![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/54/KTM_Rantau_Panjang_02.jpg/640px-KTM_Rantau_Panjang_02.jpg&w=640&q=50)
ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Rantau Panjang Railway Station மலாய்: Stesen Keretapi Rantau Panjang) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டம், ரந்தாவ் பாஞ்சாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் ரந்தாவ் பாஞ்சாங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. அத்துடன் இந்த நிலையம் கோத்தா பாரு, குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது.
விரைவான உண்மைகள் ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம் Rantau Panjang Railway Station}, பொது தகவல்கள் ...
(முன்னாள் சேவை) தாய்லாந்து தொடருந்து சேவை கேடிஎம் இண்டர்சிட்டி | ||||||||||||||||
![]() ரந்தாவ் பாஞ்சாங் தொடருந்து நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | ரந்தாவ் பாஞ்சாங், பாசிர் மாஸ் மாவட்டம், கிளாந்தான், மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 6°01′12″N 101°58′33″E | |||||||||||||||
உரிமம் | ![]() | |||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | |||||||||||||||
நடைமேடை | 1 தீவு மேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1921 | |||||||||||||||
மறுநிர்மாணம் | 2008 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மூடு
இந்த நிலையம் கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தின் முதன்மைச் சாலையான ஜாலான் பெசார் சாலைக்கு அருகே அமைந்துள்ளது. ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டு உள்ளது.