![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/DS_Dr_Dzulkefly_Ahmad.jpg/640px-DS_Dr_Dzulkefly_Ahmad.jpg&w=640&q=50)
மலேசிய சுகாதார அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய சுகாதார அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Foreign Affairs of Malaysia; மலாய்: Menteri Luar Negeri Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் மலேசிய சுகாதார அமைச்சர் Minister of Health of Malaysia Menteri Kesihatan Malaysia, சுருக்கம் ...
மலேசிய சுகாதார அமைச்சர் Minister of Health of Malaysia Menteri Kesihatan Malaysia | |
---|---|
![]() | |
மலேசிய சுகாதார அமைச்சு | |
சுருக்கம் | MOH / KKM |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1955 (1955) |
முதலாமவர் | லியோங் இயூ கோ (Leong Yew Koh) |
இணையதளம் | www |
மூடு
மலேசிய சுகாதார அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய சுகாதார அமைச்சு என்பது மலேசியாவில் மக்களின் உடல்நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசாங்க அமைச்சு ஆகும். இந்த அமைச்சு பொது சுகாதாரம் உட்பட அனைத்து வகை பொதுநலம் தொடர்பான துறைகளைக் கண்காணிக்கின்றது.
அவற்றுள் முக்கியமாக மலேசியாவில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கூடங்கள், மருத்துவ ஆய்வுகள், மருந்துகள், பல் மருத்துவம், உணவுச் சுகாதாரம், சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலன் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது. இதன் தலைமையகம் புத்ராஜெயாவில் உள்ளது.