லோகன்
ஸ்பானிஷ் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
லோகன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான வால்வரின் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் மகிழ்கலை, டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட், ஹட்ச் பார்க்கர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் தயாரித்து[4][5] 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது எக்ஸ்-மென் என்ற திரைப்படத் தொடரின் பத்தாவது படமும் மற்றும் வோல்வரின் (2009), வோல்வரின்-2 (2013) போன்ற திரைபடத்தொடரின் இறுதி படமும் ஆகும்.
லோகன் | |
---|---|
இயக்கம் | ஜேம்ஸ் மங்கோல்ட் |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | மார்கோ பெல்ட்ராமி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜான் மதிசன் |
படத்தொகுப்பு |
|
கலையகம் |
|
விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 17, 2017 (2017-02-17) (பெர்லின்) மார்ச்சு 3, 2017 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 137 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $97–127 மில்லியன்[2][3] |
மொத்த வருவாய் | $619 மில்லியன் |
இந்த திரைப்படத்தை 'ஜேம்ஸ் மங்கோல்ட்' என்பவர் இயக்க,[6] ஹியூ ஜேக்மன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ரிச்சர்ட் இ. கிராண்ட், பாய்ட் ஹோல்ப்ரூக், ஸ்டீபன் மெர்ச்சண்ட், டஃப்னே கீன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[7][8][9] லோகன் என்ற படம் மார்ச்சு 3, 2017 அன்று வெளியாகி உலகளவில் 619 மில்லியன் வசூலித்தது.