மலேசிய தொடருந்து போக்குவரத்து
From Wikipedia, the free encyclopedia
மலேசிய தொடருந்து போக்குவரத்து (ஆங்கிலம்: Rail Transport in Malaysia மலாய்: Pengangkutan Rel Malaysia); சீனம்: 马来西亚铁路运输) என்பது மலேசியாவின் தொடருந்துகள் போக்குவரத்து சேவையைக் குறிப்பிடுவதாகும். இந்த தொடருந்து போக்குவரத்து 1885-ஆம் ஆண்டு சூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் மலேசிய தொடருந்து போக்குவரத்துRail Transport in Malaysia Pengangkutan Rel Malaysia, கண்ணோட்டம் ...
மலேசிய தொடருந்து போக்குவரத்து Rail Transport in Malaysia Pengangkutan Rel Malaysia | |
---|---|
கண்ணோட்டம் | |
நிகழ்வு இயலிடம் | மலேசியா |
முதல் சேவை | சூன் 1, 1885 (1885-06-01) |
நடத்துனர்(கள்) |
|
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | 71,640,357 (2021) |
வழி | |
ஓடும் தூரம் | 2,783 km (1,729 mi) |
தொழில்நுட்பத் தரவுகள் | |
பாதை | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) |
மூடு
கனரக தொடருந்துகள் பெரும்பாலும் நகரங்களுக்கு இடையிலான சேவைகள்; சரக்கு போக்குவரத்து; மற்றும் சில நகர்ப்புறப் பொது போக்குவரத்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நகர்ப்புற பொதுப் போக்குவரத்திற்காக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்கள் (Rapid Transit Rails) பயன்படுத்தப்படுகின்றன.