![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/The_Temples_of_Raghunath%252C_Jammu%252C_India%252C_ca.1875-ca.1940_%2528imp-cswc-GB-237-CSWC47-LS10-011%2529.jpg/640px-The_Temples_of_Raghunath%252C_Jammu%252C_India%252C_ca.1875-ca.1940_%2528imp-cswc-GB-237-CSWC47-LS10-011%2529.jpg&w=640&q=50)
ரகுநாத் கோயில்
From Wikipedia, the free encyclopedia
இரகுநாத் கோயில் (Raghunath Temple) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழு சன்னதிகள் கொண்டது. ஏழு சன்னதிகளுக்கும் தனித்தனி கோபுர விமானங்கள் உள்ளது.
விரைவான உண்மைகள் ரகுநாத் கோயில், ஆள்கூறுகள்: ...
ரகுநாத் கோயில் | |
---|---|
![]() ரகுநாத் கோயில் வளாகம் | |
ஜம்முவில் ரகுநாத் கோயில் | |
ஆள்கூறுகள்: | 32.731°N 74.8638°E / 32.731; 74.8638 |
பெயர் | |
பெயர்: | ரகுநாத் மந்திர் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம்: | ஜம்மு மாவட்டம் |
அமைவு: | ஜம்மு நகரம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இராமர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | 7 |
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | 7 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1835–1860 |
அமைத்தவர்: | மகாராஜா குலாப் சிங் மற்றும் மகாராஜா ரண்பீர் சிங், ஜம்மு காஷ்மீர் இராச்சியம் |
மூடு
இக்கோயில் மூலவர் இராமராக இருப்பினும், சீதை, விஷ்ணு, கிருஷ்ணர், அனுமார், சிவன், பிரம்மா, துர்கை, பார்வதி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உண்டு.
இக்கோயில் கட்டும் பணி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா குலாப் சிங்கால் 1835-இல் துவக்கப்பட்டு, அவரது மகன் மகாராஜா ரண்பீர் சிங் என்பவரால், 1860-இல் கட்டிமுடிக்கப்பட்டது.
லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் இரகுநாத் கோயிலில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதிலும், எறிகுண்டுகளை வீசித் தாக்கியதிலும், பக்தர்கள் பலர் உயிரிழந்தனர்.