From Wikipedia, the free encyclopedia
வடமேற்கு இந்தியப் போர் (1785–1795), சிறிய ஆமைகளின் போர் என்றும் மேலும் பல பெயர்களாளும் அறியப்படுகிறது. இப்போரானது ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொல் குடிகளின் கூட்டமைப்புக்கும் இடையே நடந்தது. வடமேற்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்த தொல் குடிகளின் கூட்டமைப்பிற்குப் பிரித்தானியா ஆதரவு கொடுத்தது. நூறாண்டுகளாக அமெரிக்காவிற்கும் அமெரிக்கத் தொல் பழங்குடி இனத்தவருக்கும் இடையே இப்பகுதியின் கட்டுப்பாடு யாரிடம் இருப்பது என்று தகராறு இருந்து வந்தது, பின்னாளில் பிரான்சு, பிரித்தானியா மற்றும் அவற்றின் குடியேற்றப் பகுதிகள் இத்தகராறில் அமெரிக்கத் தொல் குடிகளுக்கு ஆதரவாக இறங்கின.
வடமேற்கு இந்தியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
அமெரிக்க இந்தியப் போர்கள் பகுதி | |||||||
கிரீன்வில் உடன்பாட்டு உரையாடல்களின் இந்த ஓவியத்தை அந்தோணி வேய்னின் அலுவலர்கள் எவரேனும் வரைந்திருக்கலாம். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா | மேற்கத்திய கூட்டணி பெரிய பிரித்தானியா |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சியார்ச் வாசிங்டன் யோசியா ஆர்மர் ஆர்தர் செயின்ட் கிளையர் அந்தோணி வேய்ன் | அலெக்சாண்டர் மக்கில்லோப் புளூ ஜாக்கெட் லிட்டில் டர்ட்டில் பக்கோன்ககெலாசு எகுஷாவா |
||||||
பலம் | |||||||
4,000 | 2,000 | ||||||
இழப்புகள் | |||||||
1,221 கொல்லப்பட்டனர் 458 காயமடைந்தனர் | 1,000+ கொல்லப்பட்டனர் |
பாரிசு உடன்படிக்கையின் (1783) படி அமெரிக்க புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது. அவ்வுடன்படிக்கையின்படி பிரித்தானியா எண்ணற்ற தொல் குடிகள் வசித்து வந்த வடமேற்கு பகுதியின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் கையளித்தது. உடன்படிக்கையின் படி கட்டுப்பாட்டை கையளித்திருந்தாலும் பிரித்தானியா கோட்டைகளை அப்பகுதியில் வைத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் தொல் குடிகளுக்கு ஆதரவான பல கொள்கை முடிவுகளையும் எடுத்தது. தொல்குடிகளுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையேயான சிக்கலை தீர்ப்பதற்காகவும் அமெரிக்காவின் முழுஉரிமையை அப்பகுதியில் நிலைநாட்டவும் அமெரிக்க இராணுவத்தை அதிபர் சியார்ச் வாசிங்டன் அப்பகுதிக்கு அனுப்பினார். அமெரிக்க இராணுவம் பயிற்சிபெறாத வீரர்களை கொண்டிருந்தது மேலும் 2வது வரிசை துணை இராணுவப் படையினரும் அதே அளவில் பயிற்சிபெறாத வீரர்களை கொண்டிருந்தனர். இதனால் அமெரிக்க இராணுவத்தினர் பெரிய தோல்விகளை சந்தித்தனர். ஆர்மர் போர்முனை (1790), புனித கிளேர் தோல்வி (1791) ஆகியவவை அவற்றில் முதன்மையானவை ஆகும். இப்போர்களில் அமெரிக்க தொல் குடிகள் பாரிய வெற்றிகளை பெற்றனர். அமெரிக்க தரப்பில் சற்றேறக்குறைய 1000 வீரர்கள் உயிரிழந்தனர். எதிரிகளை விட அதிகளவில் அமெரிக்கர்கள் இழப்புகளை சந்தித்தனர்.
புனித கிளேர் தோல்விக்கும் பின் வாசிங்டன் புரட்சிப் போர் நாயக வீரர் செனரல் அந்தோனி வய்னே என்பவரை சண்டையிடம் படையினரை ஒழுங்குபடுத்தி பயிற்சியளிக்கும் படி ஆணையிட்டார். வய்னே புதிய ஐக்கிய அமெரிக்கா வீரர்களின் படையணிக்கு 1793ன் பிற்பகுதியில் தலைமை ஏற்றுக் கொண்டார். 1794ல் வீழும் வெட்டுபட்ட மரம் (Battle of Fallen Timbers) என்ற போரில் இவர் வீரர்கள் தொல் குடிகளுக்கு எதிராக பெரும் வெற்றி பெற்றனர். தோற்கடிக்கப்பட்ட தொல்குடிகள் பெரும் நிலப்பரப்பை அமெரிக்கர்களிடம் 1795ல் ஏற்பட்ட கிரீன்வில் உடன்படிக்கையின் படி கையளித்தனர். தற்கால பெரும்பகுதி ஒகையோ அதில் அடக்கம்.
ஐக்கிய அமெரிக்கா உருவாவதற்கு முன்பே பல ஆண்டுகளாக மிசிசிப்பி ஆற்றின் கிழக்கு பகுதியிலும் அமெரிக்க பேரேரிரிகளின் தெற்கிலும் உள்ள நிலப்பரப்பில் சண்டை நிகழ்ந்து வந்தது.
1608ல் பிராஞ்சு தேடலறிஞர் சாமுவேல் சாம்பிளைய்ன் அமெரிக்க தொல்குடிகளான கியுரன் மக்களுடன் புனித லாரன்சு ஆற்றங்கரையில் ஐந்து நாடுகள் என்ற தொல்குடிகளுக்கு எதிராக தங்கி வசித்தார். இப்பகுதி தற்காலத்தைய வடமேற்கு நியுயார்க் மாநிலம் ஆகும். இவர் கியுரன் மக்களுடன் தங்கியதால் இர்க்குவாய் (ஐந்து நாடுகள்) தொல்குடிகள் பிரான்சுக்கு எதிரான மனநிலை கொண்டனர் இதனால் 1626ல் அட்சன் (Hudson) ஆற்றில் விலங்குகளின் மென்மயிர் வணிகத்தில் அவர்கள் நெதர்லாந்து வணிகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பிரெஞ்சுகாரர்களைவிட நெதர்லாந்துகாரர்கள் குறைந்த விலையில் துப்பாக்கி, கத்தி போன்ற பொருட்களை மென்மயிர்களுக்கு மாற்றாக கொடுத்தனர்.
மேம்பட்ட ஆயதங்கள் பெற்ற ஐந்து நாடுகள் தொல்குடிகள் கியுரன் உட்பட மற்ற அமெரிக்க தொல்குடிகளை பீவர் போரின் மோது ஒகையோ பள்ளத்தாக்கிலிருந்து விரட்டிவிட்டனர். மற்ற அமெரிக்க தொல்குடிகள் மென்மயிர் வணிகத்துக்கு போட்டியாக இருந்தது இதற்கு காரணமாகும். மற்ற அமெரிக்க தொல்குடிகள் ஐரோப்பியர்களின் தோற்று நோய்க்கெதிராக நோய் தடுப்பாற்றல் இல்லாத காரணத்தால் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஐந்து நாடுகள் நவீன ஆயுதங்களை போரில் பயன்படுத்தியதால் இறப்பு அதிகளவில் இருந்தது இதன் காரணமாக பீவர் போரை வரலாற்று அறிஞர்கள் வட அமெரிக்காவின் மோசமான போரில் ஒன்று குறிப்பிடுகின்றனர்.
1664ல் ஐந்து நாடுகள் பிரித்தானியாவுடன் அதிக வணிக தொடர்பு கொண்டனர். பின்னால் பிரித்தானியர்கள் நியு நெதர்லாந்தை டச்சுக்காரர்களிடம்(நெதர்லாந்துகாரர்கள்) இருந்து கைப்பற்றினார்கள். பின்னால் நியு நெதர்லாந்து நியு யார்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
17 & 18ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியர்களும் பிரெஞ்காரர்களும் ஐந்து நாடுகள் தொல்குடிக்கு போட்டியாக ஒகையோ நாட்டுக்கு உரிமை கோரினார்கள். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரித்தனும் பிரான்சும் அப்பகுதி தொல்குடிகளுடன் வணிகம் செய்ய மென் மயிர் வணிகர்களை அனுப்பின. வணிகர்களுக்கும் தொல்குடிகளுக்கும் விரைவாக சண்டை மூண்டது. பிரெஞ்சு-இந்திய போரானது ஏழாண்டுப் போரின் நீட்சியா நடந்தது. அப்போதைய வணிக தேவையை முன்னிட்டு தொல்குடிகள் பிரித்தனுடனோ பிரான்சுடனோ இணைந்து கொண்டார்கள். அவர்கள் தொல்குடிகளுடனும் காலனிவாதிகளுடனும் போரிட்டார்கள். போரில் பிரான்சு தோற்றதை தொடர்ந்து 1763அம் ஆண்டு ஏற்பட்ட பாரிசு உடன்படிக்கையின் படி பிரான்சு அப்பகுதியில் தன் உரிமைகளை துறந்தது.
பிரான்சு தன் உரிமைகளை துறந்தாலும் பிரித்தானிய அப்பகுதியிலிருந்த பல தொல்குடிகளிடம் இருந்து அப்பகுதியின் உரிமைக்கு போட்டியை சந்தித்தது. பிரித்தானிய காலனிவாதிகள் அப்பகுதியில் குடியேறியது தொல்குடிகளை ஆத்திரமடையச் செய்தது. 1763-66 காலப்பகுதியில் நடந்த போன்டியாக் போரில் தொல்குடிகள் பிரித்தானியாவின் பல கோட்டைகளை எரித்தனர். தொல்குடிகளால் வடமேற்கு பகுதியில் குடியேறியவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள் பலர் துரத்தப்பட்டார்கள். பிரித்தன் அதிகளவு படை வீரர்களை பிட் கோட்டைக்கு அனுப்பியது. இறுதியில் தொல்குடிகள் புசி ரன் போரில் தோற்கடிக்கப்பட்டார்கள். போர் முடிவது போல் இருந்தாலும் எப்பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை.
ஆப்பலேச்சிய மலைத்தொடரின் மேற்கு பகுதியில் உள்ள தொல்குடிகளுடன் அமைதியை உருவாக்கும் பொருட்டு பிரித்தன் அதிகாரபூர்வமாக வடமேற்கு பகுதி குடியேற்றத்தை நிறுத்தியது. 1774, யூன் 22 அன்று பிரித்தானிய நாடாளுமன்றம் கியூபெக் சட்ட வரைவு மூலம் வடமேற்கு பகுதிகளை கியூபெக் மாகாணத்துடன் இணைத்தது. சில காலனிகள் இப்புதிய நிலத்திற்கு நகர முடிவு செய்திருத்தன. அவர்கள் இச்சட்ட வரைவு தாங்க இயலாத ஒன்று என்று தெரிவித்தன. இதுவும் அமெரிக்க புரட்சிக்கு காரணிகளில் ஒன்றாக இருந்தது.
அமெரிக்க புரட்சியின் போது அமெரிக்க தொல்குடிகளின் ஐந்து நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நான்கு தொல்குடிகள் குடியேற்றவாதிகளுக்கு (காலணிவாதிகள்) எதிராக பிரித்தானியவுடன் இணைந்து போரிட்டார்கள். ஓரிசுகனி போரிலும், பென்சில்வேனியாவிலுள்ள வயோமிங் போரிலும் நியுயார்க்கின் சரடோகா, செர்ரி பள்ளத்தாக்கு , மோவாக் பள்ளத்தாக்கு போரிலும் போரிட்டார்கள்.
1779இல் பிரித்தானியர்கள் அமெரிக்காவின் தெற்கில் நாட்டம் செலுத்திய போது ஜார்ஜ் வாசிங்டன் ஐந்து நாடுகள் கூட்டமைப்பு மீது படையெடுத்து நியுயார்க்கிலுள்ள அவர்களின் கிராமங்களை அழிக்குமாறு செனரல் ஜான் சல்லிவனுக்கு கட்டளையிட்டார். 5000 படைவீரர்களுடன் சென்ற அவர் கூட்டமைப்பின் 40 கிராமங்களை அழித்ததோடு அவர்கள் சேகரித்து வைத்திருந்த தானியங்களையும் அழித்தார். இதனால் அவ்வாண்டின் பனிக்காலத்தில் பஞ்சம் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலர் பலியாயினர். ஐந்து நாடுகள் கூட்டமைப்பின் குடும்பங்களில் பலர் நயாக்கரா கோட்டை பகுதிக்கும் கனடாவின் மற்ற பகுதிகளுக்கும் சென்று பனிக்காலத்தை பசியோடும் குளிரோடும் கழித்தனர்.
1778இல் அமெரிக்க செனரல் இச்சியார்ச் கிளார்க்கும் அவரின் 178 வீரர்களும் ஒகையோ ஆற்றங்கரையில் இருந்த பிரித்தானிய கோட்டைகளை பிடித்தனர். இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவிற்கு ஆற்றின் கட்டுப்பாடு வந்தது, அமெரிக்கா ஒகையோ பகுதியின் வடக்கில் இருந்த நிலப்பரப்பு முழுவதையும் உரிமை கோரியது. 1779ல் பிரித்தனுடன் இணைந்த தொல்குடிகள் டேவிட் ராபர்ட் அவர்களின் குழு வீரர்கள் மீது சின்சினாட்டியில் உள்ள பென்கெம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இந்தாக்குதலில் சில வீரர்கள் மட்டும் தப்பினர்.
கென்டக்கியில் உள்ள புளு லிக்சு போரே அமெரிக்க புரட்சியாளர்களின் இறுதி போராகும். லிக்கிங் ஆற்றில் 50 பிரித்தானியர்களின் புரவிப்படை வீரர்களும் 300 தொல்குடிகளும் அவர்களை தொடர்ந்த 182 கென்டக்கி வீர்ர்களை பதுங்கி தாக்கி தோற்கடித்தனர்.
1783ஆம் ஆண்டின் பாரிசு உடன்படிக்கையின் படி பிரித்தானியா வடமேற்கு பகுதிகளின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிற்கு அளித்தது. பிரித்தானியர்களின் நண்பர்களான ஐந்து நாடுகள் கூட்டமைப்பு தொல்குடிகள் அமெரிக்காவின் நியுயார்க் மாநிலத்தில் உள்ள நிலங்களை விட்டுக்கொடுக்கும் படி நேர்ந்தது. அவர்களின் பெரும்பாலானவர்கள் பழைய கியூபெக் மாகாணத்துக்கு குடியேறினர். (தற்போதைய தெற்கு ஒண்டாரியோ)
ஒகையோ நிலப்பகுதி பல மாநிலங்களில் இருந்ததால் கனெடிகட், வர்ஜீனியா, நியு யார்க், மாசெசூசெட்ஸ் ஆகியவை உரிமை கோரின. இங்கிருந்த லிங்கோ, சாவ்நீ, வினெபெ முதலிய பல அமெரிக்க தொல்குடிகளும் அப்பகுதிக்கு உரிமை கோரினார்கள். பிரித்தானியா 1781இல் யார்க்டவுன் போரில் தோல்வியை சந்தித்திருந்தாலும் அவர்களின் நண்பனான தொல்குடிகள் முற்றாக தோற்கடிக்கப்படவில்லை. தொல்குடிகளின் தலைவர்கள் லிட்டில் டர்டில், புளு ஜாக்கெட் போன்றோர் ஒகையோ ஆற்றுக்கு வடமேற்கு பகுதியை அமெரிக்கா உரிமை கோருவதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேரேரி பகுதிகளின் கோட்டைகள் இன்னும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்மூலம் அவர்கள் தொல்குடிகளுடன் வணிகத்தை மேற்கொண்டார்கள், மென் மயிர்களுக்கு மாற்றாக ஆயுதங்களை கொடுத்தார்கள். பிரித்தானிய அரசில் சிலர் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள பகுதி இருநாடுகளுக்கும் உரிமையில்லாமல் தொல்குடிகளிடமே இருக்கவேண்டும் என விரும்பினாலும் பலர் உடனடியாக அப்பகுதியிலிருந்து படைகளை விலக்குவது தொல்குடிகளுடன் புதிய போரை உருவாக்கும் என்றனர். 1794இல் ஜே உடன்படிக்கையின் படி அதிகாரபூர்வமாக பிரித்தானியர்கள் பேரேரிகள் பகுதியிலுள்ள கோட்டைகளில் இருந்து விலக உடன்பட்டாலும் 1812 போர் வரை அதிகாரபூர்வமற்ற முறையில் பிரித்தானியர்கள் அப்பகுதியிலிருந்து விலகவில்லை. ஒகையோ பகுதியின் கிழக்கு பகுதியை வாங்கும் விதமாக 1785இல் அமெரிக்க காங்கிரசுக்கும் பல தொல்குடிகளுக்கும் ஏற்பட்ட மெக்கின்டோசு உடன்படிக்கை ஏற்பட்டது. காங்கிரசால் 1787ல் இயற்றப்பட்ட வடமேற்கு அவசரச்சட்டம் அமெரிக்க சட்டத்தின் கீழ் தொல்குடிகளுக்கு அவர்கள் வாழும் நிலத்திற்கான உரிமையை கொடுத்தது. குடியேறிகளுக்கும் தொல்குடிகளுக்கும் உள்ள சிக்கலை தீர்ப்பதற்காக 1779இல் கார்மர் கோட்டையில் நடந்த உடன்படிக்கை பேச்சுவார்த்தை தோல்வியுற்றது சிக்கலை மேலும் பெரிதாக்கியது.
பிரெஞ்சு குடியேற்ற காலத்தில் தொல்குடிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக மேற்கு கூட்டமைப்பு உருவாகியது. அமெரிக்க புரட்சியின் போது இக்கூட்டமைப்பு புதுபிக்கப்பட்டது. 1785ல் இலையுதிர் காலத்தின் போது டெட்ராய்ட் கோட்டையில் இக்கூட்டமைப்பு முதன்முறை இணைந்து தனிப்பட்ட குடிகள் அல்லாமல் கூட்டமைப்பே அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என அறிவித்தது. கூட்டமைப்பு ஒகையோ ஆறே அவர்களுக்கும் அமெரிக்க குடியேறிகளுக்கும் இடையேயான எல்லை என அறிவித்தது. கூட்டமைப்பில் கூரன் தொல்குடிகளே கூட்டமைப்பிற்கு மூத்தவர்கள் ஆவர். மயாமி, சவான்கி தொல்குடிகளும் கூட்டமைப்பிற்கு நிறைய போர் வீரர்களை அனுப்பினார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.