From Wikipedia, the free encyclopedia
வில்லியம் வேலசு (William Wallace) ஸ்காட்லாந்தின் விடுதலைக்காக இங்கிலாந்து அரசர் முதலாம் எட்வர்டை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் ஆவார்..[2]
சர் வில்லியம் வேலசு | |
---|---|
பிறப்பு | 1272 [1] எல்டர்ஸ்லீ, ஸ்காட்லாந்து |
இறப்பு | 23 August 1305 (அகவை 32–33) சுமித்ஃபீல்டு, இங்கிலாந்து |
இறப்பிற்கான காரணம் | தலை வெட்டப்படல் |
பணி | ஸ்காட்லாந்து விடுதலைப் போர்த் தளபதி |
பெற்றோர் | மால்கம் வேலசு, மார்கரெட் |
பிள்ளைகள் | யாரும் இருந்ததாய்ப் பதிவு செய்யப்படவில்லை. |
1272 ஆம் ஆண்டு பிறந்த இவர் 23.08.1305 அன்று ஆங்கிலேயர்களால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
பரம்பரைக் கதைகள் வேலசை சாதாரண குடிமகனாகவும் இராபர்ட் புரூஸை உயர்குடியினராயும் காட்டுகின்றன. ஆனால் வேலசும் உயர்குடிப் பிறப்பினரே.
முதலாம் எட்வர்டு ஸ்காட்லாந்தின் முடியுடை அரசர் இங்கிலாந்தின் முடியரசரைத் தனக்கு மேலானவராக ஏற்று அவரின் கீழ் ஆட்சி நடத்தும் வரை ஸ்காட்லாந்துக்கு மன்னர் என்று ஒருவர் இருப்பார் என்றார். ஸ்காட்லாந்துப் பிரபுக்கள் அனைவரும் முதலாம் எட்வர்டு முன் அடிபணிய வேண்டிய இச் சூழலை விரும்பாத வேலசு துணிவுடன் எட்வர்டை எதிர்த்துப் பல போர்களில் இறங்கினார். அவை:
ஸ்டிர்லிங் பாலப் போர் - 11.09.1297 ஆம் ஆண்டு நடந்த இப் போரில் தந்திரத்துடன் செயல்பட்ட வேலசு பெரும் படையை வென்றார். ஆறு மாதங்கள் கழித்து, வேலசு வடக்கு இங்கிலாந்தை ஊடுருவினார். இதன் நோக்கம் ஆங்கிலேயர்களுக்கு ஸ்காட்லாந்தினரிடம் போதிய படைவலிமை உள்ளது என்பதை நீரூபிப்பதாகும்.
ஃபால்கிர்க் போர் - 01.04.1298 இல் நடந்த இப்போரில் எட்வர்டு வென்றாலும் வேலசு தப்பி விட்டார்.
13.08.1305 வரை எட்வர்டுக்கு விசுவாசமான ஒருவர் வேலசைக் காட்டிக்கொடுக்கும் வரை ஆங்கிலப் படைகளால் அவரைப் பிடிக்க இயலவில்லை. கிளாஸ்கோவுக்கு அருகில் பிடிக்கப்பட்ட வேலசு இலண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது இராசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. குற்ற விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் அவையில் நடைபெற்றது. விசாரணையின் போது 'நான் இராசத்துரோகி அல்லன். ஏனெனில் நான் எட்வர்டுக்கு குடிமகனே அல்லன்!' என்று முழங்கினார். அவர் மீதான குற்றம் உறுதி செய்ய்ப்ட்டது. அவருக்கு இங்கிலாந்தில் வழங்கப்பட்ட தண்டனைகளிலேயே கொடூரமான தண்டனையான தூக்கிலிடல், குடலுருவல் மற்றும் நான்குதுண்டமாக்கல் எனும் தண்டனை வழங்கப்பட்டது.
23 ஆகஸ்டு 1305 இல் விசாரணை முடிந்த பின்னர் அவையில் இருந்து கொண்டுவரப்பட்ட வேலசு நிர்வாணமாய் குதிரையின் குளம்புகளில் கட்டப்பட்டு நகர வீதிகளில் இழுத்துவரப்பட்டார். அவர் சாகாத வகையில் தூக்கில் இடப்பட்டார். தூக்கில் இருந்து இறக்கப்பட்ட பின் அவர் கண்முன் அவர் வயிறு கிழிக்கப்பட்டது; ஆணுறுப்பு அறுக்கப்பட்டது. கிழிக்கப்பட்டதும் அறுக்கப்பட்டதும் அவர் கண்முன்னே எரிக்கப்பட்டன. கடைசியில் அவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார். அவரின் உடல் நான்கு துண்டமாக்கப்பட்டது. தாரில் முக்கப்பட்ட அவரது தலை மற்றவர்களை எச்சரிக்கும் பொருட்டு இலண்டன் பாலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது..[3] உடலின் நான்கு பாகங்கள் நான்கு வெவ்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
பிரேவ் ஹார்ட் (Braveheart) எனும் ஹாலிவுட் திரைப்படம் வேலசின் வாழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.