்டார்[1]. ஆனால் அது பதிப்பாளர்களால் சுருக்கம் பெற்று கடவுள் துகள் என்று பிழையான பொருளுடன் வழங்கலாயிற்று. "கடவுள் துகள்" என்கிற பெயர் பொருத்தமற்ற பரபரப்பு என்று ஹிக்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.[2][3] இந்தத் துகளின் பண்புகளை மிகவும் ஒத்த ஓர் அணுத்துகளை, சூலை 4, 2012, பெரிய ஆட்ரான் மோதுவியில் நிகழ்த்திய இரண்டு தனித்தனி செய்நிலை மெய்த்தேர்வில் இருந்து கண்டுபிடித்தனர். இது 125 GeV/c2 நிறையுடன் (ஏறத்தாழ 133 நேர்மின்னிகள் நிறை) உள்ள புதிய அணுத்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்பொழுது அறிந்தவரை இகிசு போசான் (ஹிக்ஸ் போசான்) என்னும் கருத்தியல் பண்புகளோடு பொருந்தி உள்ளது என்று கூறப்படுகின்றது. ஆனால் இன்னும் கூடுதலான செய்கள மெய்த்தேர்வுகள் செய்து இதனை உறுதி செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.[4][5][6][7][8]
இகிசு போசானை அடையாளம் காட்டக்கூடிய தனிச்சிறப்பான நிகழ்ச்சியை நேர்மின்னி-நேர்மின்னி மோதுதலின் ஒப்புரு (சிமியுலேசன்) வழியாக காட்டப்பட்டுளது. இது சிதைந்து ஏறத்தாழ உடனே இரண்டு ஆட்ரான் பீச்சாகவும் எதிர்மின்னிப் பீச்சாகவும் மாறுகின்றது. இவை காணக்கூடிய ஒளிவரிகளாக உள்ளன. | |
Composition | அடிப்படைத் துகள் |
---|---|
Statistics | போசான் |
Status | Hypothetical |
Symbol | H0 |
Theorized | F. Englert, R. Brout, P. Higgs, G. S. Guralnik, C. R. Hagen, and T. W. B. Kibble (1964) |
Discovered | Not yet (as of திசம்பர் 2011[update]); searches ongoing at the LHC |
Types | 1, according to the சீர்மரபு ஒப்புரு; 5 or more, according to supersymmetric models |
Mass | likely 115–130 GeV/c2 |
Electric charge | 0 |
Spin | 0 |
அடிப்படையில் போசான்கள் என்பவை ஒரே குவாட்டம் நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட துகள்கள் இருக்கலாம் என்னும் பண்பு வகையைச் சேர்ந்தவை (இதற்கு மாறாக பெர்மியான்கள் என்பவை ஒரு குவாண்டம் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட துகள் இருக்கலாகாது என்னும் வகையைச் சேர்ந்தவை. எதிர்மின்னி ஒரு பெர்மியான்). நீலம் சிவப்பு போன்ற நன்கு அறியப்படும் ஒளியலைகளைக் குறிக்கும் ஒளியன்கள் போசான் வகையைச் சேர்ந்த துகள்களாகும். துகள் என்பது ஒரு புலத்தில் தோன்றும் அலையாகவும் கருதப்படுகின்றது. அணுத்துகள்கள் மேசான், குளுவான் முதலியனவும் போசான் வகைத் துகள்கள்.
இந்த வரிசையில் அணுக்களுக்குப் நிறை அலல்து திணிவு என்பதை அளிப்பது இந்த இகிசு போசான்கள் என்று 1960-ல் இசுக்காட்லாந்தைச் சேர்ந்த பிரித்தானிய இயற்பியல் அறிவியலாளர் பீட்டர் இகிசு என்பவர் "நிறையின் தோற்றம் ('Origin of Mass') எனும் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதைத்தான் இகிசு போசான் ('ஹிக்ஸ் போசான்') என்றும் 'கடவுள் துகள்' (God Particle) என்றும் அழைக்கின்றனர். இதுவே அணுவின் கட்டமைப்புக்கு அடிநிலைத் தோற்றுப்பொருளாக இருக்கக்கூடும் என்பது அறிவியலாளர்களின் ஆழமான நம்பிக்கை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.