ரூபே
அட்டைகாசு / From Wikipedia, the free encyclopedia
ரூபே (RuPay) என்பது இந்திய தேசிய கட்டண நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு கட்டண அட்டை திட்டமாகும்.[1] இது உருவாக்கப்பட்டதன் நோக்கமானது இந்திய ரிசர்வ் வங்கியின் விருப்பமான உள்நாட்டு, திறந்தநிலை, பன்முக கட்டண அமைப்பை ஏற்படுத்துவதாகும். ரூபே அனைத்து இந்திய வங்கிகளுக்கும், நிதி நிர்வாகங்களுக்கும் மின்வழி நிதி மாற்றம் வசதியை அந்நிய நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக அளிக்கிறது. NPCI ஆனது Discover Financial Service என்ற உலகளாவிய அமைப்புடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய மின்வழி நிதி மாற்றம் என்ற வசதியை அளிக்கிறது.
விரைவான உண்மைகள் நிறுவுகை, சேவை வழங்கும் பகுதி ...
![]() | |
நிறுவுகை | 26 மார்ச் 2012 |
---|---|
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
இணையத்தளம் | ரூபே |
மூடு