மலேசிய பேரரசரின் துணைவியார் From Wikipedia, the free encyclopedia
மலேசிய அரசி (ஆங்கிலம்: Queen of Malaysia; மலாய்: Raja Permaisuri Agong; ஜாவி: راج ڤرمايسوري اݢوڠ) என்பவர் மலேசிய அரசியலமைப்பின் கீழ் மலேசிய மாமன்னராகப் பொறுப்பு வகிக்கும் மாட்சிமிகு மலேசிய பேரரசரின் துணைவியார் ஆவார்.
மாட்சிமிகு பேரரசி Queen of Malaysia Raja Permaisuri Agong | |
---|---|
மலேசிய அரசியாரின் சின்னம் | |
வாழுமிடம் | |
உருவாக்கம் | 31 ஆகத்து 1957 |
முதலாமவர் | துங்கு புவான் பெசார் குர்சியா நெகிரி செம்பிலான் அரசியார் குர்சியா |
இணையதளம் | istananegara.gov.my |
1957-ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு தன்னுரிமை பெற்ற போது, மலேசிய அரசர் பதவி உருவாக்கப்பட்டது. அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில், மாமன்னராகத் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், மலேசிய நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். மலேசிய அரசியலமைப்பின் கீழ் அவரின் துணைவியார் மலேசிய நாட்டின் பேரரசியாக அறியப்படுகிறார்.
மலேசியாவின் பேரரசியை *மாட்சிமிகு இராஜா பரமேசுவரி அகோங்* (ஆங்கிலம்: Her Majesty The Raja Permaisuri Agong; மலாய்: Kebawah Duli Yang Maha Mulia Raja Permaisuri Agong) என்று அழைப்பது வழக்கம். 'பரமேசுவரி' எனும் சொல், சமசுகிருத மொழிச் சொல்லான 'பரமேஸ்வரி' (परमेश्वरी) எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது.[1]
2024 சனவரி மாதம், மலேசிய அரசியை அழைக்கும் மரியாதை அழைமொழி மாட்சிமிகு இராஜா பரமேசுவரி அகோங் என மாற்றம் செய்யப்பட்டது.[2]
மலேசியப் பேரரசியை மரியாதையாக அழைக்கும் முறைப்பாடு, மலேசியாவில் மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பேரரசியை அழைக்கும் முறைகள்:
மலேசியாவின் ஒன்பது மாநிலங்களின் பரம்பரை ஆட்சியாளர்களிடையே ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒருவர் மலேசிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஓர் ஆட்சியாளர் யாங் டி பெர்துவான் அகோங் எனும் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரின் மனைவியும் மலேசிய அரசியலமைப்பின் கீழ் இராஜா பரமேசுவரி அகோங் எனும் மலேசிய அரசியார் ஆகிறார்.[3]
இராஜா பரமேசுவரி அகோங் எனும் பட்டத்தை வைத்திருப்பவர் ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாறுகிறார். இருப்பினும் இந்த மாற்றம் மலேசிய பேரரசரின் மரணம் அல்லது பதவித்துறப்பு நடைபெற்ற பின்னரும் நிகழலாம்.
இராஜா பரமேசுவரி அகோங்கிற்கு (மலேசிய அரசி) மலேசியாவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட பங்குகள் எதுவும் இல்லை. மலேசிய பேரரசருடன் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு அரசு பயணங்களில் கலந்து கொள்வார். அத்துடன் மலேசியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள்; மற்றும் அவர்களின் துணைவியார்களுக்கு வழங்கப்படும் விருந்தளிப்பு நிகழ்ச்சிகளில் பேரரசியார் கலந்து கொள்வார்.
மலேசிய அரசியலமைப்பின் 34-ஆவது பிரிவு; மலேசிய அரசி எந்தவொரு நியமனப் பொறுப்புகள் வகிப்பதையோ அல்லது எந்தவொரு வணிக நிறுவனத்திலும் தீவிரமாக ஈடுபடுவதையோ தடைசெய்கிறது. இருப்பினும், மலேசிய அரசிக்கு சட்டப்பூர்வமாக ஆண்டு ஊதியம் மற்றும் படிச்செலவுகள் வழங்கப்படுகின்றன. அவரின் செலவுகள் அனைத்தையும் மலேசிய அரசு ஏற்றுக் கொள்கிறது.
மலேசிய பேரர என்ற பட்டத்தை வைத்திருப்பவரின் கணவர் இறந்துவிட்டால், மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் தகுதியைப் பெறுகிறார்.[4]
# | பெயர் | மாநிலம் | பதவி தொடக்கம் | பதவி முடிவு | பேரரசர் |
---|---|---|---|---|---|
1 (I) | நெகிரி செம்பிலான் அரசி துவாங்கு குர்சியா | நெகிரி செம்பிலான் | 31 ஆகஸ்டு 1957 | 1 ஏப்ரல் 1960 | நெகிரி துவாங்கு அப்துல் ரகுமான் |
2 (II) | சிலாங்கூர் சுல்தானா அம்புவான் ஜெம்மா | சிலாங்கூர் | 14 ஏப்ரல் 1960 | 1 செப்டம்பர் 1960 | சிலாங்கூர் இசாமுடின் ஆலாம் சா |
3 (III) | பெர்லிஸ் அரசி பட்ரியா | பெர்லிஸ் | 21 செப்டம்பர் 1960 | 20 செப்டம்பர் 1965 | பெர்லிஸ் துவாங்கு சையது புத்ரா |
4 (IV) | திராங்கானு சுல்தானா இந்தான் சகரா | திராங்கானு | 21 செப்டம்பர் 1965 | 20 செப்டம்பர் 1970 | திராங்கானு இசுமாயில் நசிருடின் சா |
5 (V) | கெடா சுல்தானா பகியா | கெடா | 21 செப்டம்பர் 1970 | 20 செப்டம்பர் 1975 | கெடா சுலதான் அப்துல் ஆலிம் |
6 (VI) | கிளாந்தான் சுல்தானா சைனாப் | கிளாந்தான் | 21 செப்டம்பர் 1975 | 29 மார்ச் 1979 | கிளாந்தான் சுல்தான் யகயா பெட்ரா |
7 (VII) | பகாங் சுல்தானா அம்புவான் | பகாங் | 26 ஏப்ரல் 1979 | 25 ஏப்ரல் 1984 | பகாங் சுல்தான் அகமட் சா |
8 (VIII) | ஜொகூர் சுல்தானா சனரியா | ஜொகூர் | 26 ஏப்ரல் 1984 | 25 ஏப்ரல் 1989 | ஜொகூர் சுல்தான் இசுகந்தர் |
9 (IX) | பேராக் சுல்தானா பரமேசுவரி பைனுன் | பேராக் | 26 ஏப்ரல் 1989 | 25 ஏப்ரல் 1994 | பேராக் சுல்தான் அசுலான் சா |
10 (X) | நெகிரி செம்பிலான் அம்புவான் நசிகா | நெகிரி செம்பிலான் | 26 ஏப்ரல் 1994 | 25 ஏப்ரல் 1999 | நெகிரி செம்பிலான் துங்கு ஜாபார் |
11 (XI) | சிலாங்கூர் சுல்தானா சித்தி ஆயிசா | சிலாங்கூர் | 26 ஏப்ரல் 1999 | 21 November 2001 | சிலாங்கூர் சுல்தான் சலாவுடீன் |
12 (XII) | பெர்லிஸ் அரசி துங்கு பவுசியா | பெர்லிஸ் | 13 டிசம்பர் 2001 | 12 டிசம்பர் 2006 | பெர்லிஸ் இராஜா சிராஜுடீன் |
13 (XIII) | திராங்கானு சுல்தானா நூர் சகிரா | திராங்கானு | 13 டிசம்பர் 2006 | 12 டிசம்பர் 2011 | திராங்கானு சைனல் ஆபிதீன் |
14 (XIV) | கெடா சுல்தானா அஜா அமீனா | கெடா | 13 டிசம்பர் 2011 | 12 டிசம்பர் 2016 | கெடா சுலதான் அப்துல் ஆலிம் 1 |
15 (XV) | —2 | கிளாந்தான் | — | கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது | |
16 (XVI) | பகாங் சுல்தானா துங்கு அசிசா | பகாங் | 31 சனவரி 2019 | 30 சனவரி 2024 | பகாங் சுல்தான் அப்துல்லா |
17 (XVII) | ஜொகூர் சுல்தானா சரித் சோபியா | ஜொகூர் | 31 சனவரி 2024 | Incumbent | ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.