மு. க. இசுடாலின் அமைச்சரவை
From Wikipedia, the free encyclopedia
மு. க. ஸ்டாலின் அமைச்சரவை (M. K. Stalin ministry)[1] என்பது 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு அமைக்கப்பட்டது ஆகும். இந்த அமைச்சரவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7 மே 2021 அன்று பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சராக இடம்பெற்றிருந்த 15 பேர் அமைச்சர்களாக இருந்தனர். தமிழகத்தின் 21வது முதல்வராக, 8வது நபராக மு. க. ஸ்டாலின் பதவியேற்றார்.[2]
விரைவான உண்மைகள் உருவான நாள், மக்களும் அமைப்புகளும் ...
உருவான நாள் | 7 மே 2021 |
---|---|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | மு. க. ஸ்டாலின் |
நாட்டுத் தலைவர் | ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (7 மே – 10 செப்டம்பர் 2021) ஆர். என். ரவி (10 செப்டம்பர் 2021 –) |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 35 |
சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை அரசு 159 / 234 (68%) |
எதிர் கட்சி | அதிமுக |
எதிர்க்கட்சித் தலைவர் | எடப்பாடி க. பழனிசாமி |
வரலாறு | |
தேர்தல்(கள்) | 2021 |
Legislature term(s) | 5 வருடம் |
முந்தைய | எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை |
மூடு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் 14, டிசம்பர் 2022 அன்று அமைச்சராகப் பதவியேற்றார். அத்துடன் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன.[3]