லீலாவதி கோவிந்தசாமி
From Wikipedia, the free encyclopedia
டத்தோ லீலாவதி கோவிந்தசாமி (ஆங்கிலம்: G. Leela Rama; மலாய்: Leelavathi Govindasamy; சீனம்: 利拉瓦蒂 文达沙米); 6 ஆகத்து 1944 - 9 மார்ச் 2017) என்பவர் 1995 முதல் 1999 வரை மலேசிய நாடாளுமன்றத்தின், சிலாங்கூர் காப்பார் தொகுதியின் (Kapar Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்த மலேசிய அரசியல்வாதி ஆகும்.
விரைவான உண்மைகள் சிலாங்கூர் காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னையவர் ...
லீலாவதி கோவிந்தசாமி Yang Berbahagia Datuk Leelavathi Govindasamy | |
---|---|
சிலாங்கூர் காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1995–1999 | |
முன்னையவர் | எம். மகாலிங்கம் (மஇகா-பாரிசான்) |
பின்னவர் | கோமளா தேவி பெருமாள் (மஇகா-பாரிசான்) |
பெரும்பான்மை | 18,759 (1995) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 ஆகத்து 1944 |
இறப்பு | மார்ச்சு 9, 2017(2017-03-09) (அகவை 72) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | மலேசிய இந்திய காங்கிரசு |
துணைவர் | ராமசாமி முனியாண்டி |
பிள்ளைகள் | 2 |
கல்வி | மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி, பிரிக்பீல்ட்சு, மலேசியா; குயின் மேரி கல்லூரி கோயம்புத்தூர், இந்தியா |
முன்னாள் கல்லூரி | கோவை மருத்துவக் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | மருத்துவர் |
மூடு
பாரிசான் நேசனல் கூட்டணியின் (Barisan Nasional) (BN) உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய காங்கிரசு (Malaysian Indian Congress) (MIC) கட்சியின் சார்பில் 1995-ஆம் ஆண்டு மலேசியாவின் 9-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசிய இந்தியப் பெண்மணி (First Malaysian Indian Lady) எனும் பெருமை இவரைச் சேர்கின்றது. அந்தத் தேர்தலில் இவர் 18,759 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.[1]